ஞானப் பல் வலி | Wisdom tooth pain in Tamil
மார்ச் 18, 2021 Lifestyle Diseases 1373 Viewsஞானப் பற்கள் 17 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களிடையே தோன்றுகிறது. இருப்பினும், சில நபர்களில் ஞான பல் மிகவும் தாமதமாக தோன்றக்கூடும். ஞான பற்கள் சரியான திசையில் வளராவிட்டால் கடுமையான வலிக்கு வழிவகுக்கிறது. ஞானப் பற்கள் வளரும் போது ஈறுகளைக் கிழிக்கின்றன. இதன் வளர்ச்சி நோய்த்தொற்றுகள், தீவிர வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பெரும்பாலும், நாம் உட்கொள்ளும் உணவுகள் பற்களில் குவிவதால், ஞான பற்கள் சரியாக துலக்கப்படாவிட்டால் அதில் பாக்டீரியாக்கள் வளரக்கூடும். இதன் விளைவாக சைனஸ் திசுக்களில் பல் சிதைவு, ஈறு தொற்று மற்றும் பல் சிதைவு ஆகிய அபாயங்கள் அதிகரிக்கின்றன. இது போன்ற சமயங்களில், சரியான சிகிச்சைகளைப் பெற ஒரு பல் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள். சிலரின் ஞானப் பற்கள் சரியான நிலையில் வளர்கின்றன, இதனால் எந்தவித பிரச்சனையும் ஏற்படுவதில்லை. இருப்பினும் சில கடுமையான சந்தர்ப்பங்களில், ஞானப் பற்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். இதனால் உண்டாகும் அறிகுறிகளைப் பொறுத்து, மருந்துவர்கள் இதற்கான சிகிச்சையைப் பரிந்துரைக்கப்படுகின்றன. இன்றையப் பதிவில், ஞான பற்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
- ஞானப் பல் வலிக்கு என்ன காரணம்? (What causes wisdom tooth pain in Tamil?)
- ஞானப் பல் வலியின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of wisdom tooth pain in Tamil?)
- ஞானப் பல் வலியை எவ்வாறு கண்டறிவது? (How to diagnose wisdom tooth pain in Tamil?)
- ஞானப் பல் வலிக்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for wisdom tooth pain in Tamil?)
- ஞானப் பல் வலியை எவ்வாறு தடுப்பது? (How to prevent wisdom tooth pain in Tamil?)
ஞானப் பல் வலிக்கு என்ன காரணம்? (What causes wisdom tooth pain in Tamil?)
பல்வேறு காரணங்களால் ஞானப் பல்லில் வலி ஏற்படக்கூடும், அவை:
- ஞானப் பல் வளைந்த முறையில் வளர்ந்தால், அது ஈறுகளில் வலியை ஏற்படுத்துகிறது. மற்றும் இதனால் ஏதேனும் தொற்று ஏற்பட்டால், அது மற்ற பற்களையும் பாதிக்கிறது.
- ஞானப் பல்லில் திடீரென அதிக வலி ஏற்படக்கூடும்.
- பெரும்பாலும், 17 முதல் 27 வயதுடைய மக்களின் ஈறுகளைக் கிழித்து பிற பற்களுக்கு அழுத்தம் கொடுத்த ஞான பல் வளர்கிறது.
- பின்வருன, ஞான பல் வலி காரணமாக ஏற்படும் பிரச்சினைகளாகும், அவை :
- ஈறு நோய்கள் உருவாகக்கூடும்.
- ஞானப் பல்லில் சிதைவு.
- பலவீனமான ஞான பல் பிற பற்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.
- ஞான பல், பல் தாடை எலும்புக்குள் ஒரு வகையான சவ்வு வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். இந்த சவ்வு போன்ற, திரவ சாக்குகள் எலும்புகளையும் பற்களைச் சுற்றியுள்ள நரம்புகளையும் பாதிக்கும் ஒரு நீர்க்கட்டியை உருவாக்குகிறது. மேலும், பற்களில் ஏதேனும் உணவுத் துகள்களின் குவிப்பு காரணமாகவும் தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. (மேலும் வாசிக்க- பல் வலிக்கான வீட்டு வைத்தியங்கள்)
ஞான பல் வலியின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of wisdom tooth pain in Tamil?)
ஞான பல் எந்த வலியையும் அறிகுறிகளையும் ஏற்படுத்தாது, ஆனால் ஞானப் பல்லில் தொற்று உண்டாகும் போது, அது வலியை ஏற்படுத்துகிறது மற்றும் பிற பற்களை சேதப்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், பின்வரும் சில அறிகுறிகள் காணப்படுகின்றன:
- உணவை மெல்லுவதற்குப் பயன்படுத்தப்படும் பற்களின் பின்னால் ஞான பல் வளர்கிறது. இதனால், தாடையின் பின்புற பகுதியில் வலியை உணர முடிகிறது.
- ஞானப் பல்லைச் சுற்றி வீக்கம் மற்றும் சிவத்தல் ஏற்படக்கூடும். இது உணவை மெல்லும் போது, சிரமத்திற்கு வழிவகுக்கிறது. சில சமயங்களில் வாயை திறக்கும் போதும் கூட வலியை உணர முடிகிறது.
- தாடை முனைகளில் வீக்கம் ஏற்படக்கூடும். மேலும், இது பற்கள் மற்றும் ஈறுகளை பாதிக்கிறது. இது வாய், முகம் மற்றும் தாடையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
- ஞானப் பல் அமைந்திருக்கும் நிலையின் காரணமாக, இதனைத் துலக்குவது கடினமானதாக அமைகிறது. இதனால் பாக்டீரியாக்கள் வளரகின்றன மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்துகிறது. (மேலும் படிக்க – பல் சிதைவு பிரச்சினை)
ஞான பல் வலியை எவ்வாறு கண்டறிவது? (How to diagnose wisdom tooth pain in Tamil?)
கடுமையான பல் வலி ஏற்பட்டால், பல் மருத்துவர் ஏராளமான பரிசோதனைகளை செய்கிறார். ஞானப் பல் வளைந்திருந்தால், பல்லின் சரியான நிலையை கண்டறிய எக்ஸ்ரே செய்யப்படுகிறது. அதன் பின், சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில கடுமையான சந்தர்ப்பங்களில், வலியைத் தீர்க்க அறுவை சிகிச்சை செய்யலாம். தீவிர வலி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டால், அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஞானப் பல்லை அகற்றுகின்றனர். இதன் மீட்பு இளைஞர்களிடயே வேகமாகவும் வயதானவர்களிடயே மெதுவாகவும் இருக்கிறது.
ஞான பல் வலிக்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for wisdom tooth pain in Tamil?)
- ஞானப் பல்லில் வலி ஏற்பட்டால், அதற்கு கட்டாயமாக சிகிச்சை தேவைப்படுகிறது. சில பொதுவான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டால், பல் மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். மேலும் சில கடுமையான சந்தர்ப்பங்களில், சிக்கல்களைத் தவிர்க்க அறுவை சிகிச்சையைப் பரிந்துரைக்கிறார்கள். ஞானப் பல், பல் வலியை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்தாமலும் இருக்கலாம். இது போன்ற நிலையில், பிற்காலத்தில் ஏற்படக்கூடிய வலி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது பல் மருத்துவருக்கு கடினமானதாக அமைகிறது. இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க, வழக்கமான பல் பரிசோதனைகள் அவசியமாகிறது.
- ஞானப் பல்லில் கடுமையான வலி ஏற்பட்டால், பல் மருத்துவர்கள் ஞானப் பல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்கின்றனர். இந்த அறுவை சிகிச்சைக்கு சில மணிநேரமே தேவைப்படுகிறது, மேலும் நோயாளி பல் மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்க வேண்டியதில்லை.
- ஞானப் பல்லுக்கு அருகிலுள்ள மற்றொரு பல்லில் கட்டி, ஈறு நோய், தொற்று அல்லது சேதம் ஏற்பட்டால் ஞானப் பல்லை அகற்ற வேண்டியது கட்டாயமானதாகும். (மேலும் வாசிக்க- பல்வலி பிரச்சனை)
ஞான பல் வலியை எவ்வாறு தடுப்பது? (How to prevent wisdom tooth pain in Tamil?)
ஞான பல் பல் வலியைத் தடுக்க பின்வரும் நடவடிக்கைகள் உதவுகின்றன:
- பின்னர் உருவாகக்கூடிய ஏதேனும் சிக்கலைக் கண்டறிய சில பொதுவான பல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
- இதன் அறிகுறிகள் உடனடியாக கண்டறியப்பட வேண்டும். சில பொதுவான பல் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம், இதனைக் கண்டறிய இயலும்.
- ஞான பல் வலி, தலைவலி, ஸ்பூட்டம் மற்றும் இரத்தப்போக்கு போன்ற கடுமையான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக ஒரு பல் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
- நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பல் துலக்குங்கள். மேலும், மவுத்வாஷைப் பயன்படுத்துங்கள்.
- உணவுத் துகள்கள் குவிவதைத் தடுக்க, உணவு உட்கொண்ட பின்னர் போதுமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- இனிப்புகளை அதிகமாக சாப்பிட வேண்டாம். (மேலும் படிக்க – இனிப்புகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்)
உங்களுக்கு ஞானப் பல் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், உடனடியாக ஒரு பல் மருத்துவரைத் (Dentist) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
பெங்களூரில் சிறந்த பல் மருத்துவர்
குர்கானில் சிறந்த பல் மருத்துவர்