கொரோனா வைரஸின் போது வீட்டிலிருந்தபடியே வேலை செய்தல் | Working from home during Coronavirus in Tamil
ஜனவரி 11, 2021 Lifestyle Diseases 466 Viewsதற்போது, உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்பட்டு இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இருப்பினும், நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த, மக்கள் தங்கள் வேலைகளை வீட்டிலிருந்தபடியே செய்கிறார்கள். இது தவிர, காலம் கொடையாக வழங்கியுள்ள இணையத்தளத்தின் பயன்கொண்டு வீடியோ அழைப்புகள் மூலம் தங்கள் பணி தொடர்பான சந்திப்புகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு, பணிகளை மேற்கொள்வதினால் மக்களிடயே சமூக இடைவெளி பராமரிக்கப்படுகிறது. மேலும், மக்கள் தங்களை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. வீட்டிலிருந்து பணிபுரியும் போதும் உங்கள் மேசை, மடிக்கணினி விசைப்பலகை, கைப்பேசி ஆகியவற்றை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் கைகளை சுத்தப்படுத்த வேண்டிய தேவை இருக்காது. தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் சில நாட்களிலேயே வேகமாக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இவர்களில் 7000 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் மற்றும் 1000 பேர் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பொதுமுடக்கம் முன்னதாகவே பிறப்பிக்கப்பட்டதால் நோய் தொற்று பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. எனினும், பொதுமுடக்கத்தின் நீட்டிப்பு காரணமாக, இந்தியாவின் பொருளாதாரம் பேரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் அரசாங்கம் சில அலுவலகங்களை மீண்டும் திறக்க அனுமதித்திக்கிறது. இருப்பினும், சமூக இடைவெளியையும், பொது தூய்மையையும் பராமரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் அதிகம் பரவிவரும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் (containment zone) வாழும் சிலர், வீட்டிலிருந்தபடியே அவர்கள் பணிகளை செய்து வருகின்றனர். இருப்பினும், சிலர் மற்ற குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருக்கும்போது, அலுவலக பணிகளை எவ்வாறு செய்வது என்று சிந்திக்கின்றனர். கொரோனா வைரஸில் வீட்டிலிருந்தபடியே அலுவலக பணிகளை எவ்வாறு செய்வது, என்று குழம்பும் உங்களுக்கு சில உதவிக்குறிப்புகளை இந்தப் பதிவின் மூலம் அளிக்கின்றோம்.
- கொரோனா வைரஸின் போது வீட்டிலிருந்து வேலை செய்தல் (Working from home during Coronavirus in Tamil)
- கொரோனா வைரஸ் தடுப்பு (Prevention of Coronavirus in Tamil)
கொரோனா வைரஸின் போது வீட்டிலிருந்து வேலை செய்வது (Working from during Coronavirus in Tamil)
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக,வீட்டிலிருந்தபடியே வேலை செய்வது சிறிய சவாலாகவே கருதப்படுகின்றது. ஏனெனில், அலுவலக சூழலும் வீட்டுச் சூழலும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டவையாகும். எனினும், தொற்று அதிகரித்து வரும் இந்த காலக்கட்டத்தில் வீட்டைத் தவிர வேறு எந்த இடமும் பாதுகாப்பானதில்லை. எனவே, மோசமடைந்து வரும் நிதி நிலைமையை ஆதரிப்பதற்காக வீட்டிலிருந்தபடியே தொடர்ந்து பணியாற்றுவது அவசியமாகிறது.
- தினசரி நீங்கள் வேலை செய்யத் தொடங்குவதற்கு முன்பு, அந்தநாளில் நீங்கள் எந்த பணிகளை செய்து முடிக்க வேண்டுமென்ற இலக்கை முடிவுசெய்யுங்கள்.
- உங்கள் வேலையைத் தொடங்குவதற்கு முன், குழந்தைகளின் பொழுதுபோக்குக்கிறகாக சில விளையாட்டு பொருட்களை கொடுங்கள் மற்றும் அவர்களுக்கு பசி ஏற்பட்டால் சாப்பிட மற்றும் குடிக்க தேவையான உணவு பொருட்களை முன்பே தயார் செய்யுங்கள். இதனால், அவர்கள் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். உங்கள் நாற்காலி மற்றும் மேசையை ஒரு அமைதியான அறையில் வைக்கவும். இதனால், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களால் உங்கள் பணிக்கு இடையூறு ஏற்படாது.
- உங்கள் சக ஊழியர்களை வீடியோ அழைப்புகள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு, உங்கள் வேலையை வீட்டிலிருந்தபடியே எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்பதை தீர்மானியுங்கள். மேலும், இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு வேலை செய்யும் போது சலிப்பு ஏற்படாது.
- நீங்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதன் மூலம், மற்றவர்களையும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய உங்களால் ஊக்குவிக்க முடியும்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வீட்டிலிருந்து வேலை செய்வதே ஒரு சிறந்த வழியாகும்.
கொரோனா வைரஸ் தடுப்பு (Prevention of Coronavirus in Tamil)
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். மற்றும் தங்களை நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள உதவும் சில தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும், அவை:
- அதிக கூட்டம் மற்றும் நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும்.
- முடிந்தவரை வீட்டிலிருந்தபடியே உங்கள் பணிகளை செய்யுங்கள்.
- கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எனவே, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் வகுப்புகளில் சேருந்து படிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.
- பழங்கள் மற்றும் காய்கறிகளை உப்பு சேர்த்த வெதுவெதுபான தண்ணீரில் கழுவிய பின்னரே சமைக்க பயன்படுத்தவும்.
- கோழி மற்றும் மட்டன் போன்ற அசைவ உணவுகளை நன்கு சமைத்து உட்கொள்ள வேண்டும்.
- மக்களுடன் கைகுலுக்கப்படுவதற்கு பதிலாக, வணக்கம் என்று கூறி அவர்களை வாழ்த்துங்கள்.
- பெரும்பாலும், வீட்டுள்ள பொருட்களையே பயன்படுத்தவும்.
- வயதானவர்களையும் சிறு குழந்தைகளையும் வெளியில் செல்லக்கூடாது. பதிலாக பொழுதுபோக்குக்கிற்காக வீட்டிலேயே தாயம், கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடுங்கள். இது தவிர, நீங்கள் தனியாக இருப்பதுபோல் உணராது இருக்க வீடியோ அழைப்புகள் மூலம் உங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
- விலங்குகளுடன் அதிக தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.
- பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து 6 அடி தூரம் தள்ளியே நிற்க வேண்டும்.
- உங்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு நாள்பட்ட இருமல் அல்லது காய்ச்சல் இருந்தால், உடனடியாக அந்த நபர் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதனால், அவருக்கு உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்க முடியும்.
- சாப்பிடுவதற்கு முன் மற்றும் இருமல் அல்லது தும்மல் ஏற்பட்டால், உங்கள் கைகளை சோப்பு பயன்படுத்தி அதிகபட்சமாக 20 நிமிடங்கள் கழுவ வேண்டும். தும்மலின் போது பயன்படுத்தப்பட்ட திசுக்கள் மற்றும் கைக்குட்டைகளை குப்பைத் தொட்டியில் எறியுங்கள்.
- வெளியே செல்லும்போது காட்டாயமாக மூகக்கவசம் அணிய வேண்டும்.
- பொதுமுடக்கதின் காரணமாக பூங்காக்கள் மற்றும் ஜிம்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் உங்களை பொருத்தமாக வைத்திருக்கவும் தினசரி வீட்டிலேயே யோகா மற்றும் உடற்பயிற்சியை செய்யுங்கள்.
உங்களுக்கு இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உங்கள் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடமிருந்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உடனடியாக உங்கள் அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு சென்று தொற்றுநோக்கான பரிசோதனையை மேற்கொண்டு தொற்று நோய் நிபுணர்களிடம் (Infectious disease Specialist) முறையான சிகிச்சையைப் பெறுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
Best Infectious disease Specialist in Mumbai
Best Infectious disease Specialist in Nagpur