ஜின்கோவிட் மாத்திரைகளின் பயன்கள் மற்றும் நன்மைகள் | Zincovit tablet meaning in Tamil 

டிசம்பர் 10, 2020 Lifestyle Diseases 22966 Views

English हिन्दी Bengali Tamil

ஜின்கோவிட் டேப்லெட் ஜின்கோவிட் அபெக்ஸ் டேப்லெட் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு  நபரின் உடலில் வைட்டமின் குறைபாடுகள் ஏற்படும் போது, அந்த நபருக்கு மருத்துவர்கள்  ஜின்கோவிட் மாத்திரையை பரிந்துரைக்கின்றனர். இந்த மாத்திரையில் வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் துத்தநாகம் போன்றவற்றின் உயர் கலவை உள்ளது. உடலின் நரம்பு மண்டலத்தின் பயனை அதிகரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.  கூடுதலாக, ஜின்கோவிட்டில் உள்ள செலினியம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள  வைட்டமின் ஏ ஆரோக்கியமான உயிரணு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் வைட்டமின் சி உங்கள் உடலின் அனைத்து பகுதிகளிலும் உள்ள திசுக்களின் வளர்ச்சி மற்றும் அதை பழுதுபார்க்க உதவுகிறது. இதய நோய், நீரிழிவு நோய், காசநோய் மற்றும் வாத நோயாளிகள் மற்றும் கடுமையான  நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்கும் ஊட்டச்சத்து நிரப்பியாக ஜின்கோவிட் மாத்திரைகள் பயன்படுத்தப் படுகின்றது.  இன்றையக் கட்டுரையில் ஜின்கோவிட் மாத்திரையின் பயன்கள், நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விரிவாகப் பேசுவோம். 

 • ஜின்கோவிட் மாத்திரைகள் என்றால் என்ன? (What is Zincovit tablet in Tamil?)
 • ஜின்கோவிட் மாத்திரையின் பயன்கள் மற்றும் நன்மைகள் யாவை? (What are the uses and benefits of Zincovit tablet in Tamil?)
 • ஜின்கோவிட் டேப்லெட்டின் தீமைகள் என்ன? (What are the side effects of Zincovit tablet in Tamil?)
 • ஜின்கோவிட் டேப்லெட்டை எந்த அளவில் எடுக்க வேண்டும்? (Dosage of Zincovit tablet in Tamil?)

ஜின்கோவிட் மாத்திரைகள் என்றால் என்ன? (What is Zincovit tablet in Tamil?)

ஜின்கோவிட் டேப்லெட் என்பது பல வைட்டமின்கள் அல்லது பல தாதுக்களைக் கொண்ட  மாத்திரையாகும். இது உடலில் உள்ள வைட்டமின்களின் குறைபாட்டை சமாளிக்க உதவுகிறது.இந்த டேப்லெட்டில் பின்வரும் கூறுகள் உள்ளன, அவை:

வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, வைட்டமின் பி 2, வைட்டமின் பி 3, வைட்டமின் பி 5, வைட்டமின் பி 6, வைட்டமின் பி 7, வைட்டமின் பி 9, வைட்டமின் பி 12, வைட்டமின் சி, வைட்டமின் டி 3, வைட்டமின் ஈ உள்ளது.  துத்தநாகம், தாமிரம், மங்கனீன்ஸ், மெக்னீசியம், அயோடின், செலினியம், குரோமியம், மாலிப்டினம் போன்ற தாதுக்களும் உள்ளன. 

ஜின்கோவிட் மாத்திரையின் பயன்கள் மற்றும் நன்மைகள் யாவை? (What are the uses and benefits of Zincovit tablet in Tamil?)

உடலில்  வைட்டமின் குறைபாட்டை சமாளிக்க இந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்ள படுகின்றன. இது தவிர, வேறு சில நோய்களிலிருந்து விடுபடவும் இந்த  டேப்லெட்கள் நன்மை பயக்கிறது. ஒருவரின் உடலில்  வைட்டமின் குறைபாடுகள் இருந்தால், மருத்துவர்கள் அவர்களுக்கு  ஜின்கோவிட்  மாத்திரையை பரிந்துரைக்கின்றனர். 

 • ஜின்கோவிட் டேப்லெட் பலவீனம் மற்றும் சோர்வு சிக்கலை சரிசெய்ய உதவுகிறது.
 • கர்ப்பகாலத்தில் கருவின் வளர்ச்சிக்கு இந்த மருந்தை பரிந்துரைக்கின்றனர்.
 • உணவில் ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதில் ஏதேனும் சிக்கல்களின் காரணமாக, நீங்கள் வைட்டமின் மருந்துகளை எடுத்துக் கொண்டு இருந்தால், அவற்றுடன்  ஜின்கோவிட் மாத்திரையையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
 • அறுவைசிகிச்சைக்குப் பிறகு  இந்த  மருந்தை உட்கொள்வது நன்மை பயக்கும்.
 • வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைக்கு சிகிச்சையளிப்பதில் ஜின்கோவிட் மாத்திரை நன்மை பயக்கிறது, ஆனால் மருத்துவரின் ஆலோசனை படியே அதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • வைட்டமின் அல்லது துத்தநாகம் குறைபாடு ஏற்பட்டால், ஜின்கோவிட் மாத்திரையை உட்கொள்வது நன்மை பயக்கிறது.
 • உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை பூர்த்தி செய்ய ஜின்கோவிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். 
 • இந்த மருந்து கண்கள் தொடர்பான  பிரச்சினைக்கு மிகவும் நன்மை பயக்கிறது. பெரும்பாலும், இது போன்ற சமயங்களில் மருத்துவர்கள் ஜின்கோவிட் மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர். 
 • தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கும் நீங்கள் ஜின்கோவிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
 • எலும்புகளில் பலவீனம் ஏற்படாத வகையில், எலும்புகளை வலுப்படுத்த உதவும் ஜின்கோவிட் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 
 • பசியின்மை மற்றும் எடை இழப்பு ஆகியவற்றின் சிக்கலை சரிசெய்ய ஜின்கோவிட் டேப்லெட்டை பரிந்துரைக்கலாம். (மேலும் படியுங்கள் – ஏன் பசியின்மை)

உரிமைதுறப்பு: Disclaimer 

இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் எங்கள் அறிவு மற்றும் அனுபவத்தில் மிகச் சிறந்தவை, மேலும் அதை முடிந்தவரை சரியான  மற்றும் துல்லியமானதாக மாற்ற நாங்கள் எங்களால் முடிந்தவற்றை செய்துள்ளோம், எனினும், இதை ஒரு தொழில்முறை நிபுணரின் (மருத்துவர்கள்) பரிந்துரைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. ஆலோசனை, நோயறிதல் அல்லது வீட்டு  சிகிச்சை போன்றவற்றையே நாங்கள் வழங்குகின்றோம். 

Logintohealth இன் மூலம் எங்கள் பார்வையாளர்களுக்கு தேவையான சில பொதுவான தகவல்களை  வழங்குவதே எங்கள் நோக்கமாகும். மேலும், இதில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்களின் துல்லியம் குறித்து எந்த  உத்தரவாதமும் நாங்கள்  அளிக்கவில்லை. எந்தவொரு  மருந்து அல்லது சிகிச்சைக்கான எச்சரிக்கையைப் பற்றி குறிப்பிடுகிறோம் என்றாலும், நாங்கள் அந்த மருந்தை செய்கிறோம் என்று அர்த்தமில்லை. மேலும், ஒரு நிபுணரின் முறையான ஆலோசனை இல்லாமல் அதை உட்கொள்ளுதல் பாதுகாப்பு அளிக்காது. மருந்துகள் அல்லது சிகிச்சையின் எந்தவொரு விளைவிக்கும்  Logintohealth பொறுப்பேற்காது. நீங்கள் உட்கொள்ளும்  மருந்து குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை சந்திக்க பரிந்துரைக்கிறோம். 

ஜின்கோவிட் டேப்லெட்டின் தீமைகள் என்ன? (What are the side effects of Zincovit tablet in Tamil?)

ஜின்கோவிட் மாத்திரைகள் தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தாது, எனினும் இந்த மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் உடலில் சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அனைவருக்கும் தீங்கு ஏற்படவில்லை என்றாலும், சிலருக்கு  தீங்கு விளைகிறது. சிறுநீர் கழித்தல், அரிப்பு, வாய் வறட்சி, தூங்குவதில் சிரமம், வேகமான  இதயத் துடிப்பு, பலவீனம் மற்றும் சோர்வு, உடலின் வெப்பநிலை அதிகரிப்பது, சிறுநீரக கற்களின் ஆபத்து, வாய் சுவை மோசமடைதல், தொண்டையில் வீக்கம், தசை பலவீனம், மூட்டு வலி, நோய், ஒவ்வாமை, உதடுகள் மற்றும் முகத்தில் வீக்கம், இருமல், அதிகப்படியான சிறுநீர் கழித்தல், குமட்டல் மற்றும் பதட்டம் போன்றவை இதன் பக்க விளைவுகளில் உள்ளடங்குகிறது. (மேலும் படிக்க – கொரோனா வைரஸ் பாதுகாப்பு)

ஜின்கோவிட் டேப்லெட்டை எந்த அளவில் எடுக்க வேண்டும்? (Dosage of Zincovit tablet in Tamil?)

நோயாளியின் வயது மற்றும் பிரச்சினையைப் பொறுத்து எவ்வளவு டோஸ் எடுக்க வேண்டும் என்பதை மருத்துவர் பரிந்துரைக்கிறார். ஜின்கோவிட் மாத்திரைகளின் அளவை ஒரு மருத்துவருடன் கலந்தாலோசிக்காமல் எடுத்துக் கொள்ள கூடாது. இருப்பினும், ஜின்கோவிட் டேப்லெட்டின்  ஒரு டோஸ் நாள் ஒன்றுக்கு ஒரு முறை என்று சிலரால் எடுக்கப்படுகிறது. (மேலும் படிக்க – கால்சியம் குறைபாடு காரணமாக) 


மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)

டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)

சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


  captcha