ஆண்களுக்கு வெந்தயத்தின் நன்மைகள் | Benefits of fenugreek for men in Tamil 

ஏப்ரல் 8, 2021 Lifestyle Diseases 920 Views

हिन्दी Tamil

வெந்தயம், மிகவும் பிரபலமான மூலிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில், இது பழங்காலத்திலிருந்தே ஒரு மருத்துவ மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வெந்தயம் ஏராளமான நோய்களைக் குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கிறது. வெந்தயம், ஆண்களுக்கு பயனளிக்கும் சில தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், அதன் நன்மைகள் பற்றி பலருக்கு எந்தவித யோசனையுமில்லை. வெந்தயம், ஆண்களுக்கு உண்டாகும் பல்வேறு வகையான பாலியல் பிரச்சினைகளை தீர்க்கிறது மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது. சில ஆய்வுகளின் முடிவில், ஆண்களின் பாலியல் பலவீனத்தை அகற்றுவதில் வெந்தயம் பயனுள்ளதாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பாலியல் ரீதியானப் பிரச்சினைகளுக்கு வெந்தயத்தை உட்கொள்வதற்கு முன்பு, ஒரு மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும். இன்றையக் கட்டுரையில், ஆண்களுக்கு பயனளிக்கும் வெந்தயத்தின் நன்மைகள் பற்றியத் தகவல்களைத் தெரிந்து கொள்வோம். 

 • ஆண்களுக்கு பயனளிக்கும் வெந்தயத்தின் நன்மைகள் யாவை? (What are the benefits of fenugreek for men in Tamil?) 
 • வெந்தயத்தின் பிற நன்மைகள் யாவை? (What are the other benefits of fenugreek in Tamil?) 

பயனளிக்கும் பயனளிக்கும் வெந்தயத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of fenugreek for men in Tamil?) 

பின்வருவன, ஆண்களுக்கு பயனளிக்கும் வெந்தயத்தின் நன்மைகளாகும்: 

 • லிபிடோவை அதிகரிப்பதில் (Increases libido): ஆண்களின் பாலியல் ஆசையையும், லிபிடோவை அதிகரிப்பதிலும் வெந்தயம் மிகவும் நன்மை பயக்கிறது. வெந்தயச் சாற்றைப் பயன்படுத்துவது, ஆண்களின் பாலியல் ஆசையைத் தூண்டுகிறது மற்றும் பாலியல் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது. ஆண்களின் பாலியல் பலவீனத்தை குணப்படுத்த வெந்தயம் பயனுள்ளதாக இருக்கிறது என சில ஆய்வுகள் கூறுகின்றன. (மேலும் படிக்க- ஆண்களில் லிபிடோ இல்லாததற்கான காரணங்கள்
 • டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது (Increases testosterone levels): உடற்பயிற்சிகள் உடலை பலப்படுத்துகின்றன. டெஸ்டோஸ்டிரோனின் சுரப்பை அதிகரிக்கும் நொதிகள் வெந்தயத்தில் நிறைந்துள்ளது. ஆண்களின் உடல் வலிமையை அதிகரிக்க வெந்தயம் பயனுள்ளதாக இருக்கிறது. வெந்தயத்தைத் தவறாமல் உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும். 
 • உடல் வலிமையை அதிகரிக்கிறது (Increases body strength): வெந்தயம் உடல் தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியின் முடிவில், வெந்தயம் உடல் கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் ஆண்களுக்கு உடல் பலவீனத்தை சமாளிக்க உதவுகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 • இருதயத்தின் எரிச்சல் உணர்வைக் குறைக்கிறது (Reduces heart burn): பெரும்பாலான ஆண்கள் வயிறு எரிச்சல் மற்றும் இரைப்பை பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சினைகளுக்கான முக்கிய காரணம் அஜீரணமாகும். வயிற்று வாயுவுக்கு சிகிச்சையளிக்க வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது என சில ஆய்வுகள் கூறுகின்றன. வெந்தய விதைகள் மார்பில் எரிச்சல் உணர்வு, அஜீரணம் மற்றும் இரைப்பை பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளை நீக்குகிறது. இதயத்தில் உண்டாகும் எரிச்சல் உணர்வு பிரச்சினைக்கு சிகிச்சையளிக்க வெந்தயம் பயனுள்ளதாக அமைகிறது. உணவை உட்கொள்வதற்கு முன்பு ஒரு சில வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலம், இரைப்பை தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்க இயலும். 

வெந்தயத்தின் பிற நன்மைகள் என்ன? (What are the other benefits of fenugreek  in Tamil?) 

பல்வேறு வகையான உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்த வெந்தயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, அவை: 

 • புற்றுநோயைத் தடுக்கிறது (Prevents cancer ): வெந்தயம் புற்றுநோய்க்கு எதிரானது, இது புற்றுநோய் செல்களை அழித்து மார்பக புற்றுநோய் மற்றும் லிம்போமாவைத் தடுக்கிறது. 
 • ஆஸ்துமாவுக்கு நன்மை பயக்கிறது (Beneficial for asthma): வெந்தயம் ஆன்ட்டி அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்க உதவும் ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகளைக் கொண்டுள்ளது. 
 • தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது (Increases breast milk production): வெந்தயம் தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, என சில ஆய்வுகள் கூறுகின்றன. 
 • கொழுப்பின் அளவைக் குறைக்கிறது (Reduces cholesterol levels): உடலில் சேரும் கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைக்க வெந்தய விதைகள் பயனுள்ளதாக இருக்கிறது.
 • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது (Controls diabetes): வெந்தயம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் மருத்துவ மூலிகையாகக் கருதப்படுகிறது. இதனால், வெந்தயம் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. எனினும், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபர்கள் வெந்தயம் விதைகளை உட்கொள்ளக்கூடாது. இது தவிர, நீங்கள் முதன்முறையாக வெந்தயத்தை உட்கொள்கிறீர்கள் எனில், மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும். (மேலும் படிக்க- நீரிழிவு நோயின் அறிகுறிகள்) 

பாலியல் பிரச்சினைகள் தொடர்பான எந்தவொரு தகவலைப் பெறுவதற்கும் ஆண்கள் பாலியல் நிபுணரையோ அல்லது சிறுநீரக மருத்துவரையமருத்துவரையோ (Urologist) தொடர்பு கொள்ளுங்கள். 

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


டெல்லியில் சிறந்த சிறுநீரக மருத்துவர் (Best Urologist in Delhi)

சென்னையில் சிறந்த சிறுநீரக மருத்துவர் (Best Urologist in Chennai) 

மும்பையில் சிறந்த சிறுநீரக மருத்துவர் (Best Urologist in Mumbai)

பெங்களூரில் சிறந்த சிறுநீரக மருத்துவர் (Best Urologist in Bangalore)


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox