அனோரெக்ஸியா நெர்வோசா என்றால் என்ன | What is anorexia nervosa in Tamil 

ஏப்ரல் 29, 2021 Mens Health 1310 Views

हिन्दी Tamil

அனோரெக்ஸியா (பசியற்ற தன்மை) என்பது ஒரு வகை உணவுக் கோளாறு ஆகும், இது அனோரெக்ஸியா நெர்வோசா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகை நோயில் மக்கள் தங்களின் உடல் எடை குறித்து ஒரு தவறான எண்ணத்தைக் கொண்டுள்ளனர், மேலும் இதன் தாக்கத்திற்கு ஆளானவர்கள் தங்களின் உடல் எடையைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அனோரெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவுகளில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தால் தங்களின் உடல் எடையைக் குறைக்க முடியும் என நம்புகின்றனர். இன்றையப் பதிவில், அனோரெக்ஸியா நெர்வோசா என்றால் என்ன என்பது குறித்து சில விரிவான தகவல்களைப் பெறுவோம். 

  • அனோரெக்ஸியா நெர்வோசா என்றால் என்ன? (What is anorexia nervosa in Tamil?) 
  • அனோரெக்ஸியா நெர்வோசாவின் வகைகள் யாவை? (What are the types of anorexia nervosa in Tamil?) 
  • அனோரெக்ஸியா நெர்வோசா ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of anorexia nervosa in Tamil?) 
  • அனோரெக்ஸியா நெர்வோசாவின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of anorexia nervosa in Tamil?) 
  • அனோரெக்ஸியா நெர்வோசா எவ்வாறு கண்டறியப்படுகிறது? (How is anorexia nervosa diagnosed in Tamil?) 
  • அனோரெக்ஸியா நெர்வோசாவிற்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments of anorexia nervosa in Tamil?) 

அனோரெக்ஸியா நெர்வோசா என்றால் என்ன? (What is anorexia nervosa in Tamil?) 

அனோரெக்ஸியா என்பது பசியற்ற தன்மையை உண்டாகும் ஒரு மன கோளாறு, இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் உடல் எடையை கட்டுப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். இந்த மன நிலையின்  காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் உணவுக் கட்டுப்பாடு மற்றும் அதிகப்படியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்குகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், உணவு உட்கொள்வது தங்களை பருமனாக மாற்றும் என நினைக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களின் உணவு பழக்கத்தை மாற்றுகிறார்கள், இதனால் அவர்களின் உணவு அட்டவணை பொருத்தமற்றதாக மாறுகிறது. 

அனோரெக்ஸியா நெர்வோசாவின் வகைகள் யாவை? (What are the types of anorexia nervosa in Tamil?) 

அனோரெக்ஸியா இரண்டு வகைப்படும், அவை: 

  • கட்டுப்படுத்தப்பட்ட அனோரெக்ஸியா (Restricted anorexia): இந்த வகை நோயில் பாதிக்கப்பட்ட நபர்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவுகளை கட்டுப்படுத்துகிறார்கள். இவர்கள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் உள்ள கலோரிகளை எண்ணி, வரையறுக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளையே எடுத்துக்கொள்கிறார்கள். இவர்கள் கலர்டு உணவுகளையே (colored foods) விரும்புகிறார்கள் மற்றும் அதிக உடற்பயிற்சி செய்கிறார்கள்.
  • அதிகப்படியான அனோரெக்ஸியா (Excessive eating anorexia): இந்த வகை நோயில் பெரும்பாலான நபர்கள் சாப்பிடுவதை நிறுத்துகிறார்கள் அல்லது சில நேரங்களில் நிறைய சாப்பிடுகிறார்கள். இதை ஈடுசெய்ய, அவர்கள் வாந்தி எடுக்கிறார்கள். இந்த நடைமுறை அவர்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீனமானவர்களாக மாற்றுகிறது. 

அனோரெக்ஸியா நெர்வோசா ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of anorexia nervosa in Tamil?) 

அனோரெக்ஸியா ஏற்படுவதற்கான முக்கிய காரணம் இன்னும் அறியப்படவில்லை. மேலும், இது மற்ற நோய்களைப் போல பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீங்கு விளைவிக்கிறது.

  • உயிரியல் காரணங்கள்: சிலருக்கு மரபணு ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பசியற்ற தன்மை உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. 
  • சுற்றுச்சூழல் காரணங்கள்: தற்போதைய சூழலில் மக்கள் வெளிநாட்டு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பான்மையான மக்கள் மெலிதாக மாற எண்ணி அனோரெக்ஸியாவுக்கு ஆளாகின்றனர்.
  • உளவியல் காரணங்கள்: சில உணர்ச்சிகரமான காரணிகள் பசியற்ற தன்மையை ஏற்படுத்தும். இதனால், உடல் எடையைக் குறைக்க சில பெண்கள் சாப்பிடுவதை நிறுத்துகிறார்கள். இது ஒரு உளவியல் அறிகுறியாகும். 

வேறு சில காரணிகள் (some other causes): 

  • சிறுமிகள் மற்றும் பெண்களில் அனோரெக்ஸியா மிகவும் பொதுவானதாகும்.
  • மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் அனோரெக்ஸியாவின் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • குடும்பத்தின் மருத்துவ வரலாறு காரணமாகவும் அனோரெக்ஸியா ஏற்படக்கூடும். 

அனோரெக்ஸியா நெர்வோசாவின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of anorexia nervosa in Tamil?)

பின்வருவன, அனோரெக்ஸியாவின் அறிகுறிகளாகும்: 

அனோரெக்ஸியா நெர்வோசா எவ்வாறு கண்டறியப்படுகிறது? (How is anorexia nervosa diagnosed in Tamil?) 

பின்வரும் செயல்முறைகளின் பயன் கொண்டு மருத்துவர்கள் அனோரெக்ஸியா நோயை கண்டறிகின்றனர்.

ஆய்வக பரிசோதனைகள், உடல் பரிசோதனைகள், உளவியல் பரிசோதனைகள் போன்றவை ஆகும்.

அனோரெக்ஸியா நெர்வோசாவிற்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments of a anorexia nervosa in Tamil?) 

அனோரெக்ஸியாவிற்கு மருத்துவர்கள் வெவ்வேறு வழிகளில் சிகிச்சை அளிக்கின்றனர்.

  • சில சிறப்பான சிகிச்சைகளின் மூலம், அனோரெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்களின் நடத்தையை மனநல மருத்துவர்கள் மேம்படுத்துகிறார்கள், இதன் பொருட்டு நோயாளிகள் நல்ல அளவில் உணவுகளை உண்ணுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
  • நோயாளிகளின் கவலை மற்றும் மன அழுத்தத்தை போக்க மருத்துவர்களால் சில மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றது.
  • உடல் எடையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இருந்தால், நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், இதனால் உடலில் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு தக்க சமயத்தில் சிகிச்சையளிக்க முடிகிறது.

அனோரெக்ஸியா நெர்வோசா பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், ஒரு பொது மருத்துவரைத் (General Physician)  தொடர்பு கொள்ளுங்கள். 


டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்

மும்பையில் சிறந்த பொது மருத்துவர்

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர்

சென்னையில் சிறந்த பொது மருத்துவர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha