மாதவிடாயின் போது எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான வீட்டு வைத்தியங்கள் | Home remedies for Problems faced during Periods in Tamil
ஜனவரி 6, 2021 Womens Health 1097 Viewsசிறுமிகள் வயதுக்கு வந்துவிட்டனர் என்பதன் அறிகுறி மாதவிடாயின் தொடக்கமாகும். உடலின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இவை நிகழ்கின்றன. மாதவிடாய் துவங்குவதற்கு முன்பு சிறுமிகளில் வேறு சில உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவை: மார்பகங்களின் விரிவாக்கம், அந்தரங்கபாகத்தில் முடியின் வளர்ச்சி. இன்றையப் பதிவில், மாதவிடாய் வலிக்கான வீட்டு வைத்தியம் குறித்து காண்போம்.
- பெரும்பாலும், சிறுமிகளில் மாதவிடாய் 12 வயது முதல் 15 வயது வரைக்குள் தொடங்குகிறது. இது 50 வயதில் ஏற்படும் மாதவிடாய் நிறுத்தம் வரை நீடிக்கிறது. ஒரு மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்களாகும். இருப்பினும், சில பெண்கள் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டிருக்கின்றனர். அதாவது, சில பெண்கள் 32 நாட்கள் அல்லது 25 நாட்கள் கால அளவைக் கொண்ட மாதவிடாய் சுழற்சியை அனுபவிக்கின்றனர்.
- மாதவிடாய் என்பது கருப்பையின் உள் புறத்தில் உள்ள சில திரவங்களை இரத்ததுடன் மாதந்தோறும் வெளியேற்றும் ஒரு நிலையாகும். சராசரியாக மாதவிடாய் 5 நாட்கள் வரை நீடிக்கிறது. பெண்களின் சுழற்சிகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து இது மாறக்கூடும், எனவே, பெண்கள் மாதவிடாயில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மாதவிடாயில் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் (Problems faced by women during periods in Tamil)
பின்வருவன மாதவிடாயின் போது பெண்களால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகும், அவை:
- மாதவிடாயினால் கவலை மற்றும் பதற்றம்
- கடுமையான மாதவிடாய்
- இரத்தப்போக்கு இல்லாத மாதவிடாய்
- வலிமிகுந்த மாதவிடாய்
மாதவிடாயினால் கவலை மற்றும் பதற்றம் (Menstrual tension) – மாதவிடாய் பதற்றம் பி.எம்.எஸ் (PMS) என்று அழைக்கப்படுகிறது. இது மாதவிடாய் சுழற்சியுடன் தொடர்புடையதாகும். இதன் விளைவாக பெண்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பல அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர். மேலும், இதன் தீவிரத்தைப் பொருத்து அறிகுறிகள் வேறுபடுகின்றன. மாதவிடாய் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு PMS ஏற்படுகிறது. இதனால் தசை வீக்கம், எரிச்சல் உணர்வு, முதுகுவலி, தலைவலி, மார்பக வலி, முகப்பரு, பசி, அதிக சோர்வு, மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்த உணர்வுகள், தூக்கமின்மை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, லேசான வயிற்றுப் பிடிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
- கடுமையான மாதவிடாய் (Heavy periods) – இது போன்ற சமயத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இது உடற்பயிற்சி மற்றும் உணவில் ஏற்படும் மாற்றங்களாலும், சில மருந்துகளின் பயன்பாட்டினாலும் ஏற்படுகிறது. கடுமையான மாதவிடாய் ஏற்படுவதற்கான பிற காரணங்கள் யோனியில் நோய்த்தொற்றுகள், ஹைப்போ தைராய்டிசம், ஃபைப்ராய்டுகள், கர்ப்பப்பை வாயில் அழற்சி போன்றவை ஆகும்.
- இரத்தப்போக்கு இல்லாத மாதவிடாய் (Absent periods) – மாதவிடாயின் போது ஒரு முறை கூட இரத்தப்போக்கு ஏற்படவில்லையெனில், அது முதன்மை அமினோரியா என்று அழைக்கப்படுகிறது. பெண் இனப்பெருக்க அமைப்பின் குறைபாடுகள் அல்லது உடலில் உண்டாகும் ஏதேனும் குறைபாடுகள் காரணமாக இது ஏற்படலாம். ஒரு பெண்ணுக்கு ஒரு மாதத்திற்கு அல்லது அதற்கு மேற்பட்டு அதிக நாட்களாகியும் மாதவிடாய் ஏற்படவில்லையெனில், அது இரண்டாம் நிலை அமினோரியா என்று அழைக்கப்படுகிறது. பிறப்பு கட்டுப்பாடு, தாய்ப்பால் கொடுப்பது, அழற்சி நோய், கர்ப்பம், மாதவிடாய் நிறுத்தம் போன்ற நிலைகளே இதற்கான காரணங்களாகும்.
- வலிமிகுந்த மாதவிடாய் (Painful Periods) – சில பெண்கள் மாதவிடாயின் போது எந்தவித வலியையும் அனுபவிப்பதில்லை. எனினும், சில பெண்கள் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவிற்கு அதிக வேதனையை உணர்கிறார்கள். சில பெண்கள் மாதவிடாய்க்கு முன் வாந்தி, முதுகுவலி போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர். கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதினால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது.
மாதவிடாயின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான வீட்டு வைத்தியங்கள் என்ன? (What are the home remedies for problems faced during periods in Tamil?)
- மாதவிடாயினால் உண்டாகும் வலியிலிருந்து நிவாரணம் பெற, உங்களுக்கு வலியுள்ள பகுதியில் சூடான நீர் பாட்டிலைப் பயன்படுத்தி ஒத்தனம் கொடுங்கள்.
- இலவங்கப்பட்டை ஃபைபர்களை கொண்டுள்ளது. எனவே, 1 கிளாஸ் தண்ணீரில் இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்து குடிக்கவும்.
- ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு கப் பெருஞ்சீரகம் சேர்த்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடிக்கவும். இது வயிற்றுப் பிடிப்பை நீக்குகிறது.
- இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தேநீரைக் குடிக்கவும். இது வயிற்றுப்போக்கைக் குறைக்கிறது.
- கொத்தமல்லி விதைகள் மாதவிடாய் காலங்களில் உதவும் ஒரு சஞ்சீவி மருந்து. கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து நாள் ஒன்றுக்கு மூன்று முறை குடிப்பதால் வலி குறைகிறது.
- துளசி இலைகளை சிறிதளவு தண்ணீரில் கொதிக்க வைத்து நாள் ஒன்றுக்கு 3 முறையாவது குடிக்கவும். இது வலியை விரைவாக நீக்குகிறது.
மாதவிடாயின் போது எந்த உணவை தவிர்க்க வேண்டும்? (What food should be avoided during periods in Tamil?)
- புளிப்பு நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
- தயிர், ஐஸ்கிரீம், குளிர் பானம் போன்ற குளிர் நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
- மாதவிடாயின் போது உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்.
- காரம் குறைவாக உள்ள உணவுகளையே உண்ணுங்கள்.
மாதவிடாய் தொடர்பான ஏதேனும் சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் எனில், மாதவிடாய் குறித்து கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், உடனடியாக மகளிர் மருத்துவ நிபுணரைத் (Gynecologist) தொடர்பு கொள்ளவும்.
மும்பையில் சிறந்த மகளிர் மருத்துவ நிபுணர்
டெல்லியில் சிறந்த மகளிர் மருத்துவ நிபுணர்