பெண்களில் கருவுறாமைக்கான காரணங்கள் | Reasons for infertility in women in Tamil

ஜனவரி 29, 2021 Womens Health 1943 Views

English हिन्दी Bengali Tamil

தற்பொழுது, பெண்களில் கருவுறாமை பிரச்சினை அதிகரித்து வருகிறது. பெண்களில் கருமுட்டை உற்பத்தியாகததிற்கு என்ன காரணம்? ஒரு பெண்ணின் கருப்பைகள் கருமுட்டையை உருவாக்க முடியாவிட்டால், அந்தப் பெண்ணால் கர்ப்பம் தரிக்க  முடியாது. இதன் விளைவாக சில பெண்கள்  ஒருபோதும் தாய்மையின் மகிழ்ச்சியை அனுபவிப்பதில்லை. இதனால் மன அழுத்ததிற்கு உள்ளாகி, தங்களை குற்றவாளிகள் என்று நினைக்கத் தொடங்குகிறார்கள். இருப்பினும், சில வீட்டு வைத்தியங்களின் பயன் கொண்டு கருமுட்டை உருவாகும் செயல்முறையை மேம்படுத்த இயலும். பெரும்பாலும், சங்கடமாக உணர்வதினால்  பெண்கள் தங்கள் கருவுறாமை பிரச்சினையை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. கருமுட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க இயலும். பொதுவாக, 90 நாட்களில் பெண்களின் கருப்பை ஒரு ஆரோக்கியமான கருமுட்டையை உற்பத்தி செய்கிறது. இருப்பினும், சில பெண்களின் கருப்பை முட்டைகளை உற்பத்தி செய்யாத நிலையில், இதற்காக அப்பெண்கள் பல பரிசோதனைகளுக்கு உட்பட்டு பல மருந்துகளை உட்கொள்கின்றனர், இதன் விளைவாக  கருமுட்டை உருவாகும் செயல்முறை நடைபெறுகிறது. பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்  மற்றும் தினசரி உடற்பயிற்சியை மேற்கொண்டு உடலைப் பொருத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால், கருப்பையில் இரத்த ஓட்டம் மேம்படும். மேலும், கருமுட்டைகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது. சில ஆராய்ச்சிகளின்படி, 15 சதவீத தம்பதிகள் கருவுறாமை நோயால் பாதிக்கப்படுகின்றனர், இதன் காரணமாக அந்தப் பெண்கள் ஒருபோதும் தாய்மை அடைவதில்லை.  பெண்களின் வயது அதிகரிப்பதன் காரணமாகவும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. ஏனெனில், பெண்களின் வயது அதிகரிக்கும்போது, ​​முட்டைகளின் தரம் குறையத் தொடங்குகிறது. மலட்டுத்தன்மையின் சிக்கலை எவ்வாறு குணப்படுத்துவது ? என்ற கேள்வி தற்போது உங்கள் மனதில் எழுகிறதல்லவா. எனவே, இந்தக் கட்டுரையின் மூலம் பெண்களில் கருவுறாமைக்கான காரணங்கள் குறித்து விரிவாக விளக்குகிறோம்.

  • பெண்களில் கருவுறாமைக்கான காரணங்கள் யாவை? (What are the reasons for infertility in women in Tamil?)
  • பெண்களில் கருமுட்டை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது? (How are eggs produced in women in Tamil?)
  • கருமுட்டைகளின் தரத்தை எவ்வாறு  மேம்படுத்துவது மற்றும் பெண்களில் கருவுறுதலை எவ்வாறு அதிகரிப்பது? (How to improve the quality of eggs and boost fertility in women in Tamil?)

பெண்களில் கருவுறாமைக்கான காரணங்கள் யாவை? (What are the reasons for infertility in women in Tamil?)

உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக, பெரும்பாலான பெண்களின் கருப்பை கருமுட்டைகளை உற்பத்தி செய்வதில்லை. இதன் காரணமாக, அந்தப் பெண்கள் கருத்தரிக்க முடிவதில்லை. மருத்துவர்கள் பெரும்பாலும் இந்த பிரச்சினை உள்ள பெண்களை அவர்களின் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும், தினசரி உடற்பயிற்சி மற்றும் யோகாவை தவறாமல் செய்யவும் அறிவுறுத்துகிறார்கள். இந்த வாழ்க்கை முறை பழக்கங்கள் கருப்பைகள் கருமுட்டைகளை உருவாக்க உதவுகிறது. சில பெண்களுக்கு கருப்பையில் வீக்கம் இருக்கிறது, இது கருப்பை நீர்க்கட்டி என்று அழைக்கப்படுகிறது. கருப்பையில் வீக்கம் இருப்பதன் விளைவாகவும், கருமுட்டைகளை உற்பத்தி செய்ய முடிவதில்லை. இந்தப் பிரச்சினை உள்ள பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளது மற்றும் இவர்களால் வெற்றிகரமாக கருத்தரிக்க முடிவதில்லை.

பெண்களில் கருமுட்டை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது? (How are eggs produced in women in Tamil?)

ஒரு பெண்ணுக்கு கருப்பையின் இருபுறமும் இணைக்கப்பட்ட இரண்டு கருப்பைகள் உள்ளன. இந்த கருப்பைகள் பல முட்டைகளால் நிரப்பப்பட்டுயிருக்கின்றது, கருமுட்டைகளின் உருவாக்கம் தொடங்கியவுடன் இவை குறையத் தொடங்குகின்றன. இரண்டு கருப்பைகளும் கிட்டத்தட்ட 1 முதல் 2 மில்லியன் கருமுட்டைகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில முட்டைகள் மாதவிடாயின் போது குறையத் தொடங்குகின்றன, மற்றவை வயதாகும்போது குறையத் தொடங்குகின்றன. ஒரு பெண்ணின் முதல் மாதவிடாய் சுழற்சிக்கும் கடைசி மாதவிடாய் சுழற்சிக்கும் இடையில் உருவாகும் கருமுட்டைகளில் 400 கருமுட்டைகள் பயனுள்ளதாக அமைகிறது. இந்த கருமுட்டைகளின் அளவு 120 மைக்ரான் ஆகும். மாதவிடாய் சுழற்சியின் நான்காவது நாளில், கருப்பையில் இருந்து 4 முட்டைகள் வெளியிடப்படுகின்றன. இந்த முட்டைகளில் ஒன்று விந்தணுடன் ஒன்றிணைந்து கருவில் விளைகிறது. இந்தச் செயல்முறைக் கருத்தரித்தல் என்று அழைக்கப்படுகிறது. 

கருமுட்டைகளின் தரத்தை எவ்வாறு  மேம்படுத்துவது மற்றும் பெண்களில் கருவுறுதலை எவ்வாறு அதிகரிப்பது? (How to improve the quality of eggs and boost fertility in women in Tamil?)

ஒரு பெண் 35 வயதைத் தாண்டும்போது, ​​அவரது கருமுட்டைகளின் தரம் குறைய தொடங்குகிறது, இந்தப் பிரச்சினையின் காரணமாக அவர் மனச்சோர்வடைகிறார். எனினும்,  வயதான பின் தாய்மை அடைய விரும்பும் பெண்களின் கருமுட்டை தரத்தை மேம்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவை,

  • கருவுறாமைக்கு முக்கிய காரணம் ஆல்கஹால் உட்கொள்ளுதல் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற தீயப் பழக்கங்களாகும். சிகரெட்டுகளிலுள்ள இரசாயனங்கள் கருமுட்டைகளின் தரத்தை பாதிக்கிறது. மேலும், ஆல்கஹால் உட்கொள்ளுதல் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது
  • கருவுறாமைக்கு மற்றொரு காரணம் உடல் எடை அதிகமாக இருத்தல் ஆகும். எனவே, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது மிகவும் முக்கியம், இதனால் நல்ல தரமான கருமுட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
  • உடலில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இரத்த ஓட்டம் குறைகிறது. எனவே, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் கருப்பைகள் அவற்றின் செயல்பாட்டைச் சரியாகச் செய்கின்றன. மேலும், உற்பத்தியாகும் கருமுட்டைகளும் ஆரோக்கியமானதா இருக்கிறது. இது தவிர, ஆரோக்கியமா உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். 
  • கருமுட்டைகளின் தரத்தை மேம்படுத்த, பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டை, வெண்ணெய், எள், பச்சை காய்கறிகள், பழங்கள் , உலர் பழங்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். மற்றும் தினசரி அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கருமுட்டைகளின் தரத்தை மேம்படுத்தவும், உங்கள் வலிமையைப் பராமரிக்கவும் சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துங்கள். பெரும்பாலும், உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளே கருமுட்டை உருவாகும் செயல்முறையை பாதிக்கின்றனது.

பெண்களுக்கு கருவுறாமை பிரச்சினைகள் இருந்தால், அவர்கள் ஒரு மகளிர் மருத்துவ நிபுணரைத் (Gynecologist) தொடர்பு கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில்அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


மும்பையில் சிறந்த மகளிர் மருத்துவ நிபுணர்

டெல்லியில் சிறந்த மகளிர் மருத்துவ நிபுணர்

பெங்களூரில் சிறந்த மகளிர் மருத்துவ நிபுணர்

சென்னையில் சிறந்த மகளிர் மருத்துவ நிபுணர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha