அறுவைசிகிச்சை முறைப்பிரசவத்திற்குப் பிறகு தொப்பை கொழுப்பைக் குறைக்க | Reduce belly fat after caesarean delivery in Tamil
மார்ச் 12, 2021 Womens Health 2019 Viewsசுகப்பிரசவம் அல்லாது அறுவைசிகிச்சை முறையில் பிரசவம் நடந்தால், அதனை அறுவைசிகிச்சை முறைப் பிரசவம் என்றழைக்கின்றனர். இது ஆங்கிலத்தில் C – section (சி – பிரிவு) என்றழைக்கப்படுகிறது. அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்குப் பிறகு, எந்தவித உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதுக் குறித்து பல பெண்களும் அறியாமல் இருப்பதால், குழந்தை பிறப்பிற்கு பிறகு அவர்களால் வயிற்றுக் கொழுப்பை குறைக்க முடிவதில்லை. பல பெண்கள், பிரசவத்திற்கு பிறகு கூடியுள்ள கொழுப்பின் விளைவாக தங்கள் வயிறு குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும் எனப் பயப்படுகிறார்கள். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் நிகழும் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும். இருப்பினும் பிரசவத்திற்குப் பிறகு, உடலில் சேரும் அதிகப்படியான வயிற்று கொழுப்பைக் குறைத்து, கர்ப்பத்திற்கு முந்தைய உடலை மீண்டும் பெற அனைவரும் விரும்புகிறார்கள். அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்குப் பிறகு, நிறையப் பெண்கள் தொப்பை கொழுப்பைப் பெறுகிறார்கள். இதன் விளைவாக, அந்தப் பெண்கள் அதிக வேதனை அடைகிறார்கள். இத்தகைய நேரத்தில், கொழுப்பைக் குறைக்க உணவு உட்கொள்வதைக் குறைப்பது நல்லதல்ல. எனவே, இன்றையக் கட்டுரையில், அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்குபிறகு தொப்பை குறைய பின்பற்ற வேண்டிய உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை வழக்கத்தைப் பற்றி விரிவாகக் கூறுகிறோம்.
- சி-பிரிவுக்குப் பிறகு வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க எவ்வளவு காலம் ஆகிறது? (How long will it take to shrink a belly after C – section in Tamil?)
- சி-பிரிவுக்குப் பிறகு வயிற்றுக் கொழுப்பைக் குறைப்பதற்கான பயிற்சிகள் (Exercises to reduce tummy after a C – section in Tamil)
- அறுவைசிகிச்சை பிரசவத்திற்குப் பிறகு வயிற்றுக் கொழுப்பைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள் (Tips for reducing stomach after a caesarean delivery in Tamil)
சி-பிரிவுக்குப் பிறகு வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க எவ்வளவு காலம் ஆகிறது? (How long will it take to shrink a belly after C – section in Tamil ?)
அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்கு உட்பட்ட பெண்கள் சில வாரங்களுக்குள் வயிற்று கொழுப்பைக் குறைக்க முயற்சிப்பார்கள். உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான திரவங்கள் சில வாரங்களுக்குள் உங்கள் உடலில் செயல்படத் தொடங்குகிறது. முதலில், உங்கள் கருப்பை சுருங்க ஆரம்பிக்கிறது, பின் வயிறு சுருங்க ஆரம்பிக்கும். இது தவிர, உடற்பயிற்சி செய்வதும் வயிற்றைக் குறைக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில், 40 வாரங்களில் வயிறு முழுமையாக விரிகிறது. பிரசவத்திற்குப் பிறகு, அறுவைசிகிச்சை முறைப் பிரசவம் அல்லது சுகப்பிரசவமாக இருந்தாலும், கருப்பை 6 முதல் 8 வாரங்களுக்குள், அதன் இயல்பான அளவிற்கு சுருங்கக்கூடும்.
சி-பிரிவுக்குப் பிறகு வயிற்றுக் கொழுப்பைக் குறைப்பதற்கான பயிற்சிகள் (Exercises to reduce tummy after a C – section in Tamil?)
அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக வயிற்றைக் குறைக்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள மருத்துவர்கள் அனுமதிப்பதில்லை. ஏனெனில், அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்குப் பிறகு 6 வாரங்களுக்கு படுக்கை ஓய்வு மட்டுமே மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது, முதன்முதலில் தாய்மை அடையும் பெண்கள் 8 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாற்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார். சி-பிரிவுக்குப் பிறகு வயிற்று கொழுப்பைக் குறைக்க பல்வேறு வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. இந்த உடற்பயிற்சிகள் வயிற்று தசைகளை பலப்படுத்துகிறது. மேலும், இது அடிவயிற்று பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே, அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்குப் பிறகு லேசான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம், அவை:
- சி-பிரிவுக்குப் பிறகு ப்லன்க்ஸ் செய்யலாம் (Planks can be done after C – section) – உங்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்த, இந்த உடற்பயிற்சி நன்மை பயக்கிறது. இந்த வகை உடற்பயிற்சியில், உங்கள் உடல் எடையை முன்கைகள், முழங்கைகள் மற்றும் கால்விரல்கள் மீது சுமத்தி, உங்கள் உடலை ஒரு புஷப் நிலையில் வைத்திருங்கள். தினசரி, குறைந்தது 30 வினாடிகள் இதைச் செய்யுங்கள், இது வயிற்று கொழுப்பைக் குறைக்க உதவும் ஒரு நல்ல உடற்பயிற்சியாகும். இந்த, உடற்பயிற்சி அறுவைசிகிச்சையின் போது, உண்டாகும் காயத்திற்கு அழுத்தம் கொடுக்காது.
- இடுப்புக்கான உடற்பயிற்சி (Pelvic tilts exercises) – அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்குப் பிறகு வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க இடுப்பைச் சாய்த்து செய்யும் உடற்பயிற்சி நன்மை பயக்கிறது. இந்த வகை உடற்பயிற்சியில், முழங்கால்களை வளைத்து தரையில் படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வயிற்றுத் தசைகளை சுருக்கி, உங்கள் இடுப்பை முன்னோக்கி சாய்த்துக் கொள்ளவும். இந்த உடற்பயிற்சியைத் தினசரி 10 விநாடிகள் செய்யுங்கள். இது, வயிற்றுக் கொழுப்பை இழப்பதை எளிதாக்குகிறது.
- ப்ரிட்ஜஸ் உடற்பயிற்சி (Bridges exercises) – அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்குப் பிறகு தசைகள் மற்றும் இடுப்புகளை வலுப்படுத்த, இது ஒரு நல்ல உடற்பயிற்சியாகும். இந்த பயிற்சியைச் செய்ய, முழங்கால்களை வளைத்து, கால்களைத் தரையில் படுமாறு வைத்து, உங்கள் முதுகில் படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளங்கைகளைக் கீழ்நோக்கி விரிக்கவும். பின்னர் மெதுவாக உங்கள் இடுப்பைத் தரையில் இருந்து தூக்குங்கள். இந்த பயிற்சியை தினசரி 4 முதல் 5 முறை வரை செய்யுங்கள். இந்த வகை உடற்பயிற்சி உங்கள் வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
- கெகல்ஸ் உடற்பயிற்சி (Kegels exercises)– இடுப்பின் தசைகளை வலுப்படுத்த இந்த உடற்பயிற்சி நன்மை பயக்கிறது. அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால், இந்த உடற்பயிற்சியை மேற்கொள்வது வயிற்றைக் குறைக்க உதவக்கூடும். இந்த உடற்பயிற்சியைச் செய்ய, இடுப்பு தசைகளை ஐந்து விநாடிகள் இறுக்கி, பின்னர் விடுவிக்கவும். உங்கள் மூச்சைப் பிடிக்காமல், இதைச் செய்யுங்கள். ஒவ்வொரு முறைச் செய்யும் போதும், இடையில் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். இந்த செயல்முறையை 4 முதல் 5 முறை செய்யவும்.
- முன்னோக்கிய வளைவுகள் (Forward bends) – அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்குப் பிறகு வயிற்றைக் கொழுப்பைக் குறைக்க முன்னோக்கிய வளைவுகள் சிறந்த உடற்பயிற்சியாகக் கருதப்படுகின்றது. இது, கீழ் முதுகின் தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் தொப்பைக் கொழுப்பைக் குறைக்கிறது. இந்த உடற்பயிற்சியைச் செய்ய, நேராக எழுந்து நின்று, உங்கள் தலை உங்கள் இடுப்புடன் சமமாக வரும் வரை மெதுவாக முன்னோக்கி வளையுங்கள். பின்னர் மறுபடியும் உடலை நேராக்குங்கள். இந்த பயிற்சியை தினசரி 4 முதல் 5 முறை செய்வதன் மூலம், வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க இயலும்.
அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்குப் பிறகு வயிற்றுக் கொழுப்பைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள் (Tips for reducing stomach after a caesarean delivery in Tamil)
- அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்குப் பிறகு ஏராளமான தண்ணீரை குடிக்கவும், ஏனெனில் இது உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை நீக்க உதவுகிறது. எனவே, அதிகளவில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
- அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்குப் பிறகு குறைந்தது 6 மாதங்கள் வரை, உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
- அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்குப் பிறகு, தாய்மார்கள் நிறைய தூக்கம் பெற வேண்டும். இது, வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சராசரியாக 7 மணி நேரம் தூக்கம் கொள்ள வேண்டும்.
- அறுவைச்சிகிச்சை முறையில் குழந்தையை பிரசவிக்கும் பெண்கள், அறுவைச்சிகிச்சை காயங்களிலிருந்து மீள ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அனைத்து தாய்மார்களுக்கும் நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. அவர்கள் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிக அளவில் கொழுப்பு உள்ள இனிப்புகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகளவில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடவேண்டும்.
அறுவைசிகிச்சை முறைப் பிரசவத்திற்குப் பிறகு வயிற்றுக் கொழுப்பைக் குறைப்பதற்கான வழிகளைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற, உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை (Gynecologist) அணுகுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
மும்பையில் சிறந்த மகளிர் மருத்துவ நிபுணர்
டெல்லியில் சிறந்த மகளிர் மருத்துவ நிபுணர்