மெனோபாஸ் என்றால் என்ன | What is Menopause in Tamil
பிப்ரவரி 1, 2021 Womens Health 3381 Viewsமாதவிடாய் நிறுத்தம் என்பது பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் முடிவு நிலையாகும். வயது அதிகரித்தலின் காரணமாக பெண்களின் உடலில் பாலின ஹார்மோன்கள் சுரப்பதில்லை. இதன் விளைவாக, கருப்பைகள் கருமுட்டைகளை விடுவிப்பதில்லை. மேலும், மாதவிடாய் நிறுத்தத்திற்கு பின்னர் பெண்களால் கர்ப்பம் தரிக்க இயலாது. மாதவிடாய் நிறுத்தம் பொதுவாக 45 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு ஏற்படுகின்றது. உங்கள் மாதவிடாய் சுழற்சியை தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு தவறவிட்டால், நீங்கள் மாதவிடாய் நிறுத்தத்தை அடைந்துவிட்டீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். மாதவிடாய் நிறுத்தத்தின் சில அறிகுறிகள் யோனி வறட்சி, தூக்கமின்மை, தலைவலி, பாலுணர்ச்சி இழப்பு போன்றவை ஆகும். மேலும், சில பெண்களுக்கு கடுமையான எலும்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இது போன்ற சமயங்களில், உங்களை நீங்களே சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் நிறுத்தத்தின் போது, பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். மேலும், இது குறித்து அவர்களின் மருத்துவரிடம் ஆலோசனை செய்யலாம். மாதவிடாய் நிறுத்தத்திற்கான சிகிச்சை, ஹார்மோன் மாற்று சிகிச்சையால் செய்யப்படுகிறது. எனினும் சில சந்தர்ப்பங்களில், இது போன்ற சிகிச்சைகள் புற்றுநோய் ஆபத்து போன்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பதிவின் மூலம் மெனோபாஸ் என்றால் என்ன என்பது குறித்து விரிவாக விளக்குகிறோம்.
- மாதவிடாய் நிறுத்தத்தின் சரியான வயது என்ன? (What is the correct age for Menopause in Tamil?)
- மாதவிடாய் நிறுத்ததிற்கான காரணங்கள் யாவை? (What are the causes of Menopause in Tamil?)
- மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Menopause in Tamil?)
- மாதவிடாய் நிறுத்தத்திற்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for Menopause in Tamil?)
- மாதவிடாய் நிறுத்தத்தின் பிற விளைவுகள் (Other effects of Menopause in Tamil)
மாதவிடாய் நிறுத்தத்தின் சரியான வயது என்ன? (What is the correct age of Menopause in Tamil?)
- மாதவிடாய் நிறுத்தம் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஹார்மோன்களை பொறுத்தே ஏற்படுகின்றது. மாதவிடாய் நிறுத்தத்தின் வயது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். ஒரு பெண்ணுக்கு 45 வயதில் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகின்றது, மற்றும் சில பெண்கள் 50 அல்லது 55 வயதில் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படலாம். பெரும்பாலும், பெண்களின் மாதவிடாய் நிறுத்தத்திற்கான சராசரி வயது 50. இந்தியாவில், பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்தை சராசரியாக 45 முதல் 50 வயதிற்குள் அனுபவிக்கின்றனர். மேலும், முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம், ஒரு பெண்ணுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
- மாதவிடாய் நிறுத்தம் இளம் வயதிலேயே ஏற்பட்டால், அந்தப் பெண் கருவுறுதல் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். இது தவிர, அவரின் எலும்புகளில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பெண்கள் எந்தவித சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் தங்கள் உடலையும், மனதையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் வயது 40 க்கு மேல் இருந்தால், உங்களின் மாதவிடாய் சுழற்சியில் நீங்கள் சில முறைகேடுகளை சந்திக்கிறீர்கள் என்றால், இது மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறியாக இருக்கக்கூடும்.
- கருத்தடை மாத்திரைகளை அதிகப்படியாக உட்கொள்ளுதல் மற்றும் அடிவயிற்றில் கொழுப்பு அதிகரித்தல் போன்றவை, மாதவிடாய் நிறுத்தத்தை தாமதப்படுத்துகிறது. ஒரு பெண் தன் வாழ்வில் தாய்மை அடையாமலும் மாதவிடாய் நிறுத்தத்திற்கு செல்லலாம். பெண்கள், தங்கள் உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை சேர்க்க வேண்டும். சில ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினை குறித்தும், உங்கள் மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனை பெறலாம்.
மாதவிடாய் நிறுத்தத்திற்கான காரணங்கள் யாவை? (What are the causes of Menopause in Tamil?)
மாதவிடாய் நிறுத்தத்திற்கான முக்கிய காரணம், உடலில் உள்ள பாலியல் ஹார்மோன்களின் நடவடிக்கை குறைவாகும். பெண்களின் வயது அதிகரிப்பதன் விளைவாக, அவர்கள் உடலில் உள்ள பாலியல் ஹார்மோன்களின் அளவு குறைகின்றன. இதனால், முதலில் பெண்களின் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாகி, பின்னர் மாதவிடாய் சுழற்சி நின்றுவிடுகிறது. கருப்பைகள் கருமுட்டைகளை வெளியிடுவதை நிறுத்துவதே இதற்குக் காரணம். மருத்துவர்களின் கூற்றுப்படி, 40 வயதிற்குப் பிறகு பெண்களில் நுண்ணறைகளின் வளர்ச்சி குறைகிறது, படிப்படியாக, அது முற்றிலும் நின்றுவிடுகிறது. இது மாதவிடாய் சுழற்சியின் நிறுத்தத்திற்கு காரணமாக அமைகிறது.
மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Menopause in Tamil?)
மாதவிடாய் நிறுத்தத்தின் காரணமாக, பெண்களின் உடலில் சில அறிகுறிகள் தோன்றுகிறது, அவை :
- யோனி வறட்சி
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- தூக்கமின்மை
- லிபிடோ இழப்பு
- அதிகரித்த மன அழுத்தம் அல்லது எரிச்சல் உணர்வு
- முடி கொட்டுதல்
- தோலில் மாற்றங்கள்
- மனச்சோர்வு
- வெப்ப ஒளிக்கீற்று
- பின்வருவன, சில கடுமையான அறிகுறிகளாகும்
- இதய நோய் ஆபத்து
- பிபி சிக்கல், எலும்பு பலவீனம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ்.
மாதவிடாய் நிறுத்தத்திற்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for Menopause in Tamil?)
சரியான வயதில் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டால், இதற்கு எந்தவித சிகிச்சையும் தேவையில்லை. ஏனெனில், இது ஒரு இயற்கையான நிகழ்வாகும். சில பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்தினால் உண்டாகும் கடுமையான அறிகுறிகளைக் குறைக்க மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். பின்வருவன, மாதவிடாய் நிறுத்தத்திற்கான சிகிச்சைகளாகும். அவை:
- மாதவிடாய் நிறுத்தத்தில், யோனி வறட்சி மற்றும் தோல் பிரச்சினைகள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றை குணப்படுத்த, ஈஸ்ட்ரோஜன் கிரீமை பயன்படுத்துமாறு மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
- ஹார்மோன் மாற்று சிகிச்சை மாதவிடாய் நிறுத்ததிற்கான சிறந்த சிகிச்சையாக கருதப்படுகிறது. இந்த சிகிச்சை இதன் அறிகுறிகளைக் குறைப்பதில் நன்மை பயக்கிறது. ஏனெனில், இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த சிகிச்சையின் நிறுத்தத்திற்கு பிறகு, மார்பக புற்றுநோய் அல்லது இதய நோய் போன்ற சில எதிர்மறை விளைவுகள் காணப்படுகின்றன.
- சில இயற்கை மூலிகைகள் மாதவிடாய் நிறுத்ததிற்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன. நீங்கள் இதற்கான தீர்வுகளை பழங்கள் அல்லது காய்கறிகளிலிருந்தும் பெறலாம். மற்றும் சில மூலிகைகளின் மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. எனினும், அதை எடுத்துக்கொள்வதற்கு முன், ஒரு மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.
மாதவிடாய் நிறுத்தத்தின் பிற விளைவுகள் (Other effects of Menopause in Tamil)
மாதவிடாய் நிறுத்தத்தைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம், இருப்பினும் இந்த நிலையை அடையும் போது, அமைதியாகவும், பக்குவமாகவும் இருப்பது அவசியமாகிறது. கடுமையான மாதவிடாய் காலங்களை அனுபவித்த பல பெண்கள், மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு, நிவாரணம் அடைகின்றனர். இது தவிர, உடலுறவின் போது சில பெண்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள், எனினும் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு அவற்றின் தேவை இருப்பதில்லை, அவர்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்க முடிகிறது. மாதவிடாய் நிறுத்தம் சில தவறான விளைவுகளைக் கொண்டிருந்தாலும், இதில் சில நல்ல முடிவுகளும் உள்ளன. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை கொண்ட பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு நிம்மதியாக உணர்கிறார்கள். மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை மாறுகிறது, எனினும் இதைப் பற்றி கவலைப்படாமல், நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதிலும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற, ஒரு மகளிர் மருத்துவ நிபுணரைத் (Gynecologist) தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
மும்பையில் சிறந்த மகளிர் மருத்துவ நிபுணர்
டெல்லியில் சிறந்த மகளிர் மருத்துவ நிபுணர்