கண்களில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன | What causes itchy eyes in Tamil
ஏப்ரல் 1, 2021 Lifestyle Diseases 2539 Viewsகண்களில் அரிப்பு ஏற்படுவது, ஒரு பொதுவான பிரச்சினையாகும். இது போன்ற சமயங்களில், கண்களைச் சுற்றி எரிச்சல் ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் கண் எரிச்சல் சிக்கலுக்கு, ஒரு பொது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுகிறார்கள். கண் எரிச்சல் பிரச்சினைகள், ஒவ்வாமை காரணமாகவும் எழக்கூடும். மற்றும் கண்களைத் தேய்ப்பதன் மூலம், இதன் நிலை மோசமடையக்கூடும். கண் எரிச்சலை உண்டாகும் கிருமிகள் கண்திரைக்கு தீங்கு விளைவிக்கிறது. கண்களை மீண்டும் மீண்டும் தேய்ப்பதன் விளைவாகவும் அரிப்பு ஏற்படுகிறது. கண்கள் அதிக மாசுபடுவதன் காரணமாகவும் சேதம் ஏற்படுகிறது. இன்றையக் கட்டுரையில் கண் அரிப்பிற்கான காரணங்கள் குறித்து காண்போம்.
கண்களைத் தேய்க்கும் பழக்கம் உள்ளவர்கள், இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும். மேலும், கண் எரிச்சலிளிருந்து நிவாரணம் பெற பனிக்கட்டியைப் பயன்படுத்த வேண்டும். எனினும், கண் எரிச்சல் சிக்கல் அதிகரிக்கும் போது, ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். கண்கள் மிகவும் மென்மையானவையாகும், இதனால் கண்களுக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது.
- கண்களில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of itching in eyes in Tamil?)
- கண் அரிப்பின் அறிகுறிகள் என்ன? (What are the symptoms of itching in eyes in Tamil?)
- கண் அரிப்பிற்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for itching in eyes in Tamil?)
- கண்களில் அரிப்பு ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது? (How to prevent itching in eyes in Tamil?)
கண்களில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of itching in eyes in Tamil?)
பல்வேறு காரணிகள் கண்களில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றில் சில கண் அரிப்பிற்கான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் கண்களில் அரிப்பை ஏற்படுத்துகின்றன.
- லென்ஸ்கள் அதிகமாகப் பயன்படுத்துவதால், கண்களில் அரிப்பு ஏற்படுகிறது.
- கண்களைச் சுற்றியுள்ள எண்ணெய் சுரப்பிகளில் ஏதேனும் சிக்கல் உண்டானால், கண்ணீரில் எண்ணெய் இருப்பதில்லை.
- சில நச்சுகளின் காரணமாகவும் கண்களில் வீக்கம் மற்றும் கண்களில் சிவப்பு ஆகியவை ஏற்படுகின்றன. சில நுண்ணுயிரிகள் கண் அரிப்புக்கு வழிவகுக்கிறது.
- கார்னியா மற்றும் கான்ஜுன்டிவா சவ்வுகள் மரபணு காரணங்கள் அல்லது ஒவ்வாமை காரணமாக வீங்குகின்றன. இது, கண்களைப் பாதிக்கிறது.
- தண்ணீர் பற்றாக்குறை கண்களில் வறட்சியை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, கண்களில் இருந்து அழுக்குகள் வெளியே வர முடிவதில்லை.
- கண்களில் வீக்கம் மற்றும் வலி காரணமாகவும் கண் அரிப்பு ஏற்படுகிறது. (மேலும் வாசிக்க- கண்களின் பிரகாசத்தை அதிகரிக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்)
கண் அரிப்பின் அறிகுறிகள் என்ன? (What are the symptoms of itching in eyes in Tamil?)
பின்வருவன, கண் அரிப்பின் அறிகுறிகளாகும். ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு அறிகுறிகள் ஏற்படக்கூடும். மேலும், கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து அறிகுறிகளும் ஏற்படுவதில்லை.
- நீர் நிறைந்த கண்கள் (மேலும் படிக்க – கண் காய்ச்சல் என்றால் என்ன)
- சுவாசிப்பதில் சிக்கல்
- கண்களைச் சுற்றி அழற்சி
- கண்கள் வீங்குகின்றன. அவ்வாறு வீங்கியிருந்தால் கண்களைத் திறக்காதீர்கள்.
- கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல்.
- மார்பில் சளி நெரிசல்
- அதிக வெளிச்சத்தில் கண்கள் கூசுகின்றன.
- மூச்சுத்திணறல்
- வலி
- மங்கலான பார்வை
- தும்மல் (மேலும் படிக்க – தும்மல் ஏற்படுவதற்கான காரணங்கள்)
- பொருத்தமற்ற பார்வை
- கண்களைக் கசக்கும் உணர்வு.
- கண் இமைகளில் வீக்கம்
கண் அரிப்பிற்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for itching in eyes in Tamil?)
பின்வருவன, கண் அரிப்பிற்கான சிகிச்சைகளாகும்,
- மருந்துக் கடைகளில் எளிதில் கிடைக்கக்கூடிய கண் சொட்டு மருந்துகளை உபயோகிக்க, மருத்துவ பயிற்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவுவதன் மூலம் அரிப்பு குறைகிறது. ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை கழுவுவதன் மூலம் கண்ணிலிருந்து அகற்ற வேண்டும்.
- கண் சொட்டு மருந்துகள் மற்றும் கண் மருந்துகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இந்த செயல்முறை கண்களுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.
- மூக்கு அரிப்பு, மூக்கு சிவத்தல் அல்லது மூக்கு அடைப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். (மேலும் படிக்க – கண்களுக்கு பாதாமின் நன்மைகள்)
- ரோஸ் வாட்டர் கண் அரிப்பு மற்றும் கண் சிவப்பை குணப்படுத்த உதவுகிறது.
கண்களில் அரிப்பு ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது? (How to prevent itching in eyes in Tamil?)
கண்களில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க, பின்வரும் சில தீர்வுகளைப் பயன்படுத்துங்கள் :
- நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டுமாயின், கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள்.
- வைட்டமின் ஏ மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.
- கண்களில் வலி உண்டானால், கண்களைத் தேய்க்க வேண்டாம். நிவாரணம் பெற பனிக்கட்டியைப் பயன்படுத்தவும்.
- புகை மற்றும் புகைப்பதைத் தவிர்க்கவும்.
- தூபக் குச்சிகளைத் தவிர்க்கவும்.
- ஒவ்வாமை கொண்ட எந்தவொரு பொருட்களின் பயன்பாட்டையும் தவிர்க்கவும்.
- தூசி மற்றும் அழுக்கிலிருந்து கண்களைப் பாதுகாக்கவும். கண்களைப் பாதுகாக்க கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள்.
- வீடு மற்றும் அலுவலகத்தில் சீரான வெப்பநிலையை பராமரிக்கவும். ஏர் கண்டிஷனர்கள் மற்றும் குளிரூட்டிகளில் பொருத்தமான வெப்பநிலையை அமைக்கவும்.
- ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக, ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
கண் அரிப்பு பிரச்சினையை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு கண் நிபுணரைத் (Ophthalmologist) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
டெல்லியில் சிறந்த கண் மருத்துவர்
சென்னையில் சிறந்த கண் மருத்துவர்

