எண்டோமெட்ரியல் (கருப்பை) புற்றுநோய் | Endometrial cancer (uterine cancer) in Tamil
ஜனவரி 25, 2021 Cancer Hub 1464 Viewsஎண்டோமெட்ரியல் புற்றுநோய் என்பது கருப்பையில் உண்டாகும் ஒரு வகை புற்றுநோயாகும். கருப்பை என்பது தாயின் வயிற்றில் கரு உருவாகி வளர்ச்சி பெறும் ஒரு உறுப்பாகும், இது உருண்டை வடிவிலான வெற்றிட பகுதியாகும். கருப்பையின் உள் சுவர்களில் (எண்டோமெட்ரியம்) உருவாகும் உயிரணுக்களில் எண்டோமெட்ரியல் புற்றுநோய் ஏற்படுகின்றது. எண்டோமெட்ரியல் புற்றுநோய் சில நேரங்களில் கருப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. கருப்பை சர்கோமா உள்ளிட்ட பிற வகையான புற்றுநோய்களும் கருப்பையில் உருவாகின்றன. எனினும், அவை எண்டோமெட்ரியல் புற்றுநோயைக் காட்டிலும் குறைவாகவே காணப்படுகின்றன. எண்டோமெட்ரியல் புற்றுநோய் பெரும்பாலும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்படுகிறது. ஏனெனில், இதன் விளைவாக மாதவிடாயின் போது அசாதாரண யோனி வவியுடன் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. எண்டோமெட்ரியல் புற்றுநோய் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டால், அறுவை சிகிச்சை மூலம் கருப்பையை அகற்றி இந்த புற்றுநோயை குணப்படுத்த இயலும். இன்றையப் பதிவில் எண்டோமெட்ரியல் புற்றுநோய் (கருப்பை புற்றுநோய்) பற்றிய விரிவானத் தகவல்களைப் பெறுவோம்.
- எண்டோமெட்ரியல் (கருப்பை) புற்றுநோயின் வகைகள் (Types of Endometrial cancer (uterine cancer) in Tamil)
- எண்டோமெட்ரியல் புற்றுநோயின் நிலைகள் (கருப்பை புற்றுநோய்) (Stages of Endometrial cancer (uterine cancer) in Tamil)
- எண்டோமெட்ரியல் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் (கருப்பை புற்றுநோய்) யாவை? (What are the causes of Endometrial cancer (uterine cancer) in Tamil?)
- எண்டோமெட்ரியல் புற்றுநோயின் (கருப்பை புற்றுநோய்) அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Endometrial cancer (uterine cancer) in Tamil?)
- எண்டோமெட்ரியல் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் (கருப்பை புற்றுநோய்) என்ன? (What are the treatments for Endometrial cancer (uterine cancer) in Tamil?)
எண்டோமெட்ரியல் புற்றுநோயின் வகைகள் (கருப்பை புற்றுநோய்) (Types of Endometrial cancer (uterine cancer) in Tamil)
கருப்பை புற்றுநோயில் முக்கியமாக இரண்டு வகைப்படும், அவை :
- கருப்பை சர்கோமா (uterine sarcoma) – கருப்பை சர்கோமா தசை அடுக்கு (மயோமெட்ரியம்) அல்லது கருப்பையின் துணை இணைப்பு திசுக்களில் உண்டாகிறது. கருப்பை லியோமியோசர்கோமா மற்றும் எண்டோமெட்ரியல் ஸ்ட்ரோமல் சர்கோமா ஆகியவை இதில் அடங்கும்.
- எண்டோமெட்ரியல் கார்சினோமா (Endometrial carcinomas) – இது கருப்பையின் உள் புறத்தில் ஏற்படும் புற்றுநோயாகும். பெரும்பான்மையான கருப்பை புற்றுநோய்கள் இந்த வகையே ஆகும். நுண்ணோக்கின் கீழ் உள்ள உயிரணுக்களைப் பொறுத்து எண்டோமெட்ரியல் கார்சினோமா வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
எண்டோமெட்ரியல் புற்றுநோயின் நிலைகள் (கருப்பை புற்றுநோய்) (Stages of Endometrial cancer (uterine cancer) in Tamil)
கருப்பை புற்றுநோயின் கட்டத்தைக் கண்டறிய, மருத்துவர்கள் சில இரத்த பரிசோதனைகளை செய்கின்றனர்.
- பின்வருவன கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் நிலைகளாகும், அவை :
- நிலை 1 – புற்றுநோயானது கருப்பையில் மட்டுமே ஏற்படுகிறது.
- நிலை 2 – புற்றுநோய் கருப்பை வாயில் பரவுகிறது.
- நிலை 3 – இடுப்பின் நிணநீர் பகுதி, யோனி மற்றும் கருப்பைகளில் புற்றுநோய் பரவுகிறது.
- நிலை 4 – சிறுநீர்ப்பை மற்றும் உடலின் பிற பாகங்களில் புற்றுநோய் பரவுகிறது.
எண்டோமெட்ரியல் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் (கருப்பை புற்றுநோய்) யாவை? (What are the causes of Endometrial cancer (uterine cancer) in Tamil?)
பின்வருவன, கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களாகும், அவை:
- பெரும்பாலும், எண்டோமெட்ரியல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் அறியப்படுவதில்லை. இருப்பினும், உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது, என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
- இந்த பாலியல் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்றதாழ்வுகள் உண்டாகும் போது, அது பெண்களின் எண்டோமெட்ரியத்தை பாதிக்கிறது. மற்றும் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கும் போது, எண்டோமெட்ரியல் செல்கள் பெருகுகின்றன.
- எண்டோமெட்ரியல் செல்களில் சில மரபணு மாற்றங்கள் ஏற்பட்டால், அவை புற்றுநோய் செல்களாக மாறுகின்றன. இந்த புற்றுநோய் செல்கள் வேகமாக வளர்ந்து ஒரு கட்டியை உருவாக்குகிறது.
- சாதாரண எண்டோமெட்ரியல் செல்கள் புற்றுநோய் செல்களாக மாற்றம் அடைவதற்கான காரணங்களை, ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
எண்டோமெட்ரியல் புற்றுநோயின் (கருப்பை புற்றுநோய்) அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Endometrial cancer (uterine cancer) in Tamil?)
எண்டோமெட்ரியல் புற்றுநோயின் பொதுவான அறிகுறி அசாதாரண யோனி வலி மற்றும் மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஆகியவை ஆகும். இது, மேலும் சில அறிகுறிகளை கொண்டுள்ளது. அவை:
- மாதவிடாய் காலத்தில் அதிக கனம்.
- ஒரு மாதவிடாய் சுழற்சிகளுக்கு இடையிலேயே யோனியில் இரத்தப்போக்கு உண்டாகிறது.
- மாதவிடாய் நின்ற பிறகு யோனியில் இரத்தப்போக்கு என்பது எண்டோமெட்ரியல் புற்றுநோயின் அறிகுறியாகும்.
- யோனியில் இருந்து நீர் அல்லது இரத்த வெளியேற்றம்.
- அடிவயிறு அல்லது இடுப்பில் அதிக வலி.
- உடலுறவின் போது வலி.
- இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் எந்தவொரு தீவிரமான நிலையையும் குறிப்பதில்லை. எனினும், இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அவற்றை ஆராய்வது முக்கியமாகும்.
- பெரும்பாலும், மாதவிடாயின் போது யோனியில் அசாதாரண இரத்தப்போக்கு உண்டாவது மாதவிடாய் முடிவு அல்லது பிற புற்றுநோய் அல்லாத மாதவிடாய் தொடர்பான சிக்கல்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனினும் சில சந்தர்ப்பங்களில், இது எண்டோமெட்ரியல் புற்றுநோய் அல்லது பிற வகையான மகளிர் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். உங்கள் அறிகுறிகளின் காரணத்தை அடையாளம் காணவும், தேவைப்பட்டால் பொருத்தமான சிகிச்சைகளை பெறவும், ஒரு மருத்துவரின் உதவியை அணுகுங்கள்.
எண்டோமெட்ரியல் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் (கருப்பை புற்றுநோய்) என்ன? (What are the treatments for Endometrial cancer (uterine cancer) in Tamil?)
எண்டோமெட்ரியல் புற்றுநோய்க்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் உள்ளன. எனினும், பாதிக்கப்பட்டவரின் தற்போதைய உடல் நலம், நோயாளியின் தனிப்பட்ட விருப்பம், புற்றுநோயின் துணை வகை மற்றும் புற்றுநோயினு நிலையைப் பொறுத்தே இதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் திட்டமிடுகின்றனர். ஒவ்வொரு சிகிச்சை முறையிலும் சில சாத்தியமான நன்மைகளையும் அபாயங்களையும் உள்ளன, இது குறித்து உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்குவார்.
- அறுவை சிகிச்சை (Surgery) – எண்டோமெட்ரியல் புற்றுநோய்க்கு பெரும்பாலும் ஹைஸ்டெரிக்டோமி (hysterectomy) எனப்படும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. மற்றும் பைலேட்ரல் சல்பிங்கோ–ஓஃபோரெக்டோமி (பி.எஸ்.ஓ) எனப்படும் அறுவை சிகிச்சைமுறையில் மருத்துவர்கள் கருப்பைகள் மற்றும் ஃபலோபியன் குழாய்களையும் அகற்றுகின்றனர். பெரும்பாலும், கருப்பை நீக்கம் (hysterectomy) மற்றும் பிஎஸ்ஓ (B.S.O) பொதுவாக ஒரே அறுவை சிகிச்சையில் செய்யப்படுகின்றன. நிணநீர் முனைகளில் புற்றுநோயின் பரவல் உறுதி செய்யப்பட்டால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது நிணநீர் முனைகளையும் அகற்றுகின்றனர். இந்த செயல்முறையை லிம்ஃபடெனக்டொமி (lymphadenectomy) அல்லது நிணநீர் முனை டிஸக்ஷென் என அழைக்கின்றனர். புற்றுநோய் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவியிருந்தால், அறுவை சிகிச்சை நிபுணர் கூடுதலாக சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கலாம்.
- கதிர்வீச்சு சிகிச்சை (Radiation treatment) – கதிர்வீச்சு சிகிச்சை முறையில் மருத்துவர்கள் புற்றுநோய் செல்களைக் கொல்ல உயர் ஆற்றல் உடைய கதிர்வீச்சுகளை பயன்படுத்துகின்றனர் எண்டோமெட்ரியல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க கதிர்வீச்சு சிகிச்சையில் முறையில் இரண்டு வழிகள் உள்ளன, அவை: வெளிப்புற கற்றை கதிர்வீச்சு சிகிச்சை, இதில் ஓர் வெளிப்புற இயந்திரத்தின் உதவியைக் கொண்டு உடலுக்கு வெளியே இருந்து கருப்பை வரை கதிர்வீச்சு கற்றைகளை செலுத்துகின்றனர். உள் கதிர்வீச்சு சிகிச்சை, இதில் மருத்துவர்கள் ஓர் கதிரியக்க பொருளை நோயாளின் யோனி அல்லது கருப்பையின் உள்ளே வைக்கிறார்கள். இது பிராச்சிதெரபி என்றும் அழைக்கப்படுகிறது. சில சமயங்களில் உங்கள் மருத்துவர் அறுவை சிகிச்சைக்குப் பின்னர், கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கலாம். இது அறுவை சிகிச்சைக்குப் பிறகும் உடலில் எஞ்சியிருக்கக்கூடிய புற்றுநோய் செல்களை கொல்ல உதவுகிறது. அரிதான சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சைக்கு முன்னரே மருத்துவர்கள் கதிர்வீச்சு சிகிச்சையை பரிந்துரைக்கலாம். இதன் மூலம் புற்றுநோய் கட்டியை எளிதில் சுருங்கச் செய்ய முடிகிறது. உங்களின் பிற மருத்துவ நிலைகள் அல்லது உடல் ஆரோக்கியம் காரணமாக நீங்கள் அறுவை சிகிச்சை செய்ய முடியாவிட்டால், உங்களுக்கு மருத்துவர் கதிர்வீச்சு சிகிச்சையை முக்கிய சிகிச்சையாக பரிந்துரைக்கலாம்.
- கீமோதெரபி (Chemotherapy) – புற்றுநோய் செல்களைக் கொல்ல மருந்துகளைப் பயன்படுத்தும் முறையை கீமோதெரபி என்கின்றனர். சில வகையான கீமோதெரபி சிகிச்சையில் ஒரு வகையான மருந்து மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. மற்றும் வேறு சில கீமோதெரபி சிகிச்சைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளின் கலவையை உபயோகிக்கின்றனர். நீங்கள் பெறும் கீமோதெரபி வகையைப் பொறுத்து, மருந்துகளை டேப்லெட் வடிவத்திலோ அல்லது இன்ட்ரெவனஸ் (IV) வழியாகவோ வழங்கப்படுகின்றன. உடலின் மற்ற பகுதிகளில் எண்டோமெட்ரியல் புற்றுநோய் பரவியிருந்தால் அதற்கான கீமோதெரபி மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரைக்கலாம். மேற்கூறிய சிகிச்சை முறைகளை பெற்ற பின்னரும் எண்டோமெட்ரியல் புற்றுநோய்களுக்கு முழுமையான தீர்வை அளிக்க மருத்துவர்கள், இந்த சிகிச்சை அணுகுமுறையை பரிந்துரைக்கலாம்.
- ஹார்மோன் சிகிச்சை (Hormone therapy) – ஹார்மோன் சிகிச்சையானது உடலின் ஹார்மோன் அளவை மாற்ற அல்லது சில ஹார்மோன்களின் உட்பத்தியைத் தடுக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி அளிக்கபடுகிறது. இது எண்டோமெட்ரியல் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை குறைக்க உதவுகிறது. மூன்றாம் நிலை அல்லது நான்காம் நிலை எண்டோமெட்ரியல் புற்றுநோய்க்கள் ஏற்படும் போது ஹார்மோன் சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். சிகிச்சையின் பின்னர் திரும்பிய எண்டோமெட்ரியல் புற்றுநோய்களுக்கும் இவை பரிந்துரைக்கப்படலாம். ஹார்மோன் சிகிச்சை பெரும்பாலும் கீமோதெரபியுடன் இணைந்தே வழங்கப்படுகிறது.
எண்டோமெட்ரியல் அல்லது கருப்பை புற்றுநோய் பற்றிய கூடுதல் தகவல்களையும் சிகிச்சையையும் நீங்கள் பெற விரும்பினால், புற்றுநோயியல் மருத்துவரைத் (Oncologist) தொடர்பு கொள்ளுங்கள்.
மும்பையில் சிறந்த புற்றுநோயியல் மருத்துவர்
சென்னையில் சிறந்த புற்றுநோயியல் மருத்துவர்

