வாழைப்பழத்தின் நன்மைகள் | Benefits of eating bananas in Tamil
மார்ச் 8, 2021 Lifestyle Diseases 2646 Viewsவாழைப்பழம், சந்தைகளில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பழமாகும், மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது இதன் விலையும் குறைவாகவே உள்ளது. வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகிய வைட்டமின்களும், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், செலினியம், தாமிரம், தியாமின், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு ஆகிய தாதுக்களும் உள்ளன. வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. இன்றையப் பதிவில் வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
- வாழைப்பழம் சாப்பிடுவதால் விளையும் நன்மைகள் யாவை? (What are the benefits of eating bananas in Tamil?)
- வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் யாவை? (What are the side effects of eating bananas in Tamil?)
- வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம் எது? (What is the correct time to eat banana in Tamil?)
- பெண்கள் ஏன் வாழைப்பழம் சாப்பிட வேண்டும்? (Why should women eat banana in Tamil?)
வாழைப்பழம் சாப்பிடுவதால் விளையும் நன்மைகள் யாவை? (What are the benefits of eating bananas in Tamil?)
- வாழைப்பழம் எரிச்சல் உணர்வை சமாளிக்க உதவுகிறது மற்றும் அதிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
- உடல் எடையைக் குறைக்க வாழைப்பழம் பயனுள்ளதாக அமைகிறது. (மேலும் வாசிக்க- உடல் பருமன் என்றால் என்ன, அதை எவ்வாறு தடுப்பது)
- வாழைப்பழம் சாப்பிடுவது கண்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் கண்கள் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது.
- வாழைப்பழத்தில் இரத்தத்தை சுத்திகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இது இதயத்திற்கும் நன்மை பயக்கிறது.
- அல்சர் நோயாளிகளுக்கு வாழைப்பழம் பயனுள்ளதாக இருக்கிறது.
- வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் இரைப்பையின் அமிலத்தன்மையைக் (acidity) குறைத்து நிவாரணம் பெற முடிகிறது.
- வாழைப்பழத்தை தவறாமல் உட்கொள்வதன் மூலம், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க இயலும்.
- இது பலவீனத்தைத் தடுத்து, உடலை பலப்படுத்துகிறது.
- வாழைப்பழம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
- இது உடல் வலிக்கும் நன்மை பயக்கிறது.
வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் யாவை? (What are the side effects of eating bananas in Tamil?)
வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. எனினும், இதன் உட்கொள்ளல் அதிகமாகும் போது, இது உடலில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், அவை:
- வாழைப்பழத்தில் அதிகபட்சமாக 100 முதல் 120 கலோரிகள் உள்ளன. ஆகவே, வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
- வாழைப்பழத்தின் துகள்கள் பற்களில் சிக்கிக்கொண்டால், அது பற்கள் தொடர்பான வியாதிகளுக்கு வழிவகுக்கிறது.
- வாழைப்பழத்தில் அதிக அளவில் அமினோ அமிலங்கள் உள்ளன, இதனை கட்டுப்பாடில்லாமல் எடுத்துக் கொள்ளும் போது, இது தலைவலிக்கு வழிவகுக்கிறது.
- இரைப்பை பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வாழைப்பழத்தின் உட்கொள்ளல் தீங்கு விளைவிக்கக்கூடும்.
வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம் எது? (What is the correct time to eat banana in Tamil?)
- தீவிரமான உடல் செயல்பாடுகளுக்குப் பிறகு, உடலில் ஆற்றல் குறைவதால் உடல் சோர்வடைகிறது. இத்தகைய சமயத்தில், வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் நம் உடலால் இழந்த சக்தியை மீண்டும் பெற முடிகிறது.
- வாழைப்பழத்தில் உடலை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை நீக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மக்கள் மன அழுத்தமும் கவலையும் அடையும் போது, ஒரு வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.
- மாணவர்கள் பரீட்சைக்கு முன்னர் வாழைப்பழத்தை கட்டாயமாக சாப்பிட வேண்டும். ஏனெனில், இதனால் அவர்களின் மூளை வேகமாகவும் திறம்படவும் செயல்படுகிறது, என சிலர் கூறுகிறார்கள்.
- காலை, மதிய மற்றும் இரவு உணவிற்கு பின்னரே வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.
- இதனை வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது.
பெண்கள் ஏன் வாழைப்பழம் சாப்பிட வேண்டும்? (Why should women eat banana in Tamil?)
- கர்ப்பிணிப் பெண்கள் தினசரி ஒரு வாழைப்பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும், ஏனெனில் இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆரோக்கியமானதாகும்.
- இரத்த சோகை உள்ள பெண்களின் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க வாழைப்பழத்தைச் சாப்பிட வேண்டும்.
- மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
- வாழைப்பழம் சாப்பிடுவதால் செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் குறைகின்றன.
- வாழைப்பழத்தை எண்ணெயுடன் சேர்த்து தலைமுடியில் தடவினால் முடி உதிர்தல் குறைகிறது. (மேலும் வாசிக்க- முடி உதிர்தல் என்றால் என்ன)
- வாழைப்பழ சாலட் சாப்பிடுவதால் சருமத்தின் தரம் மற்றும் சரும அமைப்பு மேம்படுகின்றது.
- கண்களின் கீழ் உள்ள கருவளையங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்க வாழைப்பழம் உதவுகிறது.
வாழைப்பழத்தை உட்கொள்வதினால் ஏதேனும் உடல்நலம் தொடர்பான சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிட்டால், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
சென்னையில் சிறந்த பொது மருத்துவர்
