எண்டோஸ்கோபி என்றால் என்ன | What is Endoscopy in Tamil

ஜனவரி 19, 2021 Lifestyle Diseases 3461 Views

English हिन्दी Bengali Tamil

பெரும்பாலும், நோய்வாய்ப்படுபவர்களின் உடலில் உண்டாகும் அறிகுறிகளைப் பொறுத்து  மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சில மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். எனினும், நோயின் தாக்கத்தினால் உண்டாகும் பிரச்சினைகள் கடுமையானதாக  இருந்தால், மருத்துவர்கள் நோயாளிகளிடம் சில பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர். ஏனெனில், உடலின் வெளிப்புறத்தில் உண்டாகும் பிரச்சினைகளை எளிதில் கண்டறிய முடிகிறது. எனினும், உள்புற பிரச்சினைகளைக் கண்டறிய சில சிறப்பு பரிசோதனை நடைமுறைகள் தேவைப்படுகிறது. எண்டோஸ்கோபி என்பது அத்தகைய ஒரு பரிசோதனை முறையாகும், இதன் மூலம் மருத்துவர்கள் உடலுக்குள் உள்ள உறுப்புகளையும், உடல் பாகங்களையும் ஒரு மருத்துவ சாதனத்தின் பயன்கொண்டு கண்காணிக்கின்றனர். இந்த கருவி உடலின் உள் உறுப்புகளின் தெளிவான படங்களை காணப் பயன்படுகிறது. மேலும், இந்த சாதனத்தின் சிறப்பு யாதெனில், உடலில் எந்த கீறல்களும் செய்யாமல் இதன் உதவி கொண்டு உடலின் உள் உறுப்புகளைக் காண முடிகிறது. இன்றையக் கட்டுரையில் எண்டோஸ்கோபி என்றால் என்ன ? எண்டோஸ்கோபியின் வகைகள், எண்டோஸ்கோபி எவ்வாறு செய்யப்படுகிறது என்பது குறித்து சில தகவல்களை விரிவாகக் கூறுகிறோம்.

  • எண்டோஸ்கோபியின் வகைகள் (Types of Endoscopy in Tamil)
  • எண்டோஸ்கோபி செய்வதற்கான நோக்கம் என்ன? (What is the purpose of Endoscopy in Tamil?)
  • எண்டோஸ்கோபி எவ்வாறு செய்யப்படுகிறது? (How does Endoscopy done in Tamil?)
  • எண்டோஸ்கோபியின் அபாயங்கள் யாவை? (What are the risks of Endoscopy in Tamil?)
  • எண்டோஸ்கோபியின் முடிவுகள் தெரிவிக்கும் தகவல்கள் என்ன? (What does the result of Endoscopy mean in Tamil?)

எண்டோஸ்கோபியின் வகைகள் (Types of Endoscopy in Tamil)

உடலின் உட்புற உறுப்புகளில் உண்டாகும்   சிக்கல்களைக் கண்டறிய எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படுகிறது. எண்டோஸ்கோபியில் பல வகைகள் உள்ளன, அவை:

  • மீடியாஸ்டினோஸ்கோபி (Mediastinoscopy) – நுரையீரலுக்கு இடையிலான மைய பகுதியை ஆய்வு செய்ய தொரசிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த வகை எண்டோஸ்கோபியை  பயன்படுத்துகின்றனர்.
  • லாரிங்கோஸ்கோபி (Laryngoscopy) – தொண்டையை பரிசோதிக்க நோயாளியின் வாய்வழியே இந்த கருவி செலுத்தப்படுகிறது.
  • ப்ரோன்கோஸ்கோபி (Bronchoscopy) – நுரையீரலை ஆய்வு செய்ய, இந்த செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.
  • தோராகோஸ்கோபி / ப்ளூரோஸ்கோபி (Thoracoscopy / Pleuroscopy) – நுரையீரலின் மேற்பரப்புகள் மற்றும் பிளுரல் பாகங்களை ஆய்வு செய்ய இந்த செயல்முறை பயன்படுத்தப்படுகிறது
  • லாபரோஸ்கோபி (Laparoscopy) – அடிவயிற்றுக்குள் உள்ள உறுப்புகளை ஆய்வு செய்ய, இந்த செயல்முறை பயன்படுத்தப்படுகிறது
  • ஆர்த்ரோஸ்கோபி (Arthroscopy) – எலும்புகளின் மூட்டுகளை ஆய்வு செய்ய, இந்த செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.
  • கொலோனோஸ்கோபி (Colonoscopy) – இந்த செயல்முறை குடல் மற்றும் மலக்குடல் பரிசோதனைக்கு உதவுகிறது.
  • ஹிஸ்டரோஸ்கோபி (Hysteroscopy) –  பெண்களின் கருப்பையை ஆய்வு செய்ய, இந்த செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.
  • என்டோரோஸ்கோபி (Enteroscopy) – சிறுகுடலை ஆய்வு செய்ய, இந்த செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.
  • சிஸ்டோஸ்கோபி (Cystoscopy) – சிறுநீர்க்குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் அதனைச் சரிபார்க்க இந்த செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.
  • யூரெட்டோரோஸ்கோபி (Ureteroscopy) – சிறுநீர்க்குழாயை ஆய்வு செய்ய இந்த செயல்முறை, பயன்படுத்தப்படுகிறது.
  • சிக்மாய்டோஸ்கோபி (Sigmoidoscopy) – ஆசனவாய்   மற்றும் பெருங்குடலை ஆய்வு செய்ய, இந்த செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.
  • மேல் இரைப்பை குடல் எண்டோஸ்கோபி (Upper gastrointestinal Endoscopy) – இந்த செயல்முறை குடல் குழாயின் உள்ளே பார்க்க பயன்படுகிறது.

எண்டோஸ்கோபி செய்வதற்கான நோக்கம் என்ன? (What is the purpose of Endoscopy in Tamil?)

ஒரு நபரின் உடலில் உள்ள உள் உறுப்புகள் மற்றும் பாகங்களை பரிசோதிக்க எண்டோஸ்கோபி பரிந்துரைக்கப்படுகிறது.

  • அசாதாரண அறிகுறிகளின் காரணத்தை தீர்மானிக்க.
  • எக்ஸ் ரேகதிர்களில் காணப்படும் சிறு குடலில் உண்டாகும் சிக்கல்களை தெளிவாகக் காண எண்டோஸ்கோபி உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • எண்டோஸ்கோபி சாதனம் பெருங்குடலில்   புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படுகின்றது.
  • அடிவயிற்றுக்குள் உண்டாகும் சிக்கல்களைக் காணவும் எண்டோஸ்கோபி சாதனம்  பயன்படுத்தப்படுகிறது.
  • செரிமான அமைப்பு தொடர்பான சிக்கலை உறுதிப்படுத்த எண்டோஸ்கோபி செய்யப்படுகிறது.
  • அறுவை சிகிச்சையின் போது  திசுக்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதன் மூலம், காயத்தை குணப்படுத்தவும் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படுகிறது.
  • முக்கியமாக வயிறு தொடர்பான நோய் அறிகுறிகளை கண்டறிய எண்டோஸ்கோபி பரிசோதனை செய்யப்படுகிறது.

எண்டோஸ்கோபி எப்போது செய்யப்பட வேண்டும் –

மலத்தில் இரத்தப்போக்கு, திடீர் எடை இழப்பு, நாள்பட்ட வயிற்று வலி, உணவை விழுங்குவதில் சிரமம், அதிகப்படியான வயிற்றுப்போக்கு, மார்பு வலி போன்ற அறிகுறிகளை எதிர்கொள்பவர்கள் எண்டோஸ்கோபியை மேற்கொள்ள வேண்டும்.

எண்டோஸ்கோபி எவ்வாறு செய்யப்படுகிறது? (How does Endoscopy done in Tamil?)

  • மருத்துவர்கள் எண்டோஸ்கோபி செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், எண்டோஸ்கோபி செய்ய வேண்டிய பகுதியை கவனமாக ஆராயகின்றனர். எண்டோஸ்கோபி செயல்முறை அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திலேயே முடிகிறது. எனவே, நோயாளிகள்  நாள் முழுவதும் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய அவசியமில்லை.
  • எண்டோஸ்கோபி செயல்முறை வலிமிகுந்ததல்ல. எனினும், இந்த செயல்முறையின் போது சிலர் லேசான வலியை அனுபவிக்கின்றனர்
  • எண்டோஸ்கோபியை மேற்கொள்வதற்கு முன் நோயாளிக்கு பொது மயக்க மருந்து வழங்கப்படுகின்றது. இதன் விளைவாக, அந்த பகுதி உணர்ச்சியற்று இருக்கிறது. மேலும்நோயாளி எந்தவொரு வலி மற்றும் அசௌகரியத்தை உணருவதில்லை. மற்றும், நோயாளி நிதானத்துடன் இருக்க ஸெடேடிவ் மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன.
  • மருத்துவர் நோயாளியின் உடலுக்குள் எண்டோஸ்கோப்பை கவனமாக செலுத்துகிறார். இதனை வழக்கமாக நோயாளியின் தொண்டை, சிறுநீர்க்குழாய் அல்லது ஆசனவாய்  ஆகிய வழிகளில் நோயாளின் உடலுக்குள் செலுத்தி, ஏதேனும் அசாதாரணங்கள் அல்லது சிக்கல்கள் நிறைந்த பாகங்களின்  தெளிவான படங்களை பெற்ற பின், அதற்கேற்ப சிகிச்சைகளை  திட்டமிடுகின்றனர்.

எண்டோஸ்கோபியின் அபாயங்கள் என்ன? (What are the risks of Endoscopy in Tamil?)

எண்டோஸ்கோபி நடைமுறையினால் குறிப்பிடத்தக்க ஆபத்துகள் எதுவும் விளைவதில்லை. எனினும், சில கடுமையான சூழ்நிலைகளில் நோயாளிகளுக்கு சில ஆபத்துகள் ஏற்படம் வாய்ப்புகள் உள்ளன. அவை:

  • பொது மயக்க மருந்து காரணமாக உடலின் ஏதேனும் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம்.
  • உடலில் அதிகப்படியான இரத்தப்போக்கு.
  • பரிசோதனைக்குப் பின் வயிறு கனமாக இருக்கும்.
  • எண்டோஸ்கோபி செய்யப்படுவதினால் ஏதேனும்  தொற்று உண்டாகலாம்.
  • பொது மயக்க மருந்து காரணமாக தொண்டையில் உணர்வின்மை.
  • எண்டோஸ்கோபி செயல்முறையின் காரணமாக உள் உறுப்புகளில் துளைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

எண்டோஸ்கோபியின் விளைவாக ஒரு நபருக்குமூச்சுத் திணறல், அடர் நிற மலம், வாந்தியில் இரத்தம், மார்பு வலி, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

எண்டோஸ்கோபியின் முடிவுகள் தகவல்கள் யாவை? (What does the result of Endoscopy mean in Tamil?)

எண்டோஸ்கோபி பரிசோதனையின் முடிவுகள் நோயாளியின் நிலையைப் பொறுத்ததாகும். மேலும், எண்டோஸ்கோபியின் முடிவுகள் பரிசோதனை முடிந்த சில மணி நேரங்களிலேயே பெறபடுகின்றன. இருப்பினும், ஆய்வகத்தில் திசு மாதிரிகளைப் பரிசோதித்து முடிவுகளைப் பெற நேரம் எடுக்கிறது.

எண்டோஸ்கோபி பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், ஒரு  காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட்டைத் (Gastroenterologist) தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள்  நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில்அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


குர்கானில் சிறந்த காஸ்ட்ரோஎன்டிரோலஜிஸ்ட்

மும்பையில் சிறந்த காஸ்ட்ரோஎன்டிரோலஜிஸ்ட்

பெங்களூரில்  சிறந்த காஸ்ட்ரோஎன்டிரோலஜிஸ்ட்

சென்னையில் சிறந்த காஸ்ட்ரோஎன்டிரோலஜிஸ்ட்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha