ஆண்களில் ஃபன்ங்கள் தொற்று | Fungal infection in men in Tamil
ஜனவரி 21, 2021 Mens Health 1705 Viewsஆண்கள், பெண்கள் என இருபாலினருக்கும் ஃபன்ங்கள் தொற்று ஏற்படுகின்றது. எனினும், பெரும்பான்மையான ஃபன்ங்கள் தொற்றுகள் பெண்களில் காணப்படுகின்றன. ஆண்களை த்ரஷ் என்னும் ஃபன்ங்கள் தொற்று பாதிக்கிறது. இந்த தொற்று கேண்டிடா அல்பிகான்ஸ் (candida albicans) நோய்களை ஏற்படுத்தும் ஃபன்ங்கள் தொற்றுடன் ஒன்றியுள்ளது. ஆண்களில், பொதுவாக தோல், வாய், தொண்டை, பிறப்புறுப்புகளில் இந்த நோய்த்தொற்றுகள் உருவாகின்றன. இந்த நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க சரியான நேரத்தில் இதற்கான சிகிச்சையை பெற வேண்டியது அவசியமாகிறது. இந்தக் கட்டுரையில் ஆண்களுக்கு உண்டாகும் ஃபன்ங்கள் தொற்று பற்றிய தகவல்களை விரிவாகக் கூறுகிறோம்.
- ஆண்களில் ஃபன்ங்கள் நோய்தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of Fungal infection in men in Tamil?)
- ஆண்களில் உண்டாகும் ஃபன்ங்கள் தொற்றுகளின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Fungal infection in men in Tamil?)
- ஃபன்கள் தொற்றுக்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for Fungal infection in men in Tamil?)
ஆண்களில் ஃபன்ங்கள் நோய்தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of Fungal infection in Tamil?)
ஆண்களில் ஃபன்ங்கள் தொற்று ஏற்படுவது இயல்பானதாகும். சிலர், ஆண்கள் அதிக அளவு பீர் அல்லது பால் பொருட்களை உட்கொள்வதன் விளைவாக, இந்தத் தொற்றுநோய் வளர்ச்சி அதிகரிக்கிறது என்று நம்புகிறார்கள். இதன் காரணமாக, ஆண் பிறப்புறுப்புகளில் ஃபன்ங்கள் தொற்று பரவத் தொடங்குகிறது. ஆண்களில் ஃபன்ங்கள் தொற்று ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பாதிக்கப்பட்ட நபருடன் பாலியல் தொடர்பு கொள்வதாகும். இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பாலியல் தொடர்பு கொள்வதன் மூலம் ஒரு ஆணுக்கு ஃபன்ங்கள் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. பெரும்பாலும், பாதுகாப்பற்ற உடலுறவினால் ஃபன்ங்கள் தொற்று ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகமாக உள்ளது. ஃபன்ங்கள் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. மற்றும் இந்தத்தொற்று பரவல் குறைவாகவே உள்ளது. இதனால் ஃபன்ங்கள் தொற்று எஸ்.டி.ஐ.களாக கருதப்படுவதில்லை.
ஆண்களில் உண்டாகும் ஃபன்ங்கள் தொற்றின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Fungal infection in men in Tamil?)
ஈஸ்ட் மற்றும் கேண்டிடா நோய்த்தொற்றுகள் முக்கியமாக பெண்களை பாதிக்கின்றன. எனினும், சில சமயங்களில் ஆண்களும் இந்த நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. ஆண்களில் ஃபன்ங்கள் தொற்று ஏற்படும் போது, பல அறிகுறிகள் தென்படுகின்றன. அவை :
- பிறப்புறுப்பு ஃபன்ங்கள் தொற்று ஈஸ்ட் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது.
- பிறப்புறுப்புகளில் வாடை.
- உடலுறவின் போது அசௌகரியம்.
- ஆண்குறியில் அரிப்பு
- ஆண்குறியின் நுனியில் எரிச்சல்.
- சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
- பாலனிடிஸ் ஃபன்ங்கள் தொற்றும் ஈஸ்ட் தொற்றுநோயை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
பாலனிடிஸ் ஃபன்ங்கள் தொற்றின் அறிகுறிகள் மாறுபடுகிறது. அவை :
- ஆண்குறியின் முன்தோல் பகுதியில் வலி.
- ஆண்குறியின் நுனியில் அரிப்பு.
- நோய்த்தொற்றின் இடத்தில் ஒரு வெள்ளை அடுக்கு உருவாகுகிறது.
- பாதிக்கப்பட்ட பகுதி பிரகாசமாகவும் வெளிர் நிறமாகவும் தோன்றுகிறது.
ஃபன்ங்கள் நோய் தொற்றுக்கான சிகிச்சை என்ன? (What are treatments for Fungal infection in men in Tamil?)
ஃபன்ங்கள் நோய் தொற்று தானாகவே குணமடைந்துவிடும், இதற்கு குறிப்பிட்ட எந்த சிகிச்சையும் தேவைபடுவதில்லை. இருப்பினும், இதன் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சையை தொடங்கிவிட்டால், இதனை விரைவாக குணப்படுத்த இயலும். மேலும், சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயங்களும் உள்ளன. ஆண்களில் ஃபன்ங்கள் நோய் தொற்று ஏற்பட்டால் ஒரு மருத்துவரை அணுகி தொற்றுநோயைப் பரிசோதிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் நோய்த்தொற்றுக்கான துல்லியமான சிகிச்சையைப் பெற முடிகிறது. மேலும், சில சமயங்களில் மருத்துவர்கள் சில வீட்டு வைத்தியங்களையும் பரிந்துரைக்கின்றனர். இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் ஃபன்ங்கள் நோய் தொற்றை எளிதில் நீக்க இயலும். அவை :
- ஆண் ஃபன்ங்கள் தொற்றுநோய்களில் தயிரின் பயன்பாடு (Uses of curd in male fungal infection)- தயிரில் இயற்கையாகவே புரோபயாடிக்குகள் உள்ளன. ஃபன்ங்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் நிச்சயமாக உணவில் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தயிர் மிகுந்த நன்மை பயக்கிறது. தயிரில் கெட்ட பாக்டீரியாக்களைக் கொல்லும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே, தயிரை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்வதன் மூலம் ஃபன்ங்கள் தொற்றுகலிருந்து நிவாரணம் பெற முடிகிறது.
- தேயிலை மர எண்ணெயின் பயன்பாடு (Uses of tea tree oil) – பெரும்பாலும், தோல் நோய்களை குணப்படுத்த தேயிலை மர எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. சில ஆய்வுகளின்படி, இந்த எண்ணெயில் ஆன்ட்டி ஃப்பன்ங்கள், ஆன்டிவைரல் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை ஆணின் பிறப்புறுப்புகளில் உண்டாகும் ஃபன்ங்கள் தொற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன. மேலும், ஆண்குறி மீது தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் ஃபன்ங்கள் நோய் தொற்று குணமாகிறது. தேயிலை மர எண்ணெயில் ஆலிவ் எண்ணெயையும் கலந்து பயன்படுத்தவும்.
- ஆப்பில் வினிகரின் பயன்பாடு (Uses of apple vinegar)- ஆப்பிள் வினிகர் ஈஸ்ட் தொற்று மற்றும் கேண்டிடா தொற்றுநோயைத் தடுப்பதில் நன்மை பயக்கிறது. இது ஆன்ட்டி பாக்டீரியல் எதிர்ப்பு மற்றும் ஆன்ட்டி ஃப்பன்ங்கள் பண்புகளைக் கொண்டுள்ளது. சிலர் ஆப்பிள் வினிகரின் வாசனையை விரும்புவதில்லை. எனினும் பயன்பாட்டின் போது, அதன் வாசனை நீண்ட காலம் நீடிக்காது. ஆப்பிள் வினிகரில் தண்ணீர் சேர்த்து பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்தவும். இவ்வாறு செய்வதன் மூலம் எரிச்சல் உணர்வு குறைகிறது.
- பூண்டின் பயன்பாடு (Uses of garlic) – பூண்டு இயற்கையாகவே ஆன்ட்டி ஃப்பன்ங்கள் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது தவிர, பூண்டில் ஃபன்ங்கள் தொற்றுநோயைத் தடுக்க உதவும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சில ஆய்வுகளின்படி, பூண்டுடன் வோக்கோசு (Parsley) கலந்து ஒரு பேஸ்டைத் தயாரித்து ஃபன்ங்கள் தொற்று மீது தடவுவதன் மூலம் தொற்றுநோயிலிருந்து நிவாரணம் பெற இயலும். ஃபன்ங்கள் தொற்று உள்ள ஆண்கள் தங்கள் உணவில் பூண்டு சேர்த்து கொள்ள வேண்டும்.
ஃபன்ங்கள் நோய் தொற்று குறித்து கூடுதல் தகவல்களையும், அதற்கான சிகிச்சையையும் நீங்கள் பெற விரும்பினால், ஒரு தோல் மருத்துவரைத் (Dermatologist) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
மும்பையில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்
டெல்லியில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்



