பால்வினை நோய்கள் | Sexually transmitted diseases in Tamil
ஜனவரி 26, 2021 Mens Health 1802 Viewsபாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகளின் விளைவாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் நோய்களை பால்வினை நோய்கள் என்கின்றனர். இதனை, ஆங்கிலத்தில் எஸ்.டி.டி.கள் (Sexually transmitted diseases) என்று அழைக்கின்றனர். இவை ஆண்கள், பெண்கள் என இருபாலினருக்கும் ஏற்படக்கூடிய பாலியல் ரீதியாக பரவக்கூடிய நோய்களாகும். ஏதேனும், பால்வினை நோயுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற யோனி, குத அல்லது வாய்வழி உடலுறவு கொள்வதன் மூலம் இந்த நோய்கள் பரவுகின்றன. இவை, வெனரல் நோய் (வி.டி) என்றும் அழைக்கப்படுகின்றது. மேலும், பாலியல் தொடர்பு காரணமாக மட்டுமே பால்வினை நோய்கள் பரவுகின்றன என்று எண்ணுவது தவறு. பாதிக்கப்பட்ட நபர்கள் உபயோகித்த ஊசிகளை பயன்படுத்துவது மற்றும் தாய்ப்பால் மூலமாகவும் தாயிடமிருந்து பால்வினை நோய்கள் குழந்தைகளுக்கு பரவக்கூடும். இந்த நோய்கள் பல அறிகுறிகளைக் கொண்டுள்ளன, அவை பாதிக்கப்பட்டவர்களின் உடலில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. நோயாளிகளின் அறிகுறிகளை பொறுத்தே மருத்துவர்கள் இதற்கான சிகிச்சையைத் திட்டமிடுகிறார்கள். இன்றையக் கட்டுரையில் பால்வினை நோய்கள் பற்றிய விரிவான தகவல்களைக் கூறுகிறோம்.
- பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் அறிகுறிகள் யாவை (எஸ்.டி.டி)? (What are the symptoms of Sexually transmitted diseases (S.T.D) in Tamil?)
- எஸ்.டி.டி களின் வகைகள் (Types of STD)
- பாலியல் ரீதியாக பரவும் நோய்களை (எஸ்.டி.டி) எவ்வாறு தடுப்பது? (How to Prevent Sexually transmitted diseases in Tamil?)
பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் அறிகுறிகள் என்ன (எஸ்.டி.டி)? (What are the symptoms of Sexually transmitted diseases in Tamil?)
பெண்களில் உண்டாகும் பால்வினை நோய்களின் அறிகுறிகள் (Symptoms of STD in females) – பல சமயங்களில், பால்வினை நோய்கள் பெண்களில் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை. பின்வருவன, பெண்களில் உண்டாகும் பால்வினை நோய்களின் பொதுவான அறிகுறிகளாகும், அவை:
- செக்ஸ் அல்லது சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது அசௌகரிய உணர்வு.
- வால்வா, ஆசனவாய், பிட்டம், தொடைகள் அல்லது வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் காயங்கள், கொப்புளங்கள் அல்லது தடிப்புகள் உண்டாகிறது.
- யோனியில் ஏதேனும் அசாதாரண திரவங்களின் வெளியேற்றம் அல்லது அதிக இரத்தப்போக்கு.
- யோனியில் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரிப்பு.
ஆண்களில் உண்டாகும் பால்வினை நோய்களின் அறிகுறிகள் (Symptoms of STD in males) – பால்வினை நோய்கள் ஆண்களில் எந்தவொரு குறிப்பிடத்தக்க அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. பின்வருவன, ஆண்களில் உண்டாகும் பால்வினை நோய்களின் பொதுவான அறிகுறிகளாகும், அவை:
- செக்ஸ் அல்லது சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது அசௌகரிய உணர்வு.
- ஆண்குறி, விந்தணுக்கள், ஆசனவாய், பிட்டம், தொடைகள் அல்லது வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் காயங்கள், கொப்புளங்கள் அல்லது தடிப்புகள் உண்டாகிறது.
- ஆண்குறியிலிருந்து ஏதேனும் அசாதாரண திரவித்தின் வெளியேற்றம் அல்லது இரத்தப்போக்கு.
- வலி அல்லது வீங்கிய விந்தணுக்கள்.
பால்வினை நோய்களின் வகைகள் (Types of STD in Tamil)
பல வகையான நோய்த்தொற்றுகள் பாலியல் ரீதியாக பரவும் நோய்களை ஏற்படுத்துகிறது. பால்லினை நோய்களின் பொதுவான வகைகளைக் காண்போம்.
- கோனோரியா (Gonorrhoea) – கோனோரியா என்ற பாக்டீரியம் பெண்கள் மற்றும் ஆண்களை மிகவேகமாக பாதிக்கிறது. இது, பால்வினை நோய்களின் ஒரு முக்கிய வகையாகும். இது வாய்வழி செக்ஸ் மூலம் பரவுகிறது. இந்தத் தொற்று வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. நைசீரியா கோனோரியா என்னும் ஒரு வகை பாக்டீரியாவின் காரணமாக இந்தத் தொற்று ஏற்படுவதினால், இது கோனோரியா என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த தொற்றின் தாக்கம் தொண்டை, கண்கள், கருப்பை, ஆசனவாய், சிறுநீர்க்குழாய் வரை பரவுகிறது. நைசீரியா கோனோரியா பாக்டீரியா இரத்தத்தில் பரவியிருந்தால், உடலில் காய்ச்சல், தோல் காயங்கள் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
- HPV (Human Papilloma Virus) – HPV என்பது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று ஆகும். இது ஆண்கள், பெண்கள் என இருபாலினருக்கும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. HPV தொற்றின் தொடக்கத்திலேயே, பாதிக்கப்பட்ட நபர்களின் பிறப்புறுப்பில் மருக்கள் உருவாகத் தொடங்குகின்றன. மேலும், கைகளிலும் கால்களிலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. HPV தொற்று குறிப்பாக பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. ஒரு நபர் HPV நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளார் என்பதை எளிதில் கண்டறிய முடிவதில்லை.
- கிளமிடியா (chlamydia) – பாலியல் ரீதியாக பரவும் நோய்களில் கிளமிடியாவும் ஒன்றாகும். இது கிளமிடியா டிராக்கோமாடிஸ் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியம் கர்ப்பப்பை சுற்றி அல்லது சிறுநீர் குழாய் அல்லது ஆசனவாய் சுற்றி தொற்றுகளை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பற்ற யோனி, குத அல்லது வாய்வழி உடலுறவின் காரணமாக கிளமிடியா ஏற்படுகிறது. இந்த தொற்று தாயிடமிருந்து குழந்தைக்கும் பரவுகிறது. கிளமிடியா தொற்றைக் கொண்ட ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியில் எரியும் உணர்வை அனுபவிக்கிறார்கள். மேலும், ஆண்குறியில் அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்படுகிறது.
- ஹெர்பெஸ் (Herpes) – ஹெர்பெஸ் என்பது ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் (எச்.எஸ்.வி) என்பதின் குறுகிய பெயராகும். இந்த வைரஸ் HSV-1 மற்றும் HSV-2 என இரண்டு வகைப்படும். இவை இரண்டும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளாகும். இது மிகவும் பொதுவான ஒரு வகை பால்வினை நோயாகும். HSV-1 முக்கியமாக வாய்வழி ஹெர்பெஸை ஏற்படுத்துகிறது, இது புண்களுக்கு காரணமாக அமைகிறது. வாய்வழி உடலுறவின் போது HSV-1 ஒரு நபரின் வாயிலிருந்து மற்றொரு நபரின் பிறப்புறுப்புகளுக்கு பரவுகிறது. HSV-2 முதன்மையாக பிறப்புறுப்பில் ஹெர்பெஸை ஏற்படுத்துகிறது. இது கொப்புளங்கள் அல்லது புண்களை உருவாக்குகிறது. பிறப்புறுப்பு ஹெர்பெஸில், இந்த புண்கள் பிறப்புறுப்புகளில் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருவாகின்றன. வாய்வழி ஹெர்பெஸில் புண்கள் நபரின் வாயில் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது.
பாலியல் ரீதியாக பரவும் நோய்களை (எஸ்.டி.டி) எவ்வாறு தடுப்பது? (How to prevent Sexually transmitted diseases in Tamil?)
பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பாலியல் ரீதியாக பரவும் நோய்களைத் தடுக்க இயலும், அவை :
- உடலுறவுக்கு முன் எப்போதும் பாதுகாப்பு பற்றி சிந்தியுங்கள். நீங்கள் யாருடன் உடலுறவு கொள்கிறீர்கள் என்பதையும் இது சார்ந்துள்ளது.
- ஆண்களின் ஆணுறைகளைப் போல பெண் உறைகள் அதிக பாதுகாப்பை அளிப்பதில்லை. எனவே, உடலுறவின் போது ஆண்கள் ஆணுறைகளைப் பயன்படுத்த வேண்டும். பல வகையான ஆணுறைகள் உள்ளன, இதில் லேடக்ஸ் ஆணுறைகள் எஸ்.டி.டி.களிலிருந்து பாதுகாப்பை வழங்குகின்றன.
- எஸ்.டி.டி நோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க பெண்கள் எப்போதும் தங்கள் யோனியை சுத்தம் செய்ய வேண்டும். ஆண்களும் தங்கள் தனிப்பட்ட பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- நீங்கள் எஸ்.டி.டி.களின் கடுமையான அறிகுறிகளை சந்திக்கிறீர்கள் என்றால், உடனடியாக இது குறித்து உங்கள் மருத்துவரிடம் பரிசோதிக்கவும்.
ஒரு நபர் எஸ்.டி.டி யின் (பாலியல் ரீதியாக பரவும் நோய்) அறிகுறிகளை எதிர்கொள்ள நேரிட்டால், ஒரு நல்ல சிறுநீரக மருத்துவரைத் (Urologist) தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
மும்பையில் சிறந்த சிறுநீரக மருத்துவர்
டெல்லியில் சிறந்த சிறுநீரக மருத்துவர்



