நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை | Lung cancer screening in Tamil
ஜனவரி 22, 2021 Cancer Hub 1152 Viewsநுரையீரல், மனிதர்களில் இரண்டாவது பெரிய உறுப்பு என்று கருதப்படுகிறது. ஏனெனில், இவை சுவாசிக்க உதவுகின்றன. உடலில் உள்ள உயிரணுக்களின் செயல்பாட்டிற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. நுரையீரலின் உதவியுடன், நம் உடல் ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. நுரையீரலில் ஏதேனும் செயலிழப்பு ஏற்பட்டால், சுவாசப்பதில் சிரமம் உண்டாகிறது. இது தவிர, அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, மக்கள் இது போன்ற தீயப் பழக்கங்களை விட்டு நல்ல பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் நுரையீரல் பிரச்சினைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலும். தற்போதைய சூழலில், மருத்துவ தொழில்நுட்பம் அதிக வளர்ச்சியடைந்துள்ளது. எனவே, மருத்துவ பரிசோதனையின் உதவியுடன், உடலில் புற்றுநோய் தொடர்பான போதிய அறிகுறிகள் தென்படதவர்களுக்கும் நுரையீரல் தொடர்பான நோய்கள் இருக்கின்றனவா என்பதைப் பரிசோதிக்க முடிகிறது. இருப்பினும், நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய CT ஸ்கேன் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, மற்றும் நோயாளிக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடிகிறது. தற்போது பலரும் நுரையீரல் புற்றுநோய் ஸ்கிரீனிங் தொழில்நுட்பம் ஏன் பயன்படுத்தப்படுகிறது? என சிந்திக்ககூடும். எனவே, இன்றையக் கட்டுரையில், நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை பற்றிய தகவல்களை விரிவாக விளக்கியுள்ளோம்.
- நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையின் நன்மைகள் யாவை? (What are the benefits of lung cancer screening in Tamil?)
- நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையை யார் மேற்கொள்ள வேண்டும்? (Who should get lung cancer screening done in Tamil?)
- நுரையீரல் புற்றுநோய் பரிசோதனைக்கு முன் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? (What preparation is needed before lung cancer screening in Tamil?)
- நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையின் அபாயங்கள் யாவை? (What are the risks of lung cancer screening in Tamil?)
நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையின் நன்மைகள் என்ன? (What are the benefits of lung cancer screening in Tamil?)
- நுரையீரல் ஸ்கிரீனிங் நுட்பதின் பயன்கொண்டு, அதிகமாக புகைப்பிடித்ததன் விளைவாக நுரையீரல் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இயலும். ஆயினும், ஸ்கிரீனிங் முறையை மேற்கொள்ளும் அனைவருக்கும் இது பயனளிக்கும் என உறுதியளிக்க முடிவதில்லை.
- அனைத்து வகையான நுரையீரல் புற்றுநோய்களையும் எல்.டி.சி.டி ஸ்கிரீனிங் மூலம் கண்டறிய முடியாது. சில சமயங்களில் நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்படும் போது, அது கடுமையான இறுதி கட்டத்தில் இருக்கிறது.
- ஸ்கிரீனிங் மூலம் புற்றுநோய் கண்டறியப்பட்டாலும், நுரையீரல் புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏனெனில், எல்.டி.சி.டி பெரும்பாலும் புற்றுநோய் இல்லாமல், நுரையீரலுக்கு ஏதேனும் கோளாறுகளை உண்டாக்கும் சிக்கல்களையும் கண்டுபிடிக்கின்றது. மேலும், இது குறித்து சரியான தகவல்களை கண்டறிய மருத்துவர்கள் வேறுசில பரிசோதனைகளையும் செய்யலாம்.
- தெளிவான முடிவுகளை பெறாத போது சி.டி ஸ்கேன் அல்லது நுரையீரல் பயாப்ஸி போன்ற பரிசோதனைகளை தேவைப்படலாம், இதில் நுரையீரல் திசுக்களின் ஒரு பகுதியை ஊசியால் அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டு ஆய்வகங்களில் பரிசோதிக்கப் படுகின்றது. மேலும், இந்த பரிசோதனைகள் சில சொந்த அபாயங்களைக் கொண்டுள்ளன.எனவே, ஸ்கிரீனிங் செயல்முறையை மேற்கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.
நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையை யார் மேற்கொள்ள வேண்டும்? (Who should get lung cancer screening done in Tamil?)
அறிகுறிகள் ஏதும் இல்லாதபோது நுரையீரல் தொடர்பான நோயைக் கண்டறிய பின்வரும் சில பரிசோதனைகளைச் செய்யலாம், இதனால் சரியான சிகிச்சையை தக்க சமயத்தில் பெற முடிகிறது. இருப்பினும், ஒரு நபர் ஏதேனும் நுரையீரல் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிட்டால், உடனடியாக ஒரு மருத்துவரைத் தொடர்பு கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
- புகைபிடித்தல் மற்றும் புகையிலை உட்கொள்வது போன்ற தீயப் பழக்கங்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என நாம் அனைவரும் அறிவோம். எனினும், சிலர் இதனை கருத்தில் கொள்ளாமல் புகையிலை அல்லது சிகரெட்டை போன்றவற்றை புகைக்கிறார்கள். எனவே, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களும் ஒரு மருத்துவரை அணுகி அவர்களின் நுரையீரல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தைத் தவிர்க்க, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை புகைபிடிக்கும் பழக்கம் உள்ள 25 முதல் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் நுரையீரல் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங்கை மேற்கொள்ள வேண்டும். இது தவிர, இளம் வயதில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டு, பின்னர் புகைபிடிப்பதை விட்டவர்களும் நுரையீரல் புற்றுநோய் ஸ்கிரீனிங்கை மேற்கொள்ள வேண்டும்.
- இதற்கு முன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குடும்ப வரலாறு உள்ளவர்களும் அல்லது குடும்பத்தில் யாரேனும் ஒருவர் நீண்ட காலமாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால், அவர்களும் ஸ்கிரீனிங்கை மேற்கொள்ள வேண்டும்.
- நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களும், நுரையீரல் புற்றுநோய் பரிசோதனைக்காக மருத்துவரை அணுக வேண்டும்.
நுரையீரல் புற்றுநோய் பரிசோதனைக்கு முன் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் வேண்டும்? (What preparation is needed before lung cancer screening in Tamil?)
நுரையீரல் புற்றுநோய் பரிசோதனைக்கு முன், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் கொள்ள வேண்டும். அவை:
- சி.டி ஸ்கேன் செய்வதற்கு முன்பு நோயாளி குறைந்தது இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை வெறும் வயிற்றில் இருக்க வேண்டும்.
- ஸ்கேன் செய்யும் போது அணிகலன்களை அணிய கூடாது.
- பொதுவான ஆடைகளை மாற்றி மருத்துவமனை கவுனை அணிய வேண்டும்.
நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையின் அபாயங்கள் யாவை? (What are the risks of lung cancer screening in Tamil?)
ஒவ்வொரு மருத்துவ செயல்முறையையும் போல, நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையிலும் சில அபாயங்கள் உள்ளன. அவை :
- எந்தவித சிக்கலும் இல்லாத ஒரு நபரை பரிசோதிப்பது.
- ஆரோக்கியமான நபர்களில் புற்றுநோயைக் கண்டறிய ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது, இதனால் எந்தத் தீங்கும் விளைவதில்லை என்றாலும், இது அதிகப்படியான கண்டறிதல் (Over – detection) என்று அழைக்கப்படுகிறது.
- கவனமாக பரிசோதித்த பிறகும், ஒரு நபருக்கு புற்றுநோய் தாக்கம் இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிவதில் தோல்வி அடைய வாய்ப்புகள் உள்ளன.
- புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்த போதும், சிகிச்சை பலனின்றி பாதிக்கப்பட்ட நபர் குணமடைய முடியாமல் போகலாம்.
- பல முறை, ஸ்கிரீனிங் செய்த பிறகும், ஒரு நபருக்கு புற்றுநோயின் தாக்கம் உள்ளதா என்பதைக் கண்டறிய முடிவதில்லை.
நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை அல்லது அதற்கான சிகிச்சை குறித்த கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், ஒரு புற்றுநோயியல் நிபுணரைத் (Oncologist) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
மும்பையில் சிறந்த புற்றுநோயியல் மருத்துவர்
சென்னையில் சிறந்த புற்றுநோயியல் மருத்துவர்
