குழந்தைகளில் உடல் பருமன் | Causes of obesity in children in Tamil
மார்ச் 6, 2021 Lifestyle Diseases 1186 Viewsஒவ்வொரு குழந்தையின் உடல் வளர்ச்சியும் வித்தியாசமானதாகும், இதன் காரணமாக குழந்தைகள் வேறுபடுகின்றனர் மற்றும் அவர்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மேலும், குழந்தைகளுக்கான சரியான உடல் எடையைக் கணிப்பது மிகவும் கடினமானதாகும். பெரும்பான்மையான மக்கள், பருமனான குழந்தைகளையே ஆரோக்கியமான குழந்தைகளென நம்புகிறார்கள். இது மிகவும் தவறான ஒரு நம்பிக்கையாகும். ஏனெனில், குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பு இதய நோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. உடல் பருமன் சில குழந்தைகளுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இன்றையக் கட்டுரையில், குழந்தைகளில் உடல் பருமன் ஏற்படுவது ஏன்? மற்றும் இதனால் உடலுக்கு விளையும் பிரச்சினைகள் குறித்து விளக்குகிறோம்.
- குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of obesity in Tamil?)
- குழந்தைகளில் உடல் பருமனின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of obesity in children in Tamil?)
- குழந்தைகளில் உள்ள உடல் பருமனுக்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for obesity in children in Tamil?)
- குழந்தைகளில் உடல் பருமனை எவ்வாறு தடுப்பது? (How to prevent obesity in children in Tamil?)
குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What causes obesity in children in Tamil?)
- குழந்தைகளில் உடல் பருமன் ஏற்படுவதற்கு மரபணு முக்கிய காரணமாக அமைகிறது. பெற்றோர்கள் உடல் பருமனாக இருப்பதினால் கூட, அவர்களின் குழந்தைகளும் உடல் பருமனாக இருக்கலாம். மேலும், பெரும்பாலான மக்கள் அதிகப்படியான உணவுகளை உட்கொள்கின்றனர் மற்றும் தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்வதில்லை.
- புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள் குழந்தைகளிடையே உடல் பருமனை அதிகரிக்கிறது.
- கலோரிகள் நிறைந்த எண்ணெய் மற்றும் குப்பை உணவுகளை (oil and junk foods) சாப்பிடுவதினால் உடலின் செயல்பாடுகள் குறைகின்றன மற்றும் உடலில் சேரும் கெட்டக்கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக, உடல் பருமன் ஏற்படுகின்றது.
- சில சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு சீரான மற்றும் சத்தான உணவு பழக்கத்தைத் திட்டமிட அலட்சியம் காட்டுவதன் விளைவாக குழந்தைகளில் உடல் பருமன் ஏற்படுகின்றது. மற்றும் சில ஏழை குடும்பங்களால் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க முடிவதில்லை.
- பெரும்பாலான குழந்தைகள் மன அழுத்தத்தின் காரணமாய் அதிகமாக சாப்பிடுகிறார்கள்.
- பாக்டீரியா தொற்று அல்லது மூளையின் பலவீனம் காரணமாகவும் உடல் பருமன் அதிகரிக்கிறது.
- உளவியல் காரணிகள் குழந்தைகளில் உடல் பருமனை ஏற்படுத்துகின்றன என்பதை சில ஆய்வுகள் கூறுகின்றன.
- பேக் செய்யப்பட்ட பால் மற்றும் பேக் செய்யப்பட்ட பொருட்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன, இவை அவர்களின் உடலை பருமனாக்குகின்றன. குழந்தைகளுக்கு எந்தளவில் உணவை வழங்கவேண்டும் என்று தாய்மார்கள் புரிந்து கொள்ளாதபோதும் உடல் பருமன் அதிகரிக்கிறது. (மேலும் வாசிக்க – மன அழுத்தத்தை குறைப்பதில் கயினின் நன்மைகள்)
குழந்தைகளில் உடல் பருமனின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of obesity in children in Tamil?)
குழந்தைகளின் உடல் எடை மற்றும் உடல் வளர்ச்சி பல வழிகளில் அதிகரிக்கிறது. சில குழந்தைகளின் உடல் எடை அவர்களின் வயதிற்கு ஏற்ப அதிகரிக்கிறது. குழந்தைகளின் சரியான உடல் எடையை கண்டறிய மருத்துவர்கள் குழந்தையின் பி.எம்.ஐயை கணக்கிடுகின்றனர், பின் அதனை ஒரு நிலையான விளக்கப்படத்துடன் ஒப்பிடுகின்றனர். சில சமயங்களில், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் ஆபத்துகளைக் கண்டறிய குழந்தைகளின் துல்லியமான உடல் எடையைக் கண்டறிய வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய சூழ்நிலையில் மருத்துவர்கள் சில பரிசோதனைகளை பரிந்துரைக்கின்றனர். (மேலும் படிக்க – உடல் பருமனை எவ்வாறு குறைப்பது)
குழந்தைகளில் உள்ள உடல் பருமனுக்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for obesity in children in Tamil?)
- குழந்தைகளில் உடல் பருமன் அதிகரிக்கும் போது, அதன் காரணங்களின் அடிப்படையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
- குழந்தைகளின் உடல் பருமனைக் குறைப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கினைக் கொண்டிருக்கின்றனர்.
- குழந்தையின் வயது மற்றும் உடல் எடைக்கு ஏற்ப மருத்துவர்கள் உடல் பருமனுக்கான சிகிச்சைகளை அளிக்கின்றனர்.
- சில சந்தர்ப்பங்களில், உடல் பருமனைக் குறைக்க அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
- உடல் பருமன் உள்ள குழந்தைகளின் வயது இரண்டு அல்லது அதற்கும் மேலாக இருந்தால், அவர்களின் உடல் எடையைக் கட்டுப்படுத்த பெற்றோர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளின் உணவு பழக்கத்தில் சத்தான மற்றும் சீரான உணவுகளைப் பெற்றோர்கள் சேர்க்க வேண்டும்.
- ஒவ்வொரு மாதமும் குழந்தையின் உடல் எடையை அளவிட்டு, அதற்கேற்ப ஒரு உணவு விளக்கப்படத்தை உருவாக்கவும்.
குழந்தைகளில் உடல் பருமனை எவ்வாறு தடுப்பது? (How to prevent obesity in children in Tamil?)
பின்வரும், சில வழி முறைகளை பின்பற்றுவதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளில் உடல் பருமனைக் கட்டுப்படுத்த இயலும், அவை :
- குழந்தைகளுக்கு வீட்டில் சமைத்த சத்தான உணவுகளையே வழங்கவேண்டும். மற்றும் குப்பை உணவுகளை (junk food) உட்கொள்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
- சத்தான மற்றும் சீரான உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
- குழந்தைகள் டிவி பார்ப்பது மற்றும் மொபைலில் விளையாடுவது போன்றவற்றை தவிர்த்து, மாறாக உடல் செயல்பாடுகளை அதிகரிக்கும் விதமாக வெளிப்புற விளையாட்டுகளை விளையாட குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு சாக்லேட், ஐஸ்கிரீம், பேக் செய்யப்பட்ட பழச்சாறு போன்ற இனிப்பு உணவுகளை கொடுக்க வேண்டாம். (மேலும் படிக்க- இனிப்புகளை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்)
- சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
- உடல் பருமனைத் தவிர்க்க குழந்தைகள் காலையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
- குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பள்ளிகளும் கவனிக்க வேண்டும்.
உங்கள் பிள்ளைகளின் உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்து உடல் பருமனாக மாறினால், உடனடியாக ஒரு குழந்தை உட்சுரப்பியல் நிபுணரைத் (Pediatric Endocrinologist) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.



