ஹோலி நிறத்தை அகற்ற வீட்டு வைத்தியம் | Home remedies to remove holi colors in Tamil

ஏப்ரல் 6, 2021 Lifestyle Diseases 745 Views

English हिन्दी Tamil

ஹோலி பண்டிகை என்பது வட இந்தியாவில் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். தற்போதைய காலகட்டத்தில் தென்னிந்தியாவிலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவின் போது மக்கள் வண்ணங்களுடன் விளையாடுகிறார்கள். அதிகளவில் சோப்புகளைப் பயன்படுத்தி கழுவினாலும், சருமம் மற்றும் முடியில் உள்ள வண்ணங்களை எளிதில் அகற்ற முடிவதில்லை. பெரும்பான்மையான மக்கள் இந்தக் கரைகளை அகற்ற முடியாததினால், மிகுந்த கவலை அடைகிறார்கள். இத்தகைய சூழலில், ஹோலி நிறத்தை அகற்ற எளிய வீட்டு வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த எளிய முறை வைத்தியங்கள் கரைகளை நீக்குகின்றன மற்றும் இவை சருமத்தை சேதப்படுத்துவதில்லை. இன்றையக் கட்டுரையில், தோல் மற்றும் கூந்தலில் இருந்து ஹோலி வண்ணங்களை அகற்ற உதவும் சில சிறந்த தீர்வுகளைப் பார்ப்போம். 

முடி மற்றும் தோலில் இருந்து ஹோலி வண்ணங்களை அகற்ற உதவும் வீட்டு வைத்தியங்கள் யாவை? (What are the home remedies to remove holi colours from hair and skin in Tamil?) 

பின்வருவன, ஹோலி பண்டிகையின் போது, தலை முடி மற்றும் சருமத்தில் உண்டாகும் கரைகளை அகற்ற உதவும் வீட்டு வைத்தியங்களாகும், அவை: 

  • தோல் ஒவ்வாமையிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் (Protect the skin from skin allergies): ஹோலி பண்டிகையில் வண்ணங்களுடன் விளையாடுகிறோம், இந்த ஹோலி வண்ணங்களால் சிலருக்கு தோலில் தடிப்புகள் மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க, வண்ணங்களை கழுவிய பின் தோலில் ஆன்ட்டி செஃப்டிக் கிரீம்களைக் கொண்டு மசாஜ் செய்யவும். அல்லது கலமைன் லோஷன் மற்றும் ரோஸ் வாட்டரைக் கலந்து ஒரு பேஸ்டைத் தயாரித்து, இந்தப் பேஸ்ட்டை சருமத்தில் தடவவும். இவை எரிச்சல் மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகளை குறைக்க உதவுகின்றன. (மேலும் படிக்க – சருமத்தை இறுக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்)
  • கடலை மாவு ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துங்கள் (Apply gram flour pack): கடலை மாவு சருமத்தை பிரகாசமாக்க வைத்திருக்க உதவுகிறது. கடலை மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் பால் ஆகியவற்றைக் கலந்து ஃபேஸ் பேக்கைத் தயார் செய்து, சிறிது நேரம் தோலில் தடவுங்கள். காய்ந்த பின்னர், தோலை தண்ணீரில் சுத்தமாக கழுவுங்கள். இந்த செயல்முறை சருமத்திலுள்ள ஹோலி வண்ணங்களின் கரைகளை நீக்குகிறது.
  • எலுமிச்சையின் பயன்பாடு (Uses of lemon): எளிய வண்ணங்களை தோலில் இருந்து எளிதாக அகற்ற இயலும், ஆனால் சில கடுமையான வண்ணங்களை நீக்குவது ஒரு சிக்கலாகவே கருதப்படுகிறது. அத்தகைய கடுமையான வண்ணங்களை அகற்ற எலுமிச்சை பயனுள்ளதாக அமைகிறது. எலுமிச்சை சாற்றுடன் தேனை கலந்து உடலில் தடவவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் வண்ணங்களை நீக்குகிறது. இது தவிர தயிர், கடலை மாவு, எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து மற்றொரு பேக்கைத் தயாரித்தும் உபயோகிக்கலாம். (மேலும் படிக்க- எலுமிச்சையின் நன்மைகள் என்ன)
  • கோதுமை மாவு பேஸ்ட்டை பயன்படுத்தவும் (Wheat flour paste): ஹோலி வண்ணங்களை எளிதில் அகற்ற எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் கோதுமை மாவை கலந்து ஒரு பேஸ்டைத் தயாரித்து, இந்தக் கலவையை முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவவும். குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, இந்த செயல்முறையை மேற்கொள்ளவும். (மேலும் படிக்க – தினையின் ஆரோக்கிய நன்மைகள்)
  • சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள் (Use sunscreen): நீங்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடப் போகிறீர்கள் எனில், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் ஒன்று, வண்ணங்களுடன் விளையாடுவதற்கு முன்பு சன்ஸ்கிரீன் லோஷனை முகத்தில் தடவவும். இவ்வாறு செய்வதன் மூலம், வண்ணங்களை எளிதில் அகற்ற முடிகிறது. (மேலும் படிக்க – வெயில் தொடர்பான தோல் நோய்களைக் குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள்)
  • பப்பாளி ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தவும் (Apply a papaya face pack): ஹோலி வண்ணங்களை எளிதில் அகற்ற முடியாததால், இவை ஒரு பெரிய பிரச்சினையாக கருதப்படுகிறது. இந்த சிக்கலை தீர்க்க பப்பாளி, முல்தானி மிட்டி மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவவும். இந்த செயல்முறை உடனடியாக நிறத்தை அகற்றுவதில்லை. எனினும், சில நாட்களுக்கு தவறாமல் இதனைப் பயன்படுத்துவதன் மூலம், சருமத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது. (மேலும் வாசிக்க- முல்தானி மிட்டியின் நன்மைகள் என்ன)
  • வாஸ்லினைப் பயன்படுத்தவும் (Use vaseline): ஹோலி பண்டிகையில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் உதடுகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். இந்த சிக்கலைத் தவிர்க்க, ஹோலி விளையாடுவதற்கு முன்பு வாஸ்லினை உதடுகளில் தடவவும். உதடு விரிசல் மற்றும் உதடு வறட்சி போன்ற சிக்கல்களுக்கு வாஸ்லின் பயனுள்ளதாக அமைகிறது. மேலும், ஹோலி பண்டிகையில் பயன்படுத்தப்படும் வண்ணங்களை நீக்குகிறது. குளிர்காலத்தில் வாஸ்லினைப் பயன்படுத்துவது, உதடுகளைப் பாதுகாக்கிறது. (மேலும் படிக்க – குளிர்காலத்தில் என்ன சாப்பிட வேண்டும்)
  • ஃபவுன்டேஷனைப் பயன்படுத்துங்கள் (Apply a foundation): ஹோலி பண்டிகையில் வண்ணங்களுடன் விளையாடும்போது, சருமத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஹோலி விளையாடுவதற்கு முன்பு முகத்தில் ஃபவுன்டேஷனைப் பயன்படுத்துவதன் மூலம், சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் வண்ணங்களை நீக்க இயலும். மேலும், கடுமையான வண்ணங்களிலிருந்து முகத்தைப் பாதுகாக்கிறது.

ஹோலி பண்டிகையின் போது உபயோகிக்கபடும் வண்ணங்களின் காரணமாக ஏதேனும் தோல் ரீதியான சிக்கலை நீங்கள் எதிர்கொள்ள நேரிட்டால், உடனடியாக ஒரு தோல் நிபுணரைத் (Dermatologist) தொடர்பு கொள்ளுங்கள். 

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


மும்பையில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்

டெல்லியில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்

சென்னையில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்

பெங்களூருவில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha