அனாபிலாக்டிக் அதிர்ச்சி என்றால் என்ன | What is Anaphylactic shock in Tamil
ஜனவரி 1, 2021 Lifestyle Diseases 2751 Viewsஅனாபிலாக்டிக் அதிர்ச்சி ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு (Causes, symptoms, treatments and prevention for Anaphylactic shock in Tamil)
அனாபிலாக்டிக் அதிர்ச்சி என்பது மனித உடலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு கோளாறு ஆகும். இது உடலில் உண்டாகும் ஒவ்வாமை எதிர்வினையின் காரணமாக ஏற்படுகின்றது. மேலும், இதனால் மனித உயிருக்கு ஆபத்து விளைகிறது. உங்களுக்கு ஏதேனும் உணவு பொருட்களில் ஒவ்வாமை இருந்தால்,அந்த பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர, தேள் கொட்டுதல், பாம்பு கடித்தல், தேனீ கொட்டுதல் போன்ற சில விலங்கு தாக்குதல்களினாலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை வெகுவிரைவில் மோசமடையகின்றது. இதன் விளைவுகள், தாக்குதல் உண்டான சில நிமிடங்களில் தொடங்குகிறது. மேலும், இது உடனடியாக பாதிக்கபட்டவரின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதன் விளைவாக அந்த நபருக்கு அனபிலாக்டிக் அதிர்ச்சி ஏற்படுகின்றது. இது தவிர, பாதிக்கப்பட்ட நபரின் பிபி (Blood pressure) குறைவதினால் அவர் சுவாசிக்க சிரமப்படுகிறார். ஒரு நபரின் பிபி எதிர்பாராமல் திடீரென குறையும் போது தலைச்சுற்றல், வாந்தி போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன. இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒவ்வாமை ஏற்படும் போது உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற வேண்டும். இன்றைய கட்டுரையில், அனாபிலாக்டிக் அதிர்ச்சி என்றால் என்ன, என்பது குறித்த விரிவான தகவல்களைக் காண்போம்.
- அனாபிலாக்டிக் அதிர்ச்சியின் காரணங்கள் யாவை? (What are the causes of anaphylactic shock in Tamil?)
- அனாபிலாக்டிக் அதிர்ச்சியின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of anaphylactic shock in Tamil?)
- அனாபிலாக்டிக் அதிர்ச்சிக்கான சிகிச்சை என்ன? (What are the treatments for anaphylactic shock in Tamil?)
- அனாபிலாக்டிக் அதிர்ச்சியை எவ்வாறு தடுப்பது? (How to prevent anaphylactic shock in Tamil?)
அனாபிலாக்டிக் அதிர்ச்சியின் காரணங்கள் யாவை? (What are the causes of anaphylactic shock in Tamil?)
- அனாபிலாக்ஸிஸ் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், ஒரு நபர் எந்தெந்த பொருட்களினால் ஒவ்வாமைக்கு உள்ளாகின்றார் என்பதைப் பொறுத்தே பெரும்பாலும் இது ஏற்படுகின்றது. ஒவ்வாமையை ஏற்படுத்தும் மருந்துகள், பென்சிலின், வேர்க்கடலை, எறும்பு கடித்தல், தேனீ கொட்டுதல் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்கள் போன்றவை அனாபிலாக்டிக் அதிர்ச்சியைத் தூண்டும் பொருட்களாகும். சில மயக்க மருந்துகளினாலும், தீவிரமாக உடற்பயிற்சி செய்வதினாலும் லேசான அனாபிலாக்டிக் எதிர்வினை உண்டாகிறது. எந்த ஒவ்வாமையின் காரணமாக இது உண்டாகிறது என்பதை கண்டறிய இயலாத நிலையில், நோயாளிகள் இது குறித்து ஒரு மருத்துவரிடம் கண்டிப்பாக ஆலோசிக்க வேண்டும்.
- அனாபிலாக்ஸிஸின் ஏற்படுவதற்கான பிற ஆபத்து காரணிகள் –
- ஒரு நபர் முன்பே அனாபிலாக்டிக் அதிர்ச்சியை சந்தித்திருந்தால், எதிர்காலத்தில் மீண்டும் கடுமையான எதிர்வினை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
- உங்கள் குடும்பத்தில் ஏதேனும் ஒரு நபர் உடற்பயிற்சி காரணமாக அனாபிலாக்டிக் அதிர்ச்சியை சந்தித்திருந்தால், மற்றவர்களுக்கும் அனாபிலாக்ஸிஸ் ஏற்படக்கூடிய அபாயங்கள் இருக்கிறது.
- ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு, அனாபிலாக்ஸிஸ் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
அனாபிலாக்டிக் அதிர்ச்சியின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of anaphylactic shock in Tamil?)
உடலில் ஒவ்வாமை ஏற்பட்ட சில நிமிடங்களில் அனாபிலாக்ஸிஸின் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. இந்த அறிகுறிகள் குறைந்தது அரை மணி நேரம் வரை நீடிக்கிறது. அவை :
- உடல் பலவீனம் மற்றும் நினைவு இழப்பு
- தலைச்சுற்றல்
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- பலவீனமான மற்றும் விரைவான இதயத்துடிப்பு
- தொண்டை வலி
- தொண்டையில் கட்டி இருப்பது போல் உணர்வது.
- நாக்கு அல்லது உதடுகள் வீங்குகிறது.
- சுவாசிப்பதில் சிரமம்
- உடலின் வெப்பநிலை அதிகரித்தல்
- தோலில் ஒவ்வாமை
- தோலில் அரிப்பு
- வெளிறிய தோல்
- குழந்தைகள் மற்றும் பெரியவருகளுக்கு ஏதேனும் கடுமையான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்
அனாபிலாக்டிக் அதிர்ச்சிக்கான சிகிச்சை என்ன? (What are the treatments for anaphylactic shock in Tamil?)
- ஒவ்வாமை அதிர்ச்சி ஏற்பட்டதன் விளைவாக, நோயாளிக்கு சுவாசிப்பதில் சிரமம் மற்றும் இதயத்துடிப்பு பலவீனமடைதல் போன்ற நிலை உருவானால், உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு வசதியாக ஆம்புலன்சில் அழைத்துச்செல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவரின் சுவாச வீதத்தையும் இதயத் துடிப்பையும் சரிபார்க்கவும், மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு எபினெஃப்ரின் அல்லது ஆண்டிஹிஸ்டமைன் போன்ற மருந்துகளை வழங்குகின்றனர்.
- பெரும்பாலும் அனாபிலாக்ஸிஸால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு ஆட்டோ இன்ஜெக்டரை தன்னிடம் எப்போதும் வைத்திருக்கிறார்கள். இந்த இன்ஜெக்டரில் தொடைகளுக்குள் மருந்தை செலுத்தப் பயன்படும் ஒரு ஊசி உள்ளது.
- பூச்சி கடித்ததினால் அனாபிலாக்ஸிஸின் சிக்கல் அதிகரித்தால், எதிர்காலத்தில் இத்தகைய ஆபத்தைத் தவிர்க்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
- அனாபிலாக்ஸிஸிற்கான சிகிச்சையைப் பெற முடியதா சிலர், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். உதாரணமாக, ஒவ்வாமையை ஊக்குவிக்கும் பொருட்களிலிருந்து விலகியிருக்க வேண்டும். எப்போதும் எபிநெஃப்ரைனை மருந்தை தங்களுடன் வைத்திருக்க வேண்டும். இது தவிர, ஆண்டிஹிஸ்டமைன் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அனாபிலாக்டிக் அதிர்ச்சியை எவ்வாறு தடுப்பது? (How to prevent anaphylactic shock in Tamil?)
அனாபிலாக்டிக் அதிர்ச்சியைத் தடுக்க பின்வரும் நடவடிக்கைகளை மனதில் கொள்ள வேண்டும், அவை:
- ஏதேனும் மருந்துகளால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், அதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிகிச்சைக்கு பின்னர், சில நாட்கள் கிளினிக்கில் தங்கியிருப்பதன் மூலம் மீண்டும் ஒவ்வாமை ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவரிடம் நேரடியாக ஆலோசிக்க இயலும்.
- மருத்துவ எச்சரிக்கைகளை ஏற்படுத்தும் நெக்லஸ் மற்றும் காப்புகள் சந்தையில் கிடைக்கிறது. உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், அவற்றைப் பயன்படுத்துங்கள்.
- பாதிக்கபடுபவர்கள் எப்போதும் சில அவசர சிகிச்சையளிக்கும் மருந்துகளை தங்களுடன் வைத்திருக்க வேண்டும். எனவே, ஏதேனும் அவசரநிலை ஏற்படும் போது அவற்றைப் பயன்படுத்த இயலும். மேலும், அந்த மருந்துகள் காலாவதியாகாமல் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்யுங்கள்.
- பூச்சி கடித்ததினால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், காட்டுபகுதியில் செல்லும்போது எச்சரிக்கையாக இருங்கள். முழு கை முழு கால் சட்டைகளை அணிய வேண்டும் மற்றும் கால்களில் கண்டிப்பாக காலணிகளை அணியுங்கள். வாசனை திரவியங்களை அணிய வேண்டாம். மற்றும் பூச்சிகளை அடிப்பதையும் தவிர்க்கவும்.
- சில உணவுப் பொருள்களால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், எந்தவொரு பொருளையும் உட்கொள்வதற்கு முன் அதில் பொறுத்தப்பட்டுள்ள லேபிள்களை கவனமாகப் படித்து உட்கொள்ளுங்கள். இது தவிர, வெளியே சாப்பிடும்போது நீங்கள் உட்கொள்ளும் உணவில் சேர்க்கப்படும் பொருட்களைப் பற்றி கேட்கவும்.
அனாபிலாக்டிக் அதிர்ச்சி பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், ஒரு மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)
சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)
பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)



