கருவளையங்களை எவ்வாறு தடுப்பது | How to prevent dark circles in Tamil
பிப்ரவரி 5, 2021 Lifestyle Diseases 957 Viewsதற்போதைய சூழலில், மக்கள் முக அழகையே பெரிதும் போற்றுகின்றனர். பெரும்பான்மையான மக்கள் அவர்களின் கண்களை சுற்றி கருவளையங்கள் உண்டாகும் போது, அவர்களின் அழகு குறைந்துவிட்டதாக நினைக்கிறார்கள். பெரும்பாலும், கருவளையங்கள் இளைஞர்களின் மன விரக்திக்கு வழிவகுக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது போதுமான தூக்கம் இல்லாததால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் காணப்படுகின்றது. முகத்தை பராமரிக்காமல் இருப்பது மற்றும் மனச்சோர்வு போன்றவையும் கருவளையங்கள் உண்டாவதற்கான காரணமாக அமைகின்றன. இன்றையப் பதிவில் கருவளையங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வோம்.
- கருவளையங்கள் என்றால் என்ன? (What is dark circles in Tamil?)
- கண்களுக்குக் கீழ் கருவளையங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? (What causes dark circles under eyes in Tamil?)
- கருவளையங்களுக்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for dark circles in Tamil?)
- கருவளையங்களை எவ்வாறு தடுப்பது? (How to prevent dark circles in Tamil?)
கருவளையங்கள் என்றால் என்ன? (What is dark circles in Tamil?)
கருவளையங்கள் அல்லது கரும்புள்ளிகள் என்பது கண்களை சுற்றியுள்ள தோலில் உண்டாகும் கருதிட்டுகளாகும். இவை ஒரு நபரின் தோற்றத்தை சோர்வாகவும், பதற்றமாகவும் ஆக்குகிறது. பொதுவாக, கருவளையங்கள் வயது அதிகரிப்பதன் காரணமாக ஏற்படுகின்றது. தற்போதைய சூழலில், போதுமான தூக்கம் இல்லாதது அல்லது மொபைல்கள் மற்றும் கணினிகளின் அதிகப்படியான பயன்பாடு கருவளையங்களுக்கு வழிவகுக்கிறது.
கண்களுக்குக் கீழ் கருவளையங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? (What causes dark circles under eyes in Tamil?)
பின்வருவன கண்களுக்குக் கீழ் கருவளையங்கள் ஏற்படுவதற்கான காரணங்களாகும், அவை:
- மரபணு காரணங்களால் சிலருக்கு கருவளையங்கள் உருவாகின்றன.
- அதிகப்படியான புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் உட்கொள்ளுதல் கருவளையங்களை ஏற்படுத்துகிறது.
- வயது அதிகரிப்பதன் காரணமாகவும் கருவளையங்கள் தோன்றுகிறது. ஒரு நபரின் வயது அதிகரிக்கும் போது, அவரின் தோல் மெல்லியதாகிறது, இதன் காரணமாக இரத்த நாளங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன.
- தூக்கம் பற்றாக்குறை கருவளையங்ளுக்கான மிகவும் பொதுவான காரணமாகும். (மேலும் வாசிக்க- தூக்கமின்மை என்றால் என்ன, தூக்கமின்மைக்கான சிகிச்சைகள் என்ன?)
- உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளும் கண்களின் கீழ் கருவளையங்களை ஏற்படுத்துகிறது.
- சோர்வு கண்களின் கீழ் கருவளையங்களை ஏற்படுத்துகிறது.
- ஒப்பனை பொருள்களை அதிகமாக பயன்படுத்துவது கருவளையங்களுக்கு வழிவகுக்கிறது. ஒப்பனை மற்றும் அழகுசாதனப் பொருட்களை முகத்திலிருந்து அகற்றிய பின் சருமத்தை சுத்தம் செய்வது கருவளையங்களின் அச்சுறுத்தலைக் குறைக்கிறது.
- உடலில் உண்டாகும் நீர் பற்றாக்குறை கண்களை சுற்றி கறுப்புத்தன்மையை ஏற்படுத்தக்கூடும்.
- மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக கருவளையங்கள் தோன்றுகிறது.
- பதட்டம் மற்றும் மன அழுத்தம் கண்களின் கீழ் கருவளையங்களை ஏற்படுத்துகின்றன. (மேலும் வாசிக்க- கவலை என்றால் என்ன)
கருவளையங்களுக்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for dark circles in Tamil?)
கருவளையங்களிலிருந்து விடுபட மருத்துவர்கள் பின்வரும் சிகிச்சைகளை வழங்குகிறார்கள், அவை:
- கண்களை சுற்றியுள்ள தோலில் உண்டாகும் வடுக்கள், திட்டுக்கள் மற்றும் சுருக்கங்களுக்கு சிகிச்சையளிக்க சில கெமிக்கல் உரித்தல் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு வகையான ஒப்பனை சிகிச்சை முறையாகும். சேதமடைந்த தோல்கள் ரசாயனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அகற்றப்படுகிறது, இதனால் சருமத்தில் ஆரோக்கியமான புதிய தோல் அடுக்குகள் உருவாகும்.
- கருவளையங்களைக் குறைக்க தீவிர ஒளி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
- கண்களின் கீழ் தேங்கியுள்ள கொழுப்பை அகற்ற லேசர் சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையின் பின்னர், தோல் நிறம் இலகுவாகிறது.
- கடுமையான நிலைகளில், கருவளையங்கள் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகின்றன. இது கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் மற்றும் இருளைக் குறைக்கிறது.
கருவளையங்களை எவ்வாறு தடுப்பது? (How to prevent dark circles in Tamil?)
- நாள் ஒன்றுக்கு குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- கருவளையங்களைத் தடுக்க தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
- தினசரி யோகா செய்வது கருவளையங்களைத் தடுக்கிறது.
- கருவளையங்களைத் தடுக்க ஒரு சீரான உணவு பழக்கம் பயனுள்ளதாக அமைகிறது.
- பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். (மேலும் படிக்க – கீரையின் நன்மைகள்)
- புகைப்பதைத் தவிர்க்கவும்
- இரவில் நீண்ட நேரம் டிவி, மொபைல் அல்லது கணினியைப் பார்க்க வேண்டாம்.
கருவளையங்களினால் நீங்கள் அவதிப்பட்டால், உடனடியாக ஒரு தோல் மருத்துவரைத் (Dermatologist) தொடர்பு கொள்ளுங்கள்.
மும்பையில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்
டெல்லியில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்


