துளசி சாற்றின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects Tulsi extracts in Tamil
ஏப்ரல் 25, 2021 Lifestyle Diseases 1345 Viewsதுளசியின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம், ஆயினும் துளசி சற்றின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்து பலரும் அறியாமல் இருக்கின்றனர். துளசி சாற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராடும் ஆற்றலை உடலுக்கு வழங்குகின்றன. துளசி சாறு மன அழுத்தத்தைக் குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது தவிர, வீக்கத்தைக் குறைப்பதிலும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் நன்மை பயக்கிறது. இது சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இன்றையப் பதிவில், துளசி சாற்றின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து காண்போம்.
- துளசி சாறு என்றால் என்ன? (What are basil extracts in Tamil?)
- துளசியில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What are the nutrients present in basil in Tamil?)
- துளசியில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What are the nutrients present in basil in Tamil?)
- துளசி சாற்றின் நன்மைகள் யாவை? (What are the benefits of basil extracts in Tamil?)
- துளசி சாற்றின் பக்க விளைவுகள் யாவை? (What are the side effects of basil extracts in Tamil?)
துளசி சாறு என்றால் என்ன? (What are basil extracts in Tamil?)
ஆங்கிலத்தில் பெசில் என்று அழைக்கப்படும் துளசி, அதன் மருத்துவ முக்கியத்துவம் காரணமாக மிகவும் பிரபலமான ஒரு மூலிகையாகும். துளசியின் இலைகள், பூக்கள், வேர்கள், பழங்கள், தண்டு உட்பட அனைத்து பகுதிகளும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. துளசி சாறு அதிகளவில் ஊட்டச்சத்து நிறைந்ததாகும், இது துளசி தாவரத்தின் அனைத்து பகுதிகளையும் கொண்டுள்ளது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. (மேலும் படிக்க- ஷிகாகாயின் ஆரோக்கிய நன்மைகள்)
துளசியில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What are the nutrients present in basil in Tamil?)
துளசியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் புரதம், ஆன்ட்டி ஆக்ஸிடன்டு, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் உள்ளன. துளசியில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் கால்சியம் ஆகிய தாதுக்களும் நல்ல அளவில் நிறைந்துள்ளது. நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க துளசி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. (மேலும் வாசிக்க- கால்சியம் குறைபாடு என்றால் என்ன)
துளசி சாற்றின் நன்மைகள் யாவை? (What are the benefits of basil extracts in Tamil?)
துளசி பல வகையான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அவை:
- உடல் எடையைக் குறைக்கிறது (Reduces body weight): உடல் எடையைக் குறைக்க துளசி நன்மை பயக்கிறது. துளசி இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, என சில ஆய்வுகள் கூறுகின்றன. உடலில் அதிக அளவில் குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் இருப்பதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு துளசி சாறு பயனுள்ளதாக இருக்கிறது. துளசி சாறு பருமனான மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. உடல் எடையைக் குறைக்க சுமார் 250 எம்.எல். துளசி சாற்றை எடுத்துக் கொள்ளலாம்.
- புற்றுநோய்க்கு நன்மை பயக்கிறது (Beneficial for cancer): புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க உதவும் மருத்துவ குணங்கள் துளசியில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியின் முடிவில், புற்றுநோய் செல்களை அழிப்பதில் துளசி பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. துளசியில் உள்ள துலூஸில் பைட்டோ கெமிக்கல்ஸ், ரோஸ்மரினிக் அமிலம், மார்ட்டெனோல், லுடோலின் மற்றும் அபிஜெனின் ஆகியவை புற்றுநோயைத் தடுக்கின்றன. மேலும், மார்பக புற்றுநோயைத் தடுக்கவும் துளசி சாறு நன்மை அளிக்கிறது. (மேலும் படிக்க- மார்பக புற்றுநோய் என்றால் என்ன)
- மன அழுத்தத்தை நீக்குகிறது (Relieves stress): மன அழுத்தத்தை போக்க துளசி சாறு உதவுகிறது. துளசி சாறு ஹார்மோன்களை இயல்பாக்க உதவும் ஒரு வகை இயற்கை மருந்து என சில ஆய்வுகள் கூறுகின்றன. தினசரி துளசி உட்கொள்வது மன அழுத்தம் மற்றும் மனம் சார்ந்த பிற நோய்களைக் குறைக்கிறது. (மேலும் வாசிக்க- மன அழுத்தத்தை குறைக்க சிவப்பு மிளகாயின் பயன்பாடு)
- இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது (Controls blood sugar): நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும் ஒரு முக்கியமான மருந்தாக துளசி கருதப்படுகிறது. ஏனெனில், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகள் துளசியில் உள்ளது. இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும், இதில் நிறைந்துள்ளன. மேலும், துளசி சாற்றில் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. துளசியில் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படும் சபோனின்கள், ட்ரைடர்பென்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. (மேலும் வாசிக்க- நீரிழிவு நோய்க்கான சிகிச்சைகள் யாவை)
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது (Increases immunity): துளசி சாற்றில், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துளசி இலைகளை தினசரி உட்கொள்ள வேண்டும். இது பல வகையான நோய்களைத் தடுக்கிறது. (மேலும் படிக்க- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எதை சாப்பிட வேண்டும்)
துளசி சாற்றின் பக்க விளைவுகள் யாவை? (What are the side effects of basil extracts in Tamil?)
துளசி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது, எனினும் சில அரிதான சந்தர்ப்பங்களில், இது சில பக்க விளைவுகளுக்கும் வழிவகுக்கிறது:
- துளசி சாறு இரத்த உறைதலைத் தடுக்கின்றது. இதனால் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படுகிறது. ஆகையினால், துளசி சாற்றை அதிக அளவில் உட்கொள்ளக் கூடாது.
- உங்களின் இரத்த அழுத்த அளவு இயல்பாக இருந்தால் துளசி சாற்றை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில், துளசி சாறு இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் துளசி சாற்றை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். (மேலும் படிக்க- கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் பிரச்சினைகள்)
துளசி சாற்றின் நுகர்வு காரணமாக உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
மும்பையில் சிறந்த பொது மருத்துவர்



