முடி உதிர்தல் பிரச்சினை | Hair fall problems in Tamil
நவம்பர் 26, 2020 Lifestyle Diseases 1743 ViewsEnglish हिन्दी Bengali Tamil العربية
ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் முடி உதிர்தல் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். முடி உதிர்வு பெரும்பாலும் மரபணு சிக்கல் மற்றும் தற்போதைய சூழலில் சோர்வு காரணமாகவும் ஏற்படுகிறது. தற்பொழுது, பெரும்பான்மையான மக்கள் அதிக மனச்சோர்வு நிறைந்த வாழ்க்கையை வாழ்கின்றனர், இதன் தாக்கத்தினால் விரைவில் முடி நரைத்தல் , முடி உதிர்தல் போன்ற சிக்கல்கள் எழுகின்றன. உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததாலும் முடி உதிர்தல் சிக்கல் எழுகிறது. இன்றையப் பதிவில் முடி உதிர்தல் பிரச்சினை பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுவோம்.
- முடி உதிர்தல் பிரச்சினை என்றால் என்ன? (What is meant by hair fall problems in Tamil?)
- முடி உதிர்தலுக்கான காரணங்கள் யாவை? (What is meant by hair fall problems in Tamil?)
- முடி உதிர்தலின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of hair fall problems in Tamil?)
- முடி உதிர்தலுக்கான சிகிச்சை என்ன? (What are the treatments for hair fall problems in Tamil?)
- முடி உதிர்வதைத் தடுக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் என்ன? (What are the home remedies for Hair fall problems in Tamil?)
முடி உதிர்தல் பிரச்சினை என்றால் என்ன? (What is meant by hair fall in Tamil?)
முடி உதிர்தல் ஆங்கிலத்தில் hair fall என்றழைக்கப்படுகிறது. உணவில், முடி மற்றும் கூந்தலின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் சத்துக்களின் குறைபாடுகளே முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதிக ரசாயனங்கள் கொண்டு முடியின் நிறங்களை மாற்றுதல் காரணமாக, முடி பலவீனம் அடைகிறது மற்றும் முடி உதிர தொடங்குகிறது. ஈரமான முடியை உலர வைக்க கருவிகளைப் பயன்படுத்தி உலரவைப்பதும் முடி உதிர்வதற்கு காரணமாக அமைகிறது.
முடி உதிர்தலுக்கான காரணங்கள் யாவை? (What are the causes of hair fall problems in Tamil?)
- தற்பொழுது முடி உதிர்தல் பிரச்சினை மனிதர்களில் மிகவும் பரவலாக உள்ளது.
- சிலருக்கு தலைமுறை தலைமுறையாக முடி உதிர்தல் பிரச்சினை உள்ளது.
- ஹார்மோன்களின் மாற்றத்தால் முடி உதிர்தல் ஏற்படுகின்றது. தொற்று நோய் காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுகிறது.
- கீல்வாதம் (Arthritis) நோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முடி உதிரத் தொடங்குகிறது.
- உணவில் இரும்புச்சத்து மற்றும் புரதத்தை குறைவாகப் எடுத்துக்கொள்வதினால் முடி பலவீனம் அடைகிறது.
- பெரும்பாலும், ஹார்மோன் மாற்றங்களே முடி உதிர்தலுக்கான முக்கிய காரணமாகும்.
முடி உதிர்தலின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of hair fall problems in Tamil?)
- கூந்தல் பலவீனம் அடைதல்.
- முடி உடைதல்.
- உடல் முழுவதும் உள்ள முடிகள் குறைதல்.
- வட்டத் திட்டு வழுக்கை.
முடி உதிர்தலுக்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for hair fall problems in Tamil?)
- தலைமுடி உதிர்தல், ஒரு தீவிரமான பிரச்சினையாக இருந்தால், முடி அறுவை சிகிச்சைச் செய்ய மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
- முடி உதிர்தல் பிரச்சினை ஆரம்பக்கட்டத்தில் இருந்தால், மருத்துவர்கள் சில மருந்துகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றனர். கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் மினோக்சிடில் எனப்படும் மருந்துகளை அதிகமாக பரிந்துரைக்கின்றனர்.
- மேலும், முடி உதிர்தல் ஓர் தொடர் பிரச்சினையாக இருந்தால், (dermatology) தோல் மருத்துவரை அணுக வேண்டும்.
முடி உதிர்வதைத் தடுக்க வீட்டு வைத்தியம் என்ன? (What are the home remedies for hair fall problems in Tamil?)
- முடி உதிர்தல் பிரச்சினையை சரிசெய்ய முட்டைகளைப் பயன்படுத்த வேண்டும். இரண்டு முட்டைகளை உடைத்து, அதிலிருந்து மஞ்சள் கருவை நீக்கி நன்றாகக் கலந்து, பேஸ்ட் செய்து, தூரிகையின் ( brush) உதவியுடன் உங்கள் தலை முடியில் தடவவும், பின்னர் தலையை துணியால் மூடி வைக்கவும். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைமுடியை குளிர்ந்த நீரில் கழுவவும், பின்னர் ஷாம்பு போட்டு குளிக்கவும்.
- முடி உதிர்தல் பிரச்சினையை சரிசெய்ய அம்லா ஒரு சஞ்சீவி போல வேலை செய்கிறது. நெல்லிக்காயை தேங்காய் எண்ணெயில் வேகவைத்து அந்த எண்ணெய் கருப்பு நிறமாக மாறும் வரை காய்ச்சி, இந்த கருப்பு எண்ணெயை தலைமுடியில் பயன்படுத்தி சிறிது நேரம் விட்டு விடுங்கள். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, முடியை நன்கு கழுவி, பின்னர் ஷாம்பு போட்டு குளிக்கவும்.
- தேங்காய் எண்ணெயை கூந்தலுக்கு தினமும் தடவவும், ஏனெனில் தேங்காய் எண்ணெய் முடி வேர்களை பலப்படுத்துகிறது.
உங்களுக்கு அதிக முடி உதிர்தல் பிரச்சினைகள் இருந்தால் அல்லது முடி உதிர்தல் குறித்து கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், தோல் மருத்துவரைத் (Dermatologist) தொடர்பு கொள்ளுங்கள்.



