முல்தானி மெட்டியின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்ளுங்கள் | Know the benefits and side effects of Multani Mitti in Tamil

மார்ச் 4, 2021 Lifestyle Diseases 2233 Views

English हिन्दी Tamil

முல்தானி மெட்டி என்று பிரபலமாக அழைக்கப்படும்  fuller’s earth  ஒரு வகை களிமண் ஆகும், இது சருமத்தின் தரம் மற்றும் அமைப்பை அழகுபடுத்தவும் மேம்படுத்தவும் பயன்படுகிறது. இது  பிற சாதாரண மண்களிலிருந்து மிகவும் மாறுபட்ட இருக்கிறது. இது சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க  உதவும் ஓர் இயற்கையான வழி முறையாகும். பல்வேறு  முக மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளில் முல்தானி மெட்டி பயன்படுகிறது. பெரும்பாலும், பாகிஸ்தான்  தளத்தில் காணப்படும் முல்தானி மெட்டியில் தோல் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்தும் பல்வேறு தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இன்றையப் பதிவில் முல்தானி மெட்டியின் நன்மைகள் பற்றி ஆராய்வோம்.

  • முல்தானி மெட்டியில் காணப்படும் ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What are the nutrients found in Multani Mitti?)
  • முல்தானி மெட்டியின் நன்மைகள் யாவை? (What are the benefits of multani mitti in Tamil?)
  • முல்தானி மெட்டியின் பக்க விளைவுகள் யாவை? (What are the side effects of multani mitti in Tamil?)

முல்தானி மெட்டியில் காணப்படும் ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What are the nutrients found in Multani mitti in Tamil?)

முல்தானி மெட்டியில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், சிலிக்கா, டோலமைட் மற்றும் கால்சைட் ஆகியவை உள்ளன. இவை ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. 

முல்தானி மெட்டியின் நன்மைகள் யாவை? (What are the benefits of Multani Mitti in Tamil?)

முல்தானி மெட்டி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, அவை

  • பொடுகுக்கு சிகிச்சையளிக்கிறது (Treats dandruff): தற்போதைய சூழலில், மாசு காரணமாக பொடுகு மற்றும் உச்சந்தலையில்  வறட்சி ஆகிய சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. முல்தானி  மெட்டி பல ஆண்டுகளாகவே தலையில் உண்டாகும்  பொடுகு  பிரச்சினைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது பொடுகை நீக்கி தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.  இதனை பயன்படுத்த, ஒரு கிண்ணத்தில் நான்கு டீஸ்பூன் முல்தானி மெட்டி தூள், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு கப் தயிர் ஆகியவற்றை கலந்து ஒரு கலவையைத் தயாரித்து கொள்ளவும். இதை, உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். சிறந்த முடிவுகளைப் பெற வாரத்திற்கு இரண்டு முறை இந்த செயல்முறையை செய்யவும்.
  • முகப்பருவை குணப்படுத்துகிறது (Treats pimples): முல்தானி  மெட்டி சருமத்திலுள்ள எண்ணெயை உறிஞ்சுவதன் மூலம், முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கிறது. முகப்பருக்கள் நீங்க வேப்ப இலைகள், முல்தானி மெட்டி, கற்பூரம் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவவும். 
  • சருமத்தின் இறந்த செல்களை நீக்குகிறது (Removes dead skin cells): சருமத்திலுள்ள அழுக்கை நீக்கவும், சருமத்தின் தரத்தை மேம்படுத்தவும் முல்தானி மெட்டி பயனுள்ளதாக இருக்கிறது. முல்தானி மெட்டி, கிளிசரின் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து ஒரு பேஸ்டை தயாரித்து கொள்ளவும். இதை, முகத்தில் தடவி காய்ந்த பின் வெதுவெதுபான தண்ணீரில் கழுவ வேண்டும். (மேலும் படிக்க – சருமத்திற்கு யூகலிப்டஸ் எண்ணெயின் நன்மைகள்
  • கூந்தலிலுள்ள பிளவு முனைகளைத் தடுக்கிறது (prevents split ends in the hair): முல்தானி மெட்டி கூந்தலில் ஏற்படும் பிளவு முனைகளின் சிக்கலைத் தவிர்க்கிறது மற்றும் முடியை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் பராமரிக்க உதவுகிறது. முல்தானி மெட்டியைத் தலைமுடியில் தடவிய பின், ஷாம்பூவைப் பயன்படுத்தி கழுவுங்கள். (மேலும் படிக்க- முடி உதிர்தல் என்றால் என்ன
  • சோர்வை நீக்குகிறது (Relieves fatigue) : கைகள் அல்லது கால்களில் வலியை ஏற்படுத்தக்கூடிய காயங்களுக்கு முல்தானி மெட்டியைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்க முடிகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் இதைப் பயன்படுத்துவதன் மூலம், அந்தப் பகுதிகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இயலும். 

முல்தானி மெட்டியின் பக்க விளைவுகள் யாவை? (What are the side effects of Multani mitti in Tamil?)

முல்தானி மெட்டி ஒரு நல்ல இயற்கை மூலிகை என்பதால் பெரும்பாலும், இது குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. எனினும், முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் பயன்பாட்டு முறைகளை அறிவது மிகவும் முக்கியமாகும்.

  • கலப்பு வகை தோல் உள்ளவர்களுக்கு, முல்தானி  மெட்டியை முகத்தில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில், முல்தானி மெட்டி அத்தகைய தோல் வகையை வறண்டு போக வைக்கிறது. எனவே, முல்தானி மெட்டியை பால் மற்றும் பாதாமுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும். 
  • முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவது சளி மற்றும் இருமலுக்கு வழிவகுக்கிறது. எனவே, உங்களுக்கு சளி இருந்தால் அதைப் பயன்படுத்த வேண்டாம். 
  • பெரும்பாலும், பெண்கள் ஏராளமான அழகுசாதனப் பொருட்களைத் தோலில் பயன்படுத்துகிறார்கள். மாறாக தோலை பராமரிக்கவும், சருமத்தின் தரத்தை மேம்படுத்தவும் முல்தானி மெட்டியைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். (மேலும் வாசிக்க- சருமத்திற்கு கிவி பழத்தின் நன்மைகள்

முல்தானி மிட்டியைப் பயன்படுத்துவதால் ஏதேனும் சிக்கலை நீங்கள் எதிர்கொள்ள நேரிட்டால், ஒரு தோல் மருத்துவரைத் (Dermatologist) தொடர்பு கொள்ளுங்கள். 

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள்  நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


மும்பையில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்

டெல்லியில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்

சென்னையில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்

பெங்களூருவில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha