நிபா வைரஸ் தொற்று பாதிப்பு | Nipah virus infection in Tamil
ஜனவரி 5, 2021 Lifestyle Diseases 972 Viewsநிபா வைரஸ் என்பது ஒரு புதிய வகை வைரஸ் தொற்று ஆகும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வேகமாக பரவுகிறது. இதன் விளைவாக உண்டாகும் நிபா வைரஸ் நோய் மிகவும் தீவிரமானதாக இருக்கிறது. இந்த நோய்க்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. எனினும், ஆராய்ச்சியாளர்கள் இதற்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். நிபா வைரஸ் முதலில் கம்புங் சுங்கை நிபா, என்னும் மலேசியா நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் நிப்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. மலேசியாவுக்குப் பிறகு, இந்த வைரஸ் பங்களாதேஷிலும் கண்டறியப்பட்டது. தற்போது, இதன் தாக்கம் இந்தியாவிலும் காணப்படுகின்றது. நம் நாட்டில் இந்த வைரஸ் கேரள மாநிலத்தில் அதிகமாக பரவியுள்ளது. இன்று இந்தக் கட்டுரையில், நிபா வைரஸ் தொற்று பாதிப்பு பற்றிய விரிவான தகவல்களைக் கூறுகிறோம்.
- நிபா வைரஸ் தொற்று பாதிப்பு எவ்வாறு பரவுகிறது? (How does Nipah virus infection spread in Tamil?)
- நிபா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன? (What are the symptoms of Nipah virus infection in Tamil?)
- நிபா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of Nipah virus infection in Tamil?)
- நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for Nipah virus infection in Tamil?)
- நிபா வைரஸ் தொற்று பாதிப்பை எவ்வாறு தடுப்பது? (How to prevent Nipah virus infection in Tamil?)
நிபா வைரஸ் தொற்று பாதிப்பு எவ்வாறு பரவுகிறது? (How does Nipah virus infection spread in Tamil?)
- நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பன்றிகள் மற்றும் வெளவால்களின் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபருடன், ஆரோக்கியமான நபர் தொடர்பு கொள்வதினாலும் மனிதர்களிடையில் இந்த வைரஸ் தொற்று பரவுகிறது.
- இந்த வைரஸ் முதன்முதலில் மலேசியாவில் கண்டறியப்பட்டது, மலேசியாவில் இந்த நோய் பாதிக்கப்பட்ட பன்றிகளின் மூலம் பரவியது. சிங்கப்பூரில், நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட வெளவால்களின் மூலம் பரவியது.பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில், இந்த நோயின் தாக்கம் உள்ள வெளவால்களால் பாதிக்கப்பட்ட பனை கனத்தை குடித்ததன் விளைவாக நிபா வைரஸ் மனிதர்களிடியே பரவியது. இந்த வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நோயினால் பாதிக்கப்பட்ட பன்றிகள், வௌவால்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
நிபா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன? (What are the symptoms of Nipah virus infection in Tamil?)
பின்வருவன, நிபா வைரஸ் நோய் தொற்றின் அறிகுறிகளாகும். எனினும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இது போன்ற அறிகுறிகள் ஏற்படாமலும் இருக்கலாம். அவை:
- காய்ச்சல் மற்றும் தலைவலி
- மயால்ஜியா (தசை வலி)
- தொண்டை வலி
- வாந்தி
- தலைச்சுற்றல்
- கடுமையான சுவாச நோய்க்குறி (Acute respiratory syndrome) அல்லது நிமோனியா (atypical pneumonia )
நிபா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of Nipah virus infection in Tamil?)
- மலேசியா மற்றும் சிங்கப்பூரில், நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பன்றிகளின் மூலம் பரவியது.
- பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில், இந்த நோயின் தாக்கம் உள்ள வெளவால்களால் பாதிக்கப்பட்ட பனை கனத்தை குடித்ததன் விளைவாக நிபா வைரஸ் மனிதர்களிடியே பரவியது. மேலும், இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது.
நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for Nipah virus infection in Tamil?)
- நிபா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. எனினும், அதன் அறிகுறிகளைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- வைரஸ் மிக எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. எனவே, மருத்துவமனைகளில் இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ரிபாவிரின் (ribavirin) மருந்து நிபா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையில் பயனுள்ளதாக அமைகிறது. எனினும், மனிதர்களுக்கு இந்த மருந்து நிவாரண அளிக்குமென இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
நிபா வைரஸ் தொற்று பாதிப்பை எவ்வாறு தடுப்பது? (How to prevent nipah virus infection in Tamil?)
நிபா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவை:
- ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பாதிக்கப்பட்ட வெளவால்கள் மற்றும் பன்றிகளுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும்.
- பனை கன்று சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
- இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.
- இந்த தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாமல் தடுப்பது மிகவும் முக்கியமானதாகும். இந்த வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, இந்த நோய் தொற்று பற்றிய தகவல்கள் மக்கள் மத்தியில் பரவ வேண்டும். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நிபா வைரஸ் பற்றிய கூடுதல் தகவல்களையும், அதன் சிகிச்சையையும் நீங்கள் பெற விரும்பினால் ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)
சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)
பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)



