அவில் ஊசி என்றால் என்ன | What is Avil injection in Tamil
ஜனவரி 4, 2021 Lifestyle Diseases 2980 Viewsஅவில் ஊசி என்றால் என்ன (Description of Avil injection in Tamil)
அவில் ஊசி என்றால் என்ன? அவில் ஊசி என்பது ஒரு வகை ஆன்டி அலெர்ஜிக் மருந்தாகும். இது பூச்சி கடித்தல், படை நோய் (தடிப்புகள், வீக்கம் போன்றவை) மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதன் காரணமாக உடலில் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளின் அறிகுறிகள் ஏற்படும் போது, அதற்கான சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. உங்கள் உடல் மகரந்தம், விலங்குகளின் முடி, வீட்டு தூசு போன்ற காரணங்களால் ஒவ்வாமை அடையும் போது உடலில் ஹிஸ்டமைன் என்ற வேதிப்பொருள் உருவாகிறது. இதன் விளைவாக கண் எரிச்சல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தும்மல், தோல் வெடிப்பு, தோலில் அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. உடலில் உருவாகும் ஹிஸ்டமைனின் செயல்பாட்டைத் தடுக்க அவில் ஊசி பயன்படுத்தப்படுகிறது. இன்றையப் பதிவில் அவில் ஊசி என்றால் என்ன என்பது குறித்த விரிவான தகவல்களை காண்போம்.
அவில் ஊசியின் பயன்கள் மற்றும் நன்மைகள் (Uses and benefits of Avil injection in Tamil)
ஒவ்வாமை எதிர்வினையின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க அவில் ஊசி பயன்படுத்தப்படுகிறது.
- காய்ச்சல், தோல் அரிப்பு மற்றும் தோல் வெடிப்பு போன்ற ஒவ்வாமை நிலைகளுக்கு சிகிச்சையளிக்க அவில் ஊசி பயன்படுத்தப்படுகிறது.
- அவில் ஊசி மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தும்மல், அரிப்பு மற்றும் கண்களிலிருந்து நீர் வெளியேற்றம் போன்ற அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும், இது போன்ற தொந்தரவுகளிலிருந்து விலகி உங்கள் அன்றாட பணிகளை எளிதாக செய்ய உதவுகின்றது.
- பூச்சி கடித்ததினால் ஒவ்வாமை, படை நோய் மற்றும் அரிக்கும் தோலழற்சி, சொறி, வீக்கம், தோலில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற ஒவ்வாமை எதிர்வினை அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. சருமத்தின் நிலையை மேம்படுத்துகிறது. மேலும், இது போன்ற ஒவ்வாமை எதிர்வினைகளிலிருந்து நிவாரணம் பெற விரும்பும் உங்கள் மனநிலையும் நம்பிக்கையும் மேம்படுத்துகிறது.
அவில் ஊசி மருந்தின் அளவு மற்றும் அதை எப்படி எடுத்துக்கொள்வது? (Dosage of Avil injection and how to use it in Tamil?)
- மருத்துவர் அல்லது செவிலியர் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த மருந்தை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தாமாகவே இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள கூடாது.
- ஒரு மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் நரம்புகள் அல்லது தசைகளுக்குள் அவில் ஊசி செலுத்தப்பட வேண்டும். மேலும், இதன் அளவு மற்றும் எத்தனை முறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகளின் அடிப்படையில் மருத்தவர்கள் தீர்மானிக்கின்றனர். மேலும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படாமல் பாதிக்கப்பட்டவர்கள் அவில் ஊசியை எடுத்துக் கொள்ளக்கூடாது.
அவில் ஊசியிலுள்ள கலவை (Composition of Avil injection in Tamil)
ஒவ்வொரு அவில் ஊசியிலும் ஃபெனிரமைன் (22.75 மிகி) (Pheniramine) உள்ளது.
அவில் ஊசியின் பக்க விளைவுகள் (Side effects of Avil injection in Tamil)
அவில் ஊசியினால் ஏற்படும் பெரும்பாலான பக்கவிளைவுகளுக்கு எந்தவொரு மருத்துவச்சிகிச்சைகளும் தேவைப்படுவதில்லை, ஏனெனில், உங்கள் உடல் நிலை இந்த மருந்துக்கு ஒன்றிபோகும் போது சிறிது நேரத்தில் இந்த விளைவுகள் தானாகவே மறைந்துவிடுகின்றன. இருப்பினும், இந்த பக்க விளைவுகள் அதிக நாட்கள் தொடர்ந்தால் அல்லது இது போன்ற பக்க விளைவுகளினால் நீங்கள் கவலைப்படுகிறீர்யெனில் மருத்துவரை அணுகவும். அவை :
- அதிக தூக்கம் கொள்வது, இது மிகவும் பொதுவான பக்க விளைவாகும்.
- ஒவ்வாமைகளுக்கு ஹைபர்சென்சிட்டிவாக இருப்பது.
- மூச்சுத் திணறல்.
- தலைச்சுற்றல்.
- மங்கலான கண் பார்வை.
- அரிப்பு
- எரிச்சல்
- அதிவிரைவான இதயத்துடிப்பு (Tachycardia)
- வாய் வறண்டு இருத்தல்.
அவில் ஊசி தொடர்பான முன்னெச்சரிக்கைகள் (Precautions about Avil injection in Tamil)
அவில் ஊசியின் விளைவாக அதிக தூக்கம் ஏற்படுகின்றது (தூக்கம் மற்றும் மந்தமான உணர்வு), இத்தகைய சூழலில் நோயாளிகள் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்:
- அவில் ஊசி பயன்படுத்தும் போது ஆல்கஹால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- ஏனெனில், அவில் ஊசியிலுள்ள மருந்துகள் ஆல்கஹால் உடன் சேர்ந்து அதிக மயக்கத்தை (தூக்கம் மற்றும் மந்தமான உணர்வு) ஏற்படுத்தக்கூடும்.
- கர்ப்ப காலத்தில் அவில் ஊசி பயன்படுத்துவது குறித்துத் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை. எனவே, கர்ப்பிணிப் பெண்கள் அவில் ஊசியை பயன்படுத்த வேண்டுமாயின் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
- தாய்ப்பால் கொடுக்கும் போது அவில் ஊசி பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. இந்த மருந்து தாய்ப்பால் பருகும் குழந்தைக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தாது என்று சில தகவல்கள் கூறுகிறது.
- எனினும், அதிக அளவில் அல்லது அடிக்கடி அவில் ஊசியை பயன்படுத்துவதினால் குழந்தைக்கு அதிக தூக்கம் ஏற்படுகின்றது. மற்றும் இது பிற விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
- அவில் ஊசியை எடுத்துக் கொண்ட பின் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், சில சந்தர்ப்பங்களில் அவில் ஊசியின் பயன்பாட்டினால் வாகனம் ஓட்டும் போது உங்கள் கவனம் சிதறி, நீங்கள் அதிக தூக்கத்தையும் மயக்கத்தையும் உணர நேரிடுகிறது.
- சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அவில் ஊசியைப் பயன்படுத்த வேண்டுமாயின் மருத்துவரை அணுகுங்கள்.
- கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அவில் ஊசியைப் பயன்படுத்த வேண்டுமாயின் மருத்துவரை அணுகுங்கள்.
- அவில் ஊசியை அதிக அளவில் எடுத்துக் கொள்வதினால், அதன் மருந்துகளினால் விளைவுகளால் ஹாலோசினேஷன் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
அவில் ஊசி எப்போது பயன்படுத்தக்கூடாது? (When not to use Avil injection in Tamil?)
- மரபணு சிக்கல்கள் உள்ளவர்களுக்கு (Porphyria)
- இதய நோயாளிகளுக்கு
- கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு.
பிற மருந்துகளுடன் அவில் ஊசியின் தொடர்பு (Interaction of Avil injection with other drugs in Tamil)
பின்வரும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றுடன் இணைந்து அவில் ஊசியை உட்கொள்ளும் போது, இந்த மருந்துகள் ஒன்றோடு ஒன்று கலந்து சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறன. அவை : (மருந்துகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் குறிப்பிடபட்டுள்ளது)
கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துபவை (Severe conditions occurs due to):
- Zafirlukast (Zuvair)
- Selegiline (Selegiline, Eldepryl, Elegelin, Jumex, Selgin)
- Rasagiline (Rasagin, Rasalect, Rasipar, Relgin, Rasagiline)
- Atropine (Atropine Sulphate, Atropine + Chloramphenicol + Dexamethasone, Sunephrine H, Atropine + Tetracycline)
மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்துபவை (Moderate conditions occurs due to):
- Betahistine (Histiwel, Histanil, Behop)
- Chlordiazepoxide (Equblam)
- Diazepam (Sycodep, Placidox, Toframine, Valium, Trikodep)
- Alprazolam (Flumusa Forte, Anxit, Alp Plus, Alprax, Alprop)
- Amitriptyline (Amitar Plus Tablet, Amitop Plus, Libotryp Tablet, Amitril Plus, Amitryn C)
- Imipramine (Sycodep, Toframine, Trikodep, Trikodep Forte, Tudep)
- Amikacin (Omnikacin, Amicin Injection, Mikacin Injection, Camica, Cecef)
அவில் ஊசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently asked questions about Avil injection in Tamil)
1) அவில் ஊசியின் பயன்பாடு ஒரு பழக்கமாக மாற அல்லது அடிமையாக்க நேரிடுமா? (Can Avil injection be habit forming or additive in Tamil?)
அவில் ஊசி போதை மருந்து அல்ல, இதனை மருத்துவரின் ஆலோசனைப்படி எந்தத் தீங்கும் ஏற்படாதவாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
2) அவில் இன்ஜெக்ஷன் எடுத்தக் கொண்ட பிறகு வாகனம் ஓட்டுவது அல்லது கனரக இயந்திரத்தை இயக்குவது பாதுகாப்பானதா? (Is it safe to drive a vehicle or to operate a heavy machine after the intake of Avil injection in Tamil?)
அவில் ஊசி எடுத்த பிறகு கனரக இயந்திரங்களை இயக்குவது மற்றும் வாகனம் ஓட்டுவது பாதுகாப்பில்லை. ஏனெனில், அவில் ஊசி பயன்பாட்டினால் உங்கள் கவனத்தை சிதறி, தூக்கத்தையும் மயக்கத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.
3) அவில் ஊசியைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? (Is it safe to take Avil injection in Tamil?)
மருத்துவரின் ஆலோசனைப்படி அவில் ஊசி எடுத்துக் கொள்வது பாதுக்காப்பானதாகும்.
4) மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க அவில் ஊசியை பயன்படுத்த முடியுமா? (Can Avil injection be used to cure mental disorders in Tamil?)
அவில் ஊசியை எடுத்துக் கொள்வது மனநல கோளாறுகளுக்கு பயனளிக்காது.
5) அவில் ஊசி சளிக்கு ஒரு நல்ல மருந்தா? (Is Avil injection a good medicine for cold in Tamil?)
சளி, கண்களிலிருந்து நீர் வெளியேற்றம், மூக்கடைப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் அவில் ஊசியின் பயன்பாடு பயனுள்ளதாக அமைகிறது.
உணவுடன் அவில் ஊசி மருந்தின் எதிர்வினை (Avil injection reaction with food in Tamil)
அவில் ஊசியை உணவுடன் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதாகும்.
ஆல்கஹால் உடன் அவில் ஊசி மருந்தின் எதிர்வினை (Avil injection reaction with alcohol)
- ஆல்கஹால் உடன் அவில் ஊசியை எடுத்துக் கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. எனவே, மருத்துவரை அணுகுவது நல்லது.
- ஏனெனில், அவில் ஊசியிலுள்ள மருந்துகள் ஆல்கஹால் உடன் சேர்ந்து அதிக மயக்கத்தை (தூக்கம் மற்றும் மந்தமான உணர்வு) ஏற்படுத்தக்கூடும்.
அவில் ஊசியின் மாற்று மருந்து (Substitute for Avil injection in Tamil)
நிக்கோபன் ஊசி 2.75 மி.கி (Nicophen)
கெய்பென் ஊசி 22.75 மி.கி (Kayphen)
உற்பத்தியாளர் (Manufacturer):
சனோஃபி இந்தியா லிமிடெட் (sanofi India Ltd)
தேவையான பொருட்கள் / உப்பு (Ingredients / salt):
ஃபெனிரமைன் (22.75 மி.கி), (pheniramine) மருத்துவரால் பரிந்துரைக்கப்படுவது கட்டாயமாகும்.
உரிமைதுறப்பு (Disclaimer):
இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் எங்கள் அறிவு மற்றும் அனுபவத்தில் மிகச் சிறந்தவை, மேலும் அதை முடிந்தவரை சரியான மற்றும் துல்லியமானதாக மாற்ற நாங்கள் எங்களால் முடிந்தவற்றை செய்துள்ளோம், எனினும், இதை ஒரு தொழில்முறை நிபுணரின் (மருத்துவர்கள்) பரிந்துரைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. ஆலோசனை, நோயறிதல் அல்லது வீட்டு சிகிச்சை போன்றவற்றையே நாங்கள் வழங்குகின்றோம்.
Logintohealth இன் மூலம் எங்கள் பார்வையாளர்களுக்கு தேவையான சில பொதுவான தகவல்களை வழங்குவதே எங்கள் நோக்கமாகும். மேலும், இதில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்களின் துல்லியம் குறித்து எந்த உத்தரவாதமும் நாங்கள் அளிக்கவில்லை. எந்தவொரு மருந்து அல்லது சிகிச்சைக்கான எச்சரிக்கையைப் பற்றி குறிப்பிடுகிறோம் என்றாலும், நாங்கள் அந்த மருந்தை செய்கிறோம் என்று அர்த்தமில்லை. மேலும், ஒரு நிபுணரின் முறையான ஆலோசனை இல்லாமல் அதை உட்கொள்ளுதல் பாதுகாப்பு அளிக்காது. மருந்துகள் அல்லது சிகிச்சையின் எந்தவொரு விளைவிக்கும் Logintohealth பொறுப்பேற்காது. நீங்கள் உட்கொள்ளும் மருந்து குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை சந்திக்க பரிந்துரைக்கிறோம்.
மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)
சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)
பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)



