ஹெபடைடிஸ் பி என்றால் என்ன | Hepatitis B meaning in Tamil 

நவம்பர் 30, 2020 Liver Section 9390 Views

English हिन्दी Bengali Tamil العربية

ஹெபடைடிஸ் பி என்றால் என்ன ? ஹெபடைடிஸ் பி ஏற்படுவற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்.

  • ஒவ்வொரு ஆண்டும் ஹெபடைடிஸ் பி தொற்றின் தாக்கத்தினால்  கல்லீரல் பாதிக்கப்பட்டு  3 முதல் 4 ஆயிரம் பேர் இறக்கின்றனர். ஹெபடைடிஸ் பி  க்ரோனிக் ஹெபடைடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் பி நோய் தொற்றின் காரணமாக  கல்லீரலில் வீக்கம் உண்டாகிறது. ஹெபடைடிஸ் பி பொதுவாக  ஒரு வகை தீவிர வைரஸ் தொற்றினால் உண்டாகும். சில நேரங்களில் பாக்டீரியா தொற்றாலும், சில மருந்துகளின்  மோசமான பக்க  விளைவுகளாளும் ஹெபடைடிஸ் ஏற்படுகின்றது.
  • ஹெபடைடிஸ் பி முக்கியமாக மனிதனின்  ஸ்பூட்டம் , சிறுநீர், விந்து, இரத்தம், யோனி ஆகியவற்றில் ஏற்படும் தொற்றுகளின் காரணமாய் பரவுகிறது.  ஒரே ஊசியில் போதை மருந்துகளை மாற்றி மாற்றி எடுத்துக் கொள்பவர்களுக்கும்ஒன்றுக்கு மேற்பட்ட நபகர்லோடு உடல் உறவைக் கொள்பவர்களுக்கும் ஹெபடைடிஸ் நோய் தொற்று ஏற்படுகிறது. குறிப்பாக இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்பவர்களிடயே  இந்த நோய் தொற்று  எளிதில் பரவுகிறது. 

 

  • ஹெபடைடிஸ் பி என்றால் என்ன? (What is meant by hepatitis B in Tamil?)
  • ஹெபடைடிஸ் பி ஏற்படுவற்கான காரணங்கள் யாவை? (What are the causes of hepatitis B in Tamil?) 
  • ஹெபடைடிஸ் பி -யின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of hepatitis B in Tamil?) 
  • ஹெபடைடிஸ் பி நோய்க்கான  சிகிச்சைகள் யாவை? (What are the treatments for hepatitis B disease in Tamil?)

ஹெபடைடிஸ் பி என்றால் என்ன? (What is meant by hepatitis B in Tamil?)

ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி  என்று இரண்டு வகைகளில் ஏற்படுகின்றது.  ஹெபடைடிஸ் ஏ யை விட ஹெபடைடிஸ் பி மிகவும் பயங்கரமானதாகும். ஏனெனில்ஹெபடைடிஸ் பி முக்கியமாக மனிதனின்  கல்லீரலிலைப் பாதிக்கிறது. ஹெபடைடிஸ் வைரஸ் அசுத்தமான தண்ணீரின்  மூலம் அதிகமாக பரவுகிறது. சிலருக்கு, ஹெபடைடிஸ் பி தொற்று நீண்ட நேரம் நீடித்த போதும் அந்த நபரால் அதைக் கண்டுபிடிக்க இயலாது, அத்தகைய சூழலில் அது நாள்பட்ட ஹெபடைடிஸ் ( chronic hepatitis) என்று அழைக்கப்படுகிறது.

ஹெபடைடிஸ் பி ஏற்படுவற்கான காரணங்கள் யாவை? (What are the causes of hepatitis B in Tamil?) 

ஹெபடைடிஸ் பி என்பது ஹெபடைடிஸ் பி என்ற வைரஸால் பரவும் தொற்று நோயாகும். பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நபரின் இரத்தத்தின் மூலமாகவும், உடல் திரவங்கள் மூலமாகவும் இந்த நோய் பரவுகிறது.

ஹெபடைடிஸ் பி தொற்று உண்டாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவைற்றைக் குறித்து காண்போம்,

  • பாதிக்கப்பட்ட நபர்கள் உபயோகித்த ஊசிகள், பிளேடுகள் ஆகியவற்றின் மூலம்  ஹெபடைடிஸ் பி தொற்று  பரவுகிறது.
  • கர்ப்ப காலத்தில் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து ஹெபடைடிஸ் பி தொற்று    சிசுவிற்கு பரவுகிறது.
  • பாதிக்கப்பட்ட நபரின் டுத்ப்ரஸஷ் , அவர் பயன்படுத்தியத் தச்சு கத்திகள் ( blade ) போன்ற பொருள்களைப் மற்றவர்கள் பயன்படுத்துவதன் மூலமும்  நோய் தொற்று பரவுகிறது.
  • முறையற்ற உபகரணங்களுடன் காது குத்துதல் மற்றும் பச்சை குத்துதல் போன்றவை நோய் தொற்று பரவுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
  • முறையான  பரிசோதனையின்றி நோய் தொற்று உள்ள  நபரின் இரத்தத்தை மற்ற நபர்களுக்கு மாற்றுவதன் மூலமும் ஹெபடைடிஸ் பி தொற்று ஏற்படுகிறது.

ஹெபடைடிஸ் பி -யின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of hepatitis B in Tamil?) 

ஹெபடைடிஸ் பி  -யின் அறிகுறிகள்

  • ஹெபடைடிஸ் பி நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டறிவது கடினம். ஏனெனில், ஹெபடைடிஸ் பி க்கு பல அறிகுறிகள்  உள்ளன.
  • அதிக சோர்வு. 
  • வாந்தி மற்றும் வயிற்று வலி. 
  • பாதிக்கப்பட்ட நபரின் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக  மாறுதல். 
  • சிகப்பு  அடர் நிற சிறுநீர்.
  • காய்ச்சல்.
  • தலைவலி மற்றும் குமட்டல். 
  • பாதிக்கப்பட்ட  நபரின்  உடலில் அதிக அரிப்பு ஏற்படுதல்.

ஹெபடைடிஸ் பி நோய்க்கான  சிகிச்சைகள் யாவை? (What are the treatments for hepatitis B disease in Tamil?)

ஹெபடைடிஸ் பி நோயால் பாதிக்கப்பட்ட நபர்களிடத்தில், மேற்கூறிய  அறிகுறிகளைக் காண இயலாத போது இதனைக் கண்டறிய  மருத்துவர்கள் நிறைய சோதனைகளை செய்கிறார்கள்.

  • ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்றைக்  கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது மற்றும்  HBsAg  பரிசோதனை செய்யப்படுகிறது. ஹெபடைடிஸ் பி தொடக்கத்தில், lgM ஐ பரிசோதனையும், அதுவே நீண்ட காலம்  நீடித்தால்  IgG ஐ சோதனையையும்  செய்கின்றனர்.
  • பாதிக்கப்பட்ட நபரின் கல்லீரல் குறைபாடுடையதாக இருந்தால், liver biopsy பரிசோதனையின்  மூலம் கல்லீரல் நிலை சரிபார்க்கப்படுகிறது. 
  •  உடலில்  ஹெபடைடிஸ் பி வைரஸின் தாக்கத்தைக் கண்டறிய  HBsAg பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. 
  • Liver function test, ஹெபடைடிஸ் பி தொற்று  கல்லீரலில் ஏற்படுத்தியுள்ள விளைவைக்  கண்டறிய  இந்தப்  பரிசோதனை செய்யப்படுகிறது. 
  • கல்லீரலின் நிலையைச் கண்டறிய  வயிற்றில் ultra sound scan செய்யப்படுகிறது. 
  • Polymerase chain reaction  (P.S.R) பரிசோதனை,  இரத்தத்தில் கலந்துள்ள வைரஸின் தாக்கத்தை  கண்டறிய  உதவுகிறது.

ஹெபடைடிஸ் பி தொடர்பான கூடுதல் தகவல்களையும் சிகிச்சையையும் நீங்கள் பெற விரும்பினால், இன்றே எந்த தாமதமும் இல்லாமல் (Hepatologist) ஹெபடாலஜிஸ்ட்டைத் தொடர்பு கொள்ளுங்கள்.


Best Hepatologist in Delhi

Best Hepatologist in Mumbai

Best Hepatologist in Bangalore

Best Hepatologist in Chennai


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha