ஃபலோபியன் குழாய் (கருப்பை குழாய்) அடைப்பு | Blocked fallopian tube in Tamil

ஜனவரி 14, 2021 Womens Health 2598 Views

English हिन्दी Tamil

பெரும்பாலும் திருமணத்திற்குப் பின், பெண்கள் விரைவாக  தாயாக ஆக வேண்டும் என்ற ஆசையை கொண்டுள்ளனர். எனினும், சில பெண்களுக்கு இந்த ஆசை சாத்தியமானதாக அமைவதில்லை. அவர்கள் தாயாகததிற்கு முக்கிய காரணம் ஃபலோபியன் குழாயில் அடைப்பு ஏற்படுவதே ஆகும். இந்த குழாய்கள் ஒரு பெண் கருத்தரிக்க உதவுகிறது, எனவே இந்த குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஏனெனில், முட்டைகளை கருப்பைக்கு கொண்டு செல்ல இந்த குழாய்கள் உதவுகின்றன. அறுவைசிகிச்சை, நோய்தொற்று, கருப்பை நார்த் திசுக்கட்டிகள் குழாயின் உட்புறத்தில் அடைப்பை ஏற்படுவது போன்ற சில காரணங்களால் ஃபலோபியன் குழாயில் மீண்டும் மீண்டும் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த சிக்கல்களை போக்க சில சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். சில இயற்கை வைத்தியங்களின் உதவியுடனும், ஃபலோபியன் குழாயில் ஏற்படும் அடைப்பை நீக்க இயலும். பல பெண்கள் ஃபலோபியன் குழாய்களைக் குறித்து அறியாமல் இருக்கின்றனர்எனவே, இந்தக் கட்டுரையில் ஃபலோபியன் குழாய் அடைப்பு சிக்கலை குறித்து விரிவாகக் கூறுகிறோம்.

  • ஃபலோபியன் குழாய் அடைப்பு என்றால் என்ன? (What is meant by Blocked fallopian tube in Tamil?)
  • ஃபலோபியன் குழாய் அடைப்பின் வகைகள் (Types of blocked fallopian tube in Tamil)
  • ஃபலோபியன் குழாய் அடைப்பின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of blocked fallopian tube in Tamil?)
  • ஃபலோபியன் குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of blocked fallopian tube in Tamil?)
  • ஃபலோபியன் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் எவ்வாறு கர்பம் தரிப்பது? (How to get pregnant with blocked fallopian tube in Tamil?)

ஃபாலோபியன் குழாய் அடைப்பு என்றால் என்ன? (What is meant by blocked fallopian tube in Tamil?)

ஃபலோபியன் குழாய் என்பது கருமுட்டைகளை கருப்பையுடன் இணைக்கும் ஓர் பெண் இனப்பெருக்க உறுப்பாகும். ஒவ்வொரு மாதமும் அண்டவிடுப்பின் போது, ​​ஒரு கருமுட்டை ஃபலோபியன் குழாய் வழியே கருப்பைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஃபலோபியன் குழாயில் விந்தும் முட்டையும் இணைகிறது. ஒரு முட்டை விந்தணுக்களால் இணைப்பட்டிருந்தால், அந்த கருமுட்டை கருப்பைக்குள் செல்கிறது. ஆனால் ஃபலோபியன் குழாயில் அடைப்பு ஏற்பட்டால், விந்து மற்றும் முட்டை இரண்டும் கருப்பையை அடைய முடிவதில்லை. எனவே, கருத்தரித்தல் செயல்முறை நடக்க இயலாமல் போகிறது, இதன் விளைவாக பெண் கருத்தரிக்க முடிவதில்லை. ஒன்று அல்லது இரண்டு ஃபலோபியன் குழாய்களிலும் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. பல பெண்களின் மலட்டுத்தன்மைக்கு ஒரு முக்கிய காரணம் ஃபலோபியன் குழாய்களில் ஏற்படும் அடைப்பு ஆகும்

ஃபலோபியன் குழாய் அடைப்பின் வகைகள் (Types of blocked fallopian tube in Tamil)

ஃபாலோபியன் குழாயில் ஏற்படும் அடைப்பின் காரணமாக சில பெண்கள் தாயாக முடியாமல் இருக்கின்றனர். இது பெண்களில் கருவுறாமைக்கு மிகவும் பொதுவான காரணம் என நம்பப்படுகிறது. கருமுட்டை கருப்பையை அடைய இயலாது போது  கருத்தரிப்பு கடினமாகுகிறது. குழாயின் வெவ்வேறு பகுதிகளில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதுவரை, மூன்று வகையான ஃபலோபியன் குழாய்   அடைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை:

  • ப்ராக்ஸிமல் ஃபலோபியன் குழாய் அடைப்பு – ஃபலோபியன் குழாயில் கருப்பையின் அருகே  அடைப்பு ஏற்படும் போது, ​​கருச்சிதைவு, குழந்தை பிறப்பின் போது அறுவைசிகிச்சை அல்லது பி..டி (Pelvic inflammatory disease) எனப்படும் இடுப்பு அழற்சி நோய் போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது.
  • நடுத்தர ஃபலோபியன் குழாய் அடைப்பு – இந்த வகையில் ஃபலோபியன் குழாயின் நடுவில் அடைப்பு ஏற்படுகிறது.
  • டிஸ்டல் அடைப்பு – இந்த வகைகளில், ஃபலோபியன் குழாய் முடிவடையும் இடத்தில் அடைப்பு ஏற்படுகிறது.

ஃபாலோபியன் குழாய் அடைப்பின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of blocked fallopian tube in Tamil?)

பெரும்பாலும், ஃபலோபியன் குழாயிலுள்ள அடைப்புகள்  குறிப்பிடத்தக்க எந்த அறிகுறிகளையும் வெளிபடுத்துவதில்லை. பல பெண்களுக்கு, அவர்கள் கர்ப்பமாக முயற்சிக்கும் வரை அவர்களின் ஃபலோபியன் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியாமலே இருக்கிறது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், இதன் காரணமாக பெண்களுக்கு வயிற்று வலி ஏற்படுகின்றது. இந்த வலி பொதுவாக ஹைட்ரோசல்பின்க்ஸ் எனப்படும் ஒரு வகை அடைப்பின் போது ஏற்படுகின்றது. பெரும்பாலும், ஃபலோபியன் குழாயில் திரவம் நிரப்பப்படும்போது ஃபலோபியன் குழாயில் அடைப்பு ஏற்படுகின்றது. பொதுவாக  எண்டோமெட்ரியோசிஸில், பெண்களுக்கு இடுப்பு வலி மற்றும் வலிநிறைந்த மாதவிடாய் ஏற்படுகிறது. மேலும், இது ஃபலோபியன் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை ஊக்குவிக்கிறது.

ஃபாலோபியன் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of blocked fallopian tube in Tamil?)

ஃபலோபியன் குழாய்களில் அடைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவை :

  • ஃபாலோபியன் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கு இடுப்பு அழற்சி நோய் முக்கிய காரணமாகும். இந்த நோய் ஹைட்ரோசல்பின்க்ஸ் மற்றும் வடுவை ஏற்படுத்தும்.
  • பாதுகாப்பற்ற உடல் உறவினால் ஏற்படும் கிளமிடியா போன்ற நோய்த்தொற்றுகளும் வடுவை ஏற்படுத்தி இடுப்பு அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
  • ஃபைப்ராய்டுகள்ஃபலோபியன் குழாய் கருப்பையுடன் இணையும் பகுதியில் அடைப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
  • கருப்பைக்கு பதிலாக  ஃபாலோபியன் குழாய் அல்லது அடிவயிற்றில் கரு இணைந்தால், அது எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. இது கடுமையான ஃபலோபியன் குழாய் அடைப்பை ஏற்படுத்துகிறது.
  • சில நேரங்களில் ஹார்மோன்களின் தொந்தரவு காரணமாகவும் ஃபலோபியன் குழாய்களில் அடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
  • பின்னிணைப்புகளின் (appendix) காரணமாகவும் ஃபலோபியன் குழாய்களில் அடைப்பு ஏற்படுகின்றது.
  • காசநோய் காரணமாக, ஃபலோபியன் குழாய்கள் பாதிக்கப்படுகின்றன, இது ஃபலோபியன் குழாய்களில் அடைப்பு அதிகரிக்க வழிவகுக்கிறது.

ஃபலோபியன் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் எவ்வாறு கர்பம் தரிப்பது? (How to get from blocked fallopian tube in Tamil?)

 ஃபலோபியன் குழாய்களில் ஏற்படும் அடைப்பு பிரச்சினையின் காரணமாக, பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு பெண் ஏன் கருத்தரிக்க முடியவில்லை என்று அவருக்கே புரிவதில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பெண்கள் மருத்துவரை அணுகி, ஃபலோபியன் குழாய்களின் அடைப்புக்கு ஏற்றவாறு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம்  மருத்துவர் ஃபலோபியன் குழாயைத் திறந்து அடைப்பை அகற்ற முயலுகிறார். அதிக அளவிலான திசுக்களினால் அடைப்பு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினமானதாகும். மேலும், எக்டோபிக் கர்ப்பத்தால் சேதமடைந்த குழாய்களை ஓரளவிற்கு குணப்படுத்த முடிகிறது. ஃபலோபியன் குழாய்களுக்கு சேதம் ஏற்படுவதால் குழாயில் அடைப்பு ஏற்பட்டால், அது பெண்ணின் இனப்பெருக்க செயல்பாட்டைத் தடுக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அறுவை சிகிச்சை நிபுணர் சேதமடைந்த பகுதியை அகற்றுகிறார்

ஃபலோபியன் குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் குறித்து கூடுதல் தகவல்களையும் சிகிச்சையையும் நீங்கள்  பெற விரும்பினால், மகளிர் மருத்துவ (Gynecologist) நிபுணரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள்  நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில்அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


மும்பையில் சிறந்த மகளிர் மருத்துவ நிபுணர்

டெல்லியில் சிறந்த மகளிர் மருத்துவ நிபுணர்

பெங்களூரில் சிறந்த மகளிர் மருத்துவ நிபுணர்

சென்னையில் சிறந்த மகளிர் மருத்துவ நிபுணர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha