வெள்ளரி நீரின் ஆரோக்கிய நன்மைகள் | Health benefits of cucumber water in Tamil

பிப்ரவரி 2, 2021 Lifestyle Diseases 1406 Views

English हिन्दी Tamil

வெள்ளரிக்காய்கள் ஏராளமான மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் அதிகளவில் ஊட்டச்சத்து கூறுகளும்குறைவான அளவிலேயே கலோரிகளும் உள்ளனவெள்ளரிக்காயில் வைட்டமின் பி, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் மாங்கனீசு ஆகிய தாதுக்கள் நிறைந்துள்ள. வெள்ளரிகாயில் அதிகளவில்  நீர்சத்து உள்ளது. மேலும், இதில்  கூடுதலாக குறிப்பிடத்தக்க எலக்ட்ரோலைட்டுகளும், ஆக்ஸிஜனேற்ற கூறுகளும் ருக்கின்றன. தினசரி ஒரு கிளாஸ் வெள்ளரி நீர் பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது என்றும் உடல் நீரேற்றத்துடன் இருக்க உதவுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இவை உடலில் இருந்து நச்சுகளை அகற்ற வழிவகுக்கிறது.

  • வெள்ளரி நீரின் நன்மைகள் என்ன? (What are the benefits of cucumber in Tamil?)
  • வெள்ளரி நீரை எவ்வாறு தயாரிப்பது? (How to prepare cucumber water in Tamil?)

வெள்ளரி நீரின் நன்மைகள் என்ன? (What are the benefits of cucumber water in Tamil?)

வெள்ளரி நீர் அதீத சத்துக்கள் நிறைந்த உணவாகும். பின்வருவன, இதனை உட்கொள்வதன் மூலம்  உடல் ஆரோக்கியத்திற்கு விளையும் நன்மைகளாகும், அவை

  • தசைகளை பலப்படுத்துகிறது (Strengthen the muscles): வெள்ளரி நீர் மிகவும் ஆரோக்கியமானதாகும். மேலும்,  இது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உடலில் நிரப்புகிறது. மற்றும் உடலில் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தடுக்கிறது. நாள் ஒன்றுக்கு ஒருமுறையாவது வெள்ளரி நீரை குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம்இவை தசை மண்டலத்தை வலிமையாக்குகிறது. (மேலும் படியுங்கள்- உடல் வலிக்கான வீட்டு வைத்தியங்கள்)
  • ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்கிறது (Maintains healthy heart): இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். வெள்ளரிக்காய் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் போன்ற ஊட்டசத்துக்கள் உடலுக்கு நன்மை அளிக்கிறது. வெள்ளரி நீர் மன சோர்வைக் குறைத்து மன அழுத்தத்தைத் தடுக்கிறது. (மேலும் வாசிக்க- இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவு முறை)
  • இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது (Controls blood pressure): வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. வெள்ளரி நீரின் உட்கொள்ளல், உடலில் சேரும் சோடியத்தை குறைக்கிறது. மேலும், உயர் இரத்த அழுத்த குறைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.
  • எலும்புகளை வளர்க்கிறது (Nourishes the bones): ஆஸ்டியோபோரோசிஸ் சிக்கல் காரணமாக கீல்வாதம் மற்றும் மூட்டு வலி எழுகின்றன. வெள்ளரிக்காயில் உள்ள சிலிக்கா மற்றும் மாங்கனீசு, இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்க்க உதவுகிறது. மேலும், வெள்ளரி நீரின் உட்கொள்ளல் எலும்பு தொடர்பான வியாதிகளை சரிசெய்கிறது. (மேலும் படிக்க- உடலில் வைட்டமின் டி குறைபாடுகள்) 
  • சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது (Enhances the skin quality): அழகு சாதனப் பொருட்களுடன் ஒப்பிடும்போது, அவற்றின் பயன்பாட்டை விட வெள்ளரிக்காய் உட்கொள்ளல் சருமத்திற்கு கூடுதல் நன்மைகளைத் தரக்கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெள்ளரி நீரின் உட்கொள்ளல் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது. இது முக தசைகளை இறுக்குகிறது. வெள்ளரிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் பல்வேறு வகையான தொற்று நோய்களை ஏற்படுத்தும், ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகின்றன. (மேலும் வாசிக்க- சருமத்திற்கு ஆமணக்கு எண்ணெயின் நன்மைகள்)
  • உடலை ஹைட்ரேட் செய்கிறது (Hydrates the body): உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, வெள்ளரி நீரில் உள்ள  எலக்ட்ரோலைட்டுகள் நன்மை பயக்கிறது. வெள்ளரி நீரை தயாரிப்பது மிகவும் எளிதானதாகும். மேலும், இவை உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளரி நீரை எவ்வாறு தயாரிப்பது? (How to prepare cucumber water in Tamil?)

  • வெள்ளரிக்காய் தண்ணீரை தயாரிக்க  ஒரு வெள்ளரிக்காய் , ஒரு கிளாஸ் தண்ணீர், புதினா மற்றும் ஏதேனும் ஒரு சிட்ரிக் பழத்தை (புளிப்பு சுவையுள்ள பழம்) எடுத்து கொள்ள வேண்டும்.
  • வெள்ளரிக்காய்களை நன்றாக கழுவி அதன் தோலுடன், நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து கொள்ளுங்கள்.
  • குளிர்ந்த வெள்ளரி நீர் விரும்பத்தக்கது என்றால், வெள்ளரி துண்டுகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்
  • மேலும், இதன் சுவையை அதிகரிக்க எலுமிச்சை போன்ற சிட்ரிக் பழங்களை சேர்த்து ஒரு மணி நேரம் கழித்து உட்கொள்ளவும். (மேலும் படிக்க- உடலில்  நீரிழப்புக்கான காரணங்கள்)

வெள்ளரி நீரின் உட்கொள்ளல் காரணமாக உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால்,  ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள். 

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள்  நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)

டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)

சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha