அல்சைமர் நோய் என்றால் என்ன | What is Alzheimer’s Disease in Tamil
ஏப்ரல் 20, 2021 Brain Diseases 2804 ViewsEnglish हिन्दी Bengali Tamil العربية
அல்சைமர் என்பது மூளையை பாதிக்கும் ஒரு வகை மூளை நோயாகும். இந்த நோய் முதியவர்களிடயே பொதுவானதாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நியாபக சக்தி குறைகிறது மற்றும் மிகவும் பலவீனமான நினைவகத்தை கொண்டுள்ளனர். மேலும், அவர்களின் மூளை சரியாக செயல்படுவதில்லை. இதன் காரணமாக அவர்களின் அன்றாட நடைமுறை படிப்படியாக மோசமடையத் தொடங்குகிறது. அல்சைமர் என்பது ஒரு வகை டிமென்ஷியா ஆகும், இதனை முழுமையாக குணப்படுத்த இயலாது. இந்த பதிவின் மூலம், அல்சைமர் நோய் என்றால் என்ன ? அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்த தகவல்களைப் பெறுவோம்.
- அல்சைமர் நோய் என்றால் என்ன? (What is Alzheimer’s in Tamil?)
- அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of Alzheimer’s in Tamil?)
- அல்சைமர் நோயின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Alzheimer’s in Tamil?)
- அல்சைமர் நோய்க்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments of Alzheimer’s in Tamil?)
- அல்சைமர் நோயை எவ்வாறு தடுப்பது? (How to prevent Alzheimer’s in Tamil?)
அல்சைமர் நோய் என்றால் என்ன? (What is Alzheimer’s in Tamil?)
அல்சைமர் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவித கோளாறு ஆகும், இது மூளையை பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட நபர்களின் நியாபக சக்தி குறைகிறது, அவர்களால் எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. இந்த நோய் முதுமை பருவத்தில் மிகவும் பொதுவானதாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பொருள்கள் மற்றும் முகங்களை அடையாளம் காண்பதில் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of Alzheimer’s in Tamil?)
- பெரும்பாலும், எண்பத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
- தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் அல்சைமர் நோய் ஏற்படக்கூடும்.
- மேலும், அல்சைமர் நோய் தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
- மரபணு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது.
அல்சைமர் நோயின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Alzheimer’s in Tamil?)
அல்சைமர் நோயின் அறிகுறிகள் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன, அவை:
ஆரம்ப அறிகுறிகள் (Starting symptoms):
- நேரத்தை கவனிப்பதில் இயலாமை.
- மறதியின் காரணமாக பொருட்களை இழக்க நேரிடும்.
- மோசமான யூகங்கள்
- தினசரி பணிகளை சரியான நேரத்தில் முடிக்க இயலாமல் போவது.
- பேசுவதில் சிரமம்.
- அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் நியாபக மறதியின் காரணமாக எழும் சிக்கல்கள்
நடுத்தர அறிகுறிகள் (Moderate symptoms):
- எந்த காரணமும் இல்லாமல் கட்டுப்பாடற்ற கோபம் கொள்வது.
- நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காண்பதில் சிரமம் உண்டாகும்.
- படிப்பதிலும் எழுதுவதிலும் சிரமம்.
- ஏதேனும் புதிய பணிகளைக் கற்றுக் கொள்ள இயலாமல் போவது.
- அழுகை, பதட்டம், அலைந்து திரிதல், அமைதியின்மை போன்ற நடத்தை மாற்றங்கள்.
தீவிர அறிகுறிகள் (Severe Symptoms):
- உடல் எடை இழப்பு
- வலிப்புத்தாக்கங்கள்
- தோல் தொற்று
- விழுங்குவதில் சிரமம்
- சிறுநீர் கடத்தலில் சிரமம்
அல்சைமர் நோய்க்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments of Alzheimer’s in Tamil?)
அல்சைமர் நோய்க்கு எந்தவித சிகிச்சையும் இல்லை. இருப்பினும் மருத்துவர்கள் சில மருந்துகளை பரிந்துரைக்கின்றனர், இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு சிறிதளவு நிவாரணம் அளிக்க முடிகிறது.
அல்சைமர் நோயை எவ்வாறு தடுப்பது? (How to prevent Alzheimer’s in Tamil?)
அல்சைமர் நோய்க்கு எந்தவித சிகிச்சையும் இல்லை. எனவே, இந்த நோயைக் கட்டுப்படுத்த முதலில் இதன் ஆபத்து காரணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும், அவை
- நீரிழிவு நோய்
- உயர் இரத்த அழுத்தம்
- அதிக கொழுப்புச்ச்த்து (மேலும் வாசிக்க- உடல் பருமன் என்றால் என்ன, அதை எவ்வாறு குறைப்பது)
அல்சைமர் நோய் குறித்து கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், ஒரு நரம்பியல் நிபுணரைத் (Neurologist) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.



