சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் எரிச்சல் உணர்வு | Burning Urination in Tamil

டிசம்பர் 9, 2020 Lifestyle Diseases 4485 Views

हिन्दी Bengali Tamil

ராஜு என்ற இளைஞரின் வயது 20. இவர் தனது  வேலை நேரத்தில்  சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும் போது, சிறுநீர் கழிக்க கழிப்பறைக்கு செல்லமால் அதைத் தவிர்க்கிறார். 20 நாட்களுக்கு மேலாகியும் வேலை நேரத்தில் அவர் சிறுநீர் கழிப்பதை தொடர்ந்து தவிர்த்து கொண்டே இருந்தார். சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்காததால், ராஜுவுக்கு சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்பட தொடங்கியது. இதனால், அவர் ஒரு  சிறுநீரக மருத்துவரைத் தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின்னர் ராஜுவிற்கு ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கியது. எனவே, இன்றையப் பதிவில்  சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் எரிச்சல் உணர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்வோம்.

  • சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் எரிச்சல் உணர்வு என்றால் என்ன? (What is burning urination in Tamil?)
  • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of burning urination in Tamil?)
  • சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of burning urination in Tamil?)
  • சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் எரிச்சல் உணர்வுக்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for burning urination in Tamil?)
  • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலியை போக்க உதவும் வீட்டு வைத்தியம் என்ன? (What are the home remedies for burning urination in Tamil?)
  • சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் எரிச்சல் பிரச்சினையை எவ்வாறு தடுப்பது? (How to prevent burning urination in Tamil?)

சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் எரிச்சல் உணர்வு என்றால் என்ன? (What is burning urination in Tamil?)

சிறுநீர் கழித்தல் மனிதனின் இயல்பான செயலாகும். ஒருவர்  சிறுநீர் கழிக்க வேண்டிய நேரத்தில் சிறுநீர் கழிக்காமல் தவிர்ப்பதினால், சிறுநீர் கழிக்கும்போது​​ எரிச்சல் உணர்வையும், வலியையும் உணரத் தொடங்குகிறார். இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போது உடலில் பல நோய்கள் உண்டாகிறது. நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது  எரிச்சலையும் வலியையும் உணர்ந்தால் உடனடியாக ஒரு  மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். மேலும், இந்த சிக்கல்  ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of burning urination in Tamil?)

சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல்  உணர்வு ஏற்படுவதற்கான காரணங்கள்,

சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of burning urination in Tamil?)

  • வயிற்று வலி
  • காய்ச்சல்
  • வயிற்றுப்போக்கு.
  • வாந்தி
  • முதுகு வலி.
  • பகல் அல்லது இரவில் அதிகளவில்  சிறுநீர் கழித்தல்
  • சிறுநீரில் இரத்தம்.
  • தொடையின் உள் பகுதியில் வலி

சிறுநீர் கழிப்பதில் வலி  மற்றும் எரிச்சல் உணர்வுக்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for burning urination in Tamil?)

  • சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படுவதின் அறிகுறிகளைக் கண்டறிய மருத்துவர்கள் நோயாளியின் சிறுநீரை பரிசோதிக்கின்றனர். இந்த பரிசோதனையின் அடிப்படையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வு  ஏற்பட்டால், மருத்துவர்கள் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (antibiotic) நோயாளிக்கு வழங்குகின்றனர்இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நோயாளிகள் சிறுநீர் கழிக்கும் போது  உண்டாகும் வலி  மற்றும் எரிச்சல்  உணர்விலிருந்து விடுபட உதவுகிறது.
  • மருத்துவர்கள்சிறுநீர்ப்பை தொற்று ஏற்படும் நபர்களை குறைந்தது  6 மாதங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலியை போக்க உதவும் வீட்டு வைத்தியம் என்ன? (What are the home remedies for burning urination in Tamil?)

  • இது போன்ற பிரச்சினைகளை நீக்க,   
  • கேரட் ஜூஸில் எலுமிச்சை சாறு மற்றும் புதினாவை கலந்து குடிக்க வேண்டும்
  • ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், பழச்சாறுகளை உட்கொள்வதன் மூலமும் உடலில் நீரின் அளவை பராமரிக்கலாம்.
  • இளநீர்  குடிக்க வேண்டும். ஏனெனில், இளநீரில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
  • கொத்தமல்லியை இரவில் ஊறவைத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ளுங்கள்.

சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் எரிச்சல் பிரச்சினையை எவ்வாறு தடுப்பது? (How to prevent burning urination in Tamil?)

சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வு போன்ற சிக்கல்களைத் தவிர்க்க பல வழிகள் உள்ளன

  • சரியான நேரத்தில் தவறாமல் சிறுநீர் கழிக்கவும்
  • ஏராளமான திரவங்களை குடிக்கவும்.
  • நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் கட்டுப்படுத்தாதீர்கள்.
  • எப்போதும் பாலியல் அங்கங்களை தூய்மையாக வைத்திருங்கள்
  • எப்போதும் பாதுகாப்பான உடலுறவு கொள்ள ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள்.
  • பருத்தியால் செய்யப்பட்ட தளர்வான உள்ளாடைகளை அணியுங்கள், இது வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் உறிஞ்சாது.

உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு மற்றும் வலி போன்ற பிரச்சினைகள் இருந்தால், தாமதமின்றி ஒரு நல்ல சிறுநீரக மருத்துவரைத் (Top Urologist in India) தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தக்   கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது  மட்டுமே எங்கள்  நோக்கமாகும். எந்த வகையிலும் மருந்து அல்லது  சிகிச்சையை நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில் அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


மும்பையில் சிறந்த சிறுநீரக மருத்துவர்

டெல்லியில் சிறந்த சிறுநீரக மருத்துவர்

சென்னையில் சிறந்த சிறுநீரக மருத்துவர்

பெங்களூரில்  சிறந்த சிறுநீரக மருத்துவர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha