தலைச்சுற்றலுக்கான வீட்டு வைத்தியம்|Home remedies for dizziness in Tamil
டிசம்பர் 15, 2020 Lifestyle Diseases 2194 Viewsதலைச்சுற்றல் என்றால் என்ன (Dizziness meaning in Tamil)
தலைச்சுற்றல் பிரச்சினையை எந்த ஒரு நபரும் தன் வாழ்வின் ஏதாவது ஒரு நிலையில் அனுபவிக்க நேரிடுகிறது. தலைச்சுற்றல் உண்டாகும் போது மூளை தன் சமநிலையை இழந்து தலைச் சுழலத் தொடங்குகிறது, இதன் விளைவாக மயக்கம் ஏற்படுகிறது. இது மோசமான உடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். சில சமயங்களில் குறைந்த இரத்த அழுத்தம், இதய நோய், தசை பலவீனம், ஒவ்வாமை, இரத்த சோகை, தலையில் உண்டான காயம், ஒற்றைத் தலைவலி, உடலின் சர்க்கரை அளவு அதிகரித்தல், பக்கவாதம், காதுகளில் உண்டான தொற்று, மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைச்சுற்றல் உண்டாகிறது. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாளும், சில மருந்துகளின் பக்க விளைவுகளாளும் தலைச்சுற்றல் உண்டாகும். சிலருக்கு, அதிகமான உடற்பயிற்சி செய்வதனால் மார்பில் வலி உண்டாகும் பதட்டம் அதிகரிக்கும் இந்த நேரத்தில் தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தலைச்சுற்றல் காரணமாக சிலர் வாந்தியெடுக்கின்றனர், மேலும் அவர்களின் உடல் பலவீனம் அடைகிறது. இன்று இந்தக் கட்டுரையில், தலைச்சுற்றல் அபாயத்தைக் குறைக்கும் தலைச்சுற்றலுக்கான வீட்டு வைத்தியம் பற்றி விரிவாகக் காண்போம்.
தலைச்சுற்றல் பிரச்சினைக்கான வீட்டு வைத்தியங்கள் (Home remedies to prevent dizziness in Tamil):
தலைச்சுற்றல் பிரச்சினையைத் தடுக்க, கீழ் காணும் சில வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம்.
- நிறைய தண்ணீர் குடிக்கவும் (Drink more water) – தேகத்தில் தண்ணீர் போதிய அளவில் இல்லாததே தலைச்சுற்றலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முதல் பத்து கிளாஸ் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் நீரிழப்பு, தலைச்சுற்றல் போன்ற அபாயத்தைக் குறைக்கிறது. பெரும்பாலும், சரியான நேரத்தில் தண்ணீர் குடிக்காததே தலைச்சுற்றலை ஏற்படுத்துகிறது. மேலும், பழச்சாறுகள், சூப் போன்ற நீராகரங்களை குடிப்பதன் மூலமும் உடலில் நீரின் அளவை பராமரிக்கலாம்.
- ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் (Eat healthy foods) – பெரும்பாலும் மயக்கம் உண்டாகும் நேரங்களில் சத்தான உணவுகளை சாப்பிடுவது நன்மை அளிக்கிறது. இரத்த சோகையைத் தடுக்க இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் பிபி பிரச்சினைகள் இருந்தால், ஃபைபர், வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவைகளை உண்பது நன்மை பயக்கும். நீங்கள் உண்ணும் உணவில் குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ள உணவுகளையே உண்ணுங்கள். இரும்பு சத்தினை வழங்கும் பாதாம், பேரிச்சம் பழங்கள் , கீரை போன்றவற்றை உட்கொள்ளுங்கள். உடலில் வைட்டமின் சி அதிகரிக்க ஆரஞ்சு, ப்ரோக்கோலி, திராட்சை, எலுமிச்சை ஆகியவற்றை சேர்க்கவும். மேலும், பச்சை காய்கறிகள், முளைத்த தானியங்கள், வேர்க்கடலை போன்றவற்றை உட்கொள்ளுவதனால் உடலில் ஃபோலிக் அமிலம் அதிகரிக்கிறது.
- தலைச்சுற்றலைத் தடுக்க நல்ல உணவுகளை சாப்பிடுங்கள் (Eat some foods to prevent dizziness) – இரத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறையும் போது தலைச்சுற்றலை ஏற்படுகிறது, குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இதனால் தலைச்சுற்றல் உண்டாகும். நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவின் பற்றாக்குறையாலும் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. எனவே, வயிற்றை எப்போதும் காலியாக இருக்க விடாதீர்கள் மற்றும் நாள் முழுவதும் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் ஏதாவது ஒரு உணவை உண்ணுங்கள். தலைச்சுற்றல் அடிக்கடி உண்டானால் வாழைப்பழம், தயிர் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். சில சமயங்களில் முந்திரி, பாதாம், அக்ரூட் பருப்புகள் அல்லது சாக்லேட் போன்றவற்றை சாப்பிடுவதும் தலைச்சுற்றலைக் குறைக்க உதவுகிறது.
- தலைச்சுற்றலைப் போக்க ஆம்லாவைப் பயன்படுத்தவும் (Uses of amla in dizziness) – தலைச்சுற்றல் பிரச்சினையை குறைக்க ஆம்லா பெரிதும் உதவுகிறது. பண்டையக் காலத்திலிருந்தே தலைச்சுற்றல் சிகிச்சைக்கு ஆம்லா பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஆம்லா உட்கொள்வதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும், இரத்த ஓட்டமும் மேம்படுத்துகிறது, இது தலைச்சுற்றலையும் தடுக்கிறது. ஆம்லாவின் விதைகளை நீக்கி பேஸ்ட் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் கொத்தமல்லி தூளைச் சேர்த்து ஓர் இரவு கழித்து, காலையில் இதை வடிகட்டி குடிப்பதன் மூலம் வெர்டிகோ (vertigo) சிக்கல் குறைகிறது. தலைச்சுற்றல் நீங்கும் வரை இதை தொடர்ந்து உட்கொள்ளுங்கள்.
- தலைச்சுற்றல் சிக்கலின் போது தேனைப் பயன்படுத்தவும் (Uses of honey in dizziness) – தேனில் இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இதனால் தேன் உட்கொள்வதன் மூலம் சில நோய்களின் அபாயத்தைக் குறைக்க இயலும். மேலும், இது தலைச்சுற்றல் பிரச்சினைக்கு நல்ல தீர்வினை வழங்குகிறது. தேன் உடலின் ஆற்றலை அதிகரித்து தலைச்சுற்றலைத் தடுக்கிறது. ஆப்பிள் சைடர் வினிகருடன் தேனை கலந்து குடிக்கவும் அல்லது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் தலைச்சுற்றல் பிரச்சினையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
- மயக்கமாக உணரும்போது இஞ்சியை சாப்பிடுங்கள் (Eat ginger while feeling dizzy) – இஞ்சியில் ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. இது தொற்றுநோயையும், தலைச்சுற்றலையும் தடுக்க உதவுகிறது.மேலும், இஞ்சி மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், இரத்த ஓட்டத்தையும் ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், தலைச்சுற்றலைத் தடுக்கவும் ஒரு சிறிய துண்டு இஞ்சியை சாப்பிடுங்கள் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை இஞ்சி டீ குடியுங்கள்.
- தலைச்சுற்றலில் எலுமிச்சையின் பயன்பாடு( Uses of lemon in dizziness) – எலுமிச்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. பெரும்பாலும் மயக்கம் ஏற்படும் சமைங்களில் எலுமிச்சை சாற்றை உட்கொள்வது நன்மை பயக்கும். எலுமிச்சையில் உப்புதடவி உட்கொள்வதன் மூலமும் தலைச்சுற்றல் சிக்கல் குறைகிறது.
தலைச்சுற்றலைக் குறைக்க வேறு சில வழிகள் (Some other ways to reduce dizziness)
- மயக்கம் ஏற்பட்டும், சமயங்களில் உட்கார்ந்து கொள்ளுங்கள் அல்லது வசதியாக படுத்துக் கொள்ளுங்கள் .
- தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் தலைச்சுற்றல் சிக்கலைக் குறைக்க இயலும்.
- மயக்கம் உண்டாகும் நேரங்களில் நடக்க முயற்சிக்க வேண்டாம், அது ஆபத்தை விளைவிக்கும்.
- தலைச்சுற்றலைத் தடுக்க யோகா செய்வது பயனுள்ளதாக அமைகிறது.
- காரில் பயணம் செய்யும் போது தலைச்சுற்றல் மயக்கம் போன்ற உணர்வுகள் உண்டானால், அதற்கு மாறாக பிற போக்குவரத்தை பயன்படுத்துங்கள்.
- ஆல்கஹால், புகையிலை, காஃபின் போன்றவற்றை உட்கொள்ளவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இவை தலைச்சுற்றலின் சிக்கலை அதிகரிக்கிறது.
- வாரம் ஒரு முறை உங்கள் உடலை மசாஜ் செய்யுங்கள்.
- மயக்கம் உண்டாகும் நேரங்களில் சத்தான உணவுகளை உண்ணுங்கள், வேறொரு செயலில் கவனம் செலுத்தி மனதை திசை திருப்ப முயற்சியுங்கள்.
உங்களுக்கு தலைச்சுற்றல் பிரச்சினை இருந்தால், ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள். சிக்கல் கடுமையானதாக இருந்தால், ஒரு நரம்பியல் நிபுணரை (Neurologist) அணுகுங்கள்.
நோய்களைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம், எந்தவொரு மருந்து, சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சையை நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும், ஏனெனில் அவர்களை விட யாரும் சிறந்தவர்கள் அல்ல.
மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)
சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)
பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)



