சன்பர்ன் சிக்கலுக்கான வீட்டு வைத்தியம் | Home remedies to remove sunburn in Tamil

பிப்ரவரி 19, 2021 Lifestyle Diseases 916 Views

English हिन्दी Bengali Tamil

சூரிய ஒளியில் UV கதிர்கள் எனப்படும் சில தீங்கு விளைவிக்கும் கதிர்கள் இருக்கின்றன. இவை, தோல் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. அவற்றில் சன்பர்னும் ஒன்றாகும். பலரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். எனினும், பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையான மக்கள், இந்தப் பிரச்சினையை புறக்கணிக்கின்றனர். அதிகப்படியான வெயில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கிறது மற்றும் இது தோல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். வெயிலினால் தோல் தொடர்பான சிக்கலை, நீங்கள் எதிர்கொள்ள நேரிட்டால், உடனடியாக ஒரு தோல் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள். இன்றையப் பதிவில் வெயிலினால் உண்டாகும் தோல் தொடர்பான (சன்பர்னுக்கான வீட்டு வைத்தியம்) பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்களை அறிவோம்

சன்பர்னுக்கு சிகிச்சையளிக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் என்ன? (What are the home remedies to treat sunburn in Tamil?)

சன்பர்னை அகற்ற சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, சன்பர்னுக்கான வீட்டு வைத்தியம்:

  • ஆப்பிள் வினிகரின் பயன்பாடு (Uses of apple vinegar): ஆப்பிள் வினிகர் சருமத்தின் பி.எச் அளவை பராமரிக்கிறது மற்றும் வெயிலினால் உண்டாகும் சிக்கலை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. ஆப்பிள் வினிகரை பாதிக்கப்பட்ட பகுதியில் தெளிக்கவும். இது காய்ந்த பிறகு, தேங்காய் எண்ணெயின் சில துளிகளை அப்பகுதியில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். ஆப்பிள் வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது, இது எரிச்சலையும் சன்பர்னையும் குணப்படுத்துகிறது. (மேலும் படிக்க – சருமத்திற்கு ஆப்பிள் வினிகரின் நன்மைகள்
  • பேக்கிங் சோடாவின் பயன்பாடு (Uses of baking soda): தோல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்க பேக்கிங் சோடா உதவுகிறது. குளிக்க உபயோகிக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து குளிப்பதன் மூலம், சன்பர்ன் பிரச்சினையிலிருந்து விடுபட இயலும். இந்த செயல்முறையை சன்பர்ன் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும் வரை நாள் ஒன்றுக்கு ஒரு முறை செய்யவும்
  • தயிர் பயன்பாடு (Uses of curd): தயிர் சருமத்திற்கு நன்மை பயக்கிறது. ஏனெனில், இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஒரு ஸ்பூன் தயிரை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். அது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் சுத்தமாக கழுவவும்
  • பப்பாளி மற்றும் தேனின் பயன்பாடு (Uses of papaya and honey): பப்பாளி மற்றும் தேன் வெயில் தொடர்பான பிரச்சினையைக் குணப்படுத்த உதவுகிறது. பப்பாளியை தேனுடன் கலந்து ஒரு பேஸ்ட் தயாரித்து, இந்த பேஸ்ட்டை சன்பர்ன் உள்ள இடத்தில் தடவவும். அது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் சுத்தமாக கழுவுங்கள். இந்த செயல்முறையை தினசரி செய்யுங்கள்
  • உருளைக்கிழங்கின் பயன்பாடு (Uses of potato peel): பழங்காலத்திலிருந்தே சன்பர்ன் பிரச்சினையை குணப்படுத்த உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. உருளைக்கிழங்கைப் பேஸ்ட் செய்து தோலில் தடவவும். சிறிது நேரம் கழித்து, சுத்தமான தண்ணீரில் கழுவவும்
  • தேநீர் பைகளின் பயன்பாடு (The use of tea bags): ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு தேநீர் பையைச் சேர்த்து. இந்த வெதுவெதுபான தண்ணீரை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, சன்பர்னை நீக்கவும். (மேலும் வாசிக்க- கிரீன் டீ என்றால் என்ன
  • வெள்ளரிக்காயின் பயன்பாடு (Uses of cucumber): வெள்ளரிக்காயில் அதிக அளவில் வைட்டமின் உள்ளது, இது கண்களின் கீழ் ஏற்படும் கருவளையங்களை குறைக்கிறது. வெள்ளரிக்காயை கொண்டு சருமத்தை மசாஜ் செய்யவும். (மேலும்  படிக்க- கருவளையங்களுக்கு  எவ்வாறு சிகிச்சையளிப்பது
  • கற்றாழையின் பயன்பாடு (Uses of Aloe Vera): கற்றாழையில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது சன்பர்னை குணப்படுத்த உதவுகிறது. கற்றாழை ஜெல்லை சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். இந்த செயல்முறையை சன்பர்ன் நீங்கும் வரை தினசரி செய்யுங்கள். சன்பர்னுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களிலும் கற்றாழை ஜெல் உள்ளது

வெயில் தொடர்பான சிக்கலை நீங்கள் எதிர்கொண்டால், உடனடியாக ஒரு தோல் நிபுணரைத் (Dermatologist) தொடர்பு கொள்ளுங்கள். 

 இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள்  நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


மும்பையில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்

டெல்லியில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்

சென்னையில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்

பெங்களூருவில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha