அரிக்கும் தோலழற்சி (அரிப்பு) ஏன் ஏற்படுகிறது | Why does eczema occur in Tamil
டிசம்பர் 30, 2020 Lifestyle Diseases 2458 Viewsஅரிக்கும் தோலழற்சியின் பொருள் (Meaning of eczema in Tamil)
அரிக்கும் தோலழற்சி (eczema) ஆங்கிலத்தில் எக்ஜிமா மற்றும் அடோபிக் டெர்மடிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த அழற்சி நிலை ஏற்படும் போது தோல் சிவப்பு நிறமாக மாறுதல், தோல் இணைப்பு (skin patches), தோலில் வீக்கம் மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில், தோலில் கொப்புளங்களும் ஏற்படுகின்றன. அரிக்கும் தோலழற்சி (அரிப்பு) ஏன் ஏற்படுகிறது ? இந்த அழற்சி பெரும்பாலும், புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தைகளிலும் சிறிய குழந்தைகளிலும், சில நேரங்களில் வயதானவர்களுக்கும் ஏற்படுகின்றது. உலக மக்கள் தொகையில் 31.6 சதவீதம் பேர் அரிக்கும் தோலழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அரிக்கும் தோலழற்சியின் லேசான அறிகுறிகள் தென்படும் போது பலரும் அதனை புறக்கணிக்கின்றனர், இதன் விளைவாக பின்னர் சில தீவிர சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, இது போன்ற அறிகுறிகள் தோன்றியவுடன் உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டியது அவசியமாகிறது. மக்கள் பெரும்பாலும் கடுமையான வெயிலின் போது வெளியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது, இதன் காரணமாக அவர்களின் தோல் வறண்டு, அரிப்பு ஏற்படுகிறது, இவ்வாறு மீண்டும் மீண்டும் அரிப்பு ஏற்படுவதினால் அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும்போதும் அரிக்கும் தோலழற்சியும் ஏற்படுகின்றது. தூசி அல்லது மண் ஒவ்வாமை போன்ற ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் அரிக்கும் தோலழற்சி நோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இன்றையக் கட்டுரையில் அரிக்கும் தோலழற்சி (அரிப்பு) ஏன் ஏற்படுகிறது என்பது குறித்த தகவல்களை விரிவாக அறிவோம்.
- அரிக்கும் தோலழற்சி ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of eczema in Tamil?)
- அரிக்கும் தோலழற்சியின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of eczema in Tamil?)
- அரிக்கும் தோலழற்சிக்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for eczema in Tamil?)
- அரிக்கும் தோலழற்சியை எவ்வாறு தடுப்பது? (How to prevent eczema in Tamil?)
அரிக்கும் தோலழற்சி ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of eczema in Tamil?)
அரிக்கும் தோலழற்சி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன, அவை:
- ஏதேனும் ஒவ்வாமை நோயால் அவதிப்படுபவர்களுக்கு, அரிக்கும் தோலழற்சி ஏற்படும் அபாயம் இருக்கிறது.
- எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் அரிக்கும் தோலழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- அதிகப்படியான மன அழுத்தம் உண்டாவதும் அரிக்கும் தோலழற்சிக்கு வழிவகுக்கிறது.
- ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரிக்கும் தோலழற்சி உருவாக்கக்கூடும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர், அதனால் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- சீரான உணவுகளை உட்கொள்ளாது இருத்தலும், உடல் மிகவும் பலவீனமாக உள்ளவர்களுக்கும் அரிக்கும் தோலழற்சி ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம்.
- உடலில் நோயெதிர்ப்பு அமைப்பின் பலவீனம் காரணமாகவும் அரிக்கும் தோலழற்சி உண்டாகிறது. எனவே, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.
அரிக்கும் தோலழற்சியின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of eczema in Tamil?)
நோயாளியின் நிலைக்கு ஏற்ப அரிக்கும் தோலழற்சியின் அறிகுறிகள் மாறுபடுகிறது.
பின்வருவன பொதுவான அறிகுறிகளாகும் –
- தோல் வறட்சி
- தோல் பறிப்பு (skin flushes)
- அரிப்பு
- தோலில் அதிக வியர்வையை சுரக்கும்
குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள் –
2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அடோபிக் டெர்மடிடிஸினால் பின்வரும் அறிகுறிகள் உண்டாகிறது,
- உச்சந்தலை மற்றும் கன்னங்களில் தடிப்புகள்
- குமிழும் தடிப்புகள் உண்டாகி அதிலிருந்து திரவக்கசிவு உண்டாகிறது.
- அதிகப்படியான அரிப்பை ஏற்படுத்தக்கூடிய தடிப்புகள் உண்டாகிறது. மேலும், இது தூக்கத்திற்கு இடையூறாக அமைகிறது.
வயதானவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் –
- குழந்தைகளில் ஏற்படுவதை விட கடுமையான தடிப்புகள் உண்டாகிறது.
- பெரும்பாலும் தடிப்புகள் முழங்கை, முழங்கால், மற்றும் கழுத்தின் முனையில் தோன்றுகிறது.
- உடலின் பெரும்பகுதியில் தடிப்புகள் உண்டாகிறது.
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தோல் மிகவும் வறண்டு இருக்கிறது.
- நிரந்தரஅரிப்புகளை உண்டாக்கும் தடிப்புகள் ஏற்படுகின்றன.
அரிக்கும் தோலழற்சிக்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for eczema in Tamil?)
அரிக்கும் தோலழற்சிக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமில்லை. எனினும், நோயாளியின் அறிகுறிகளைப் பொறுத்து சருமத்தை குணப்படுத்த சில சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும், பலருக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்காமல் தானாகவே இது குணமாகிறது. பாதிக்கப்பட்டவரின் வயது, அறிகுறிகள் மற்றும் அவரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தே, இதற்கான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
- ஒளிக்கதிர் சிகிச்சை (Phototherapy) மற்றும் ஒளி சிகிச்சையை (light therapy) உள்ளடக்கிய சிகிச்சையைப் பெற மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில், இந்த சிகிச்சைகளை அரிக்கும் தோலழற்சியைக் குறைக்க உதவுகிறது.
- ஏதேனும் நோய் தொற்று காரணமாக அரிக்கும் தோலழற்சி ஏற்பட்டால், அந்த நோயை குணப்படுத்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.
- பேட்ச் பரிசோதனை செய்வதன் மூலம் அரிக்கும் தோலழற்சிக்கு வழிவகுக்கும் ஒவ்வாமைகளை கண்டறிய முடிகிறது
- பாதிக்கப்பட்ட நோயாளிகள் காலையில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க நல்ல தூக்கம் கொள்ள வேண்டும்.
அரிக்கும் தோலழற்சியை எவ்வாறு தடுப்பது? (How to prevent eczema in Tamil?)
- சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், சத்தான உணவுகளை உட்கொள்ளாதவர்களுக்கு அரிக்கும் தோலழற்சி ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது.
- அரிக்கும் தோலழற்சியைத் தவிர்க்க, மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.
- அதிகப்படியான ரசாயன பொருட்களை சருமத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- வெப்பநிலை மாற்றங்கள், அரிக்கும் தோலழற்சியின் அபாயத்தை அதிகரிக்கிறது.
- நீண்ட நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அரிக்கும் தோலழற்சி மற்றும் அதன் சிகிச்சை பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், உடனடியாக தோல் மருத்துவரைத் (Dermatologist) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
மும்பையில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்
டெல்லியில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்



