கர்ப்ப காலத்தில் எதைத் தவிர்க்க வேண்டும் | What to avoid during pregnancy in Tamil
ஏப்ரல் 17, 2021 Womens Health 1309 Viewsகருவுற்று இருக்கும் பெண்கள், தங்களின் உடல்நலம் மற்றும் உணவு பழக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு, கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து எந்தவித கவலையும் அடையத் தேவையில்லை. பல பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து எந்தவித விழிப்புணர்வும் இல்லை. இருப்பினும், ஒரு சில பெண்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பராமரிக்க கர்ப்பத்தில் எதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிந்துக்கொள்ள விரும்புகிறார்கள். எனவே, இந்த பதிவில் கர்ப்பத்தில் தவிர்க்க வேண்டியவை குறித்த சில தகவல்களைக் கூறுகிறோம்.
கர்ப்பிணிப் பெண்கள் எதைத் தவிர்க்க வேண்டும்? (What should a pregnant women avoid in Tamil?)
கர்ப்பிணிப் பெண்கள் உணவு, தூக்கம், காலை நடைப்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற பல விஷயங்களை கவனித்துக்கொள்வது அவசியமானதாகும். அதே போல் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் சில விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும், அவை:
- உடற்பயிற்சியைக் குறைக்க வேண்டும் (Reduces Exercise): தினசரி உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது, ஆனால் கருவுற்ற இருக்கும் பெண்கள் அதிகப்படியான உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடாது. ஏனெனில், இது கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கிறது. மேலும், கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் பற்றியத் தகவல்களை பெற ஒரு நிபுணரிடம் ஆலோசியுங்கள். (மேலும் வாசிக்க- கர்ப்ப காலத்தில் சோர்வு பிரச்சினைகள்)
- மன அழுத்தமில்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் (Try to be stress free): மன அழுத்தம் ஏற்படுவது எந்தவொரு நபரின் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு உண்டாகும் மன அழுத்தம் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. அதோடு மன அழுத்தம் கருவுறுதலைக் குறைத்து கருவுறாமை சிக்கலை அதிகரிக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் குழந்தையின் மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியின் கூற்றுப்படி, பெண்கள் மன அழுத்தமில்லாமல் இருக்கும்போது நிம்மதியாக உணர்கிறார்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பதற்றம் காரணமாகவும் பல பெண்கள் கருத்தரிக்க முடியாமல் தவிக்கிறார்கள். பெண்கள் தங்களை அமைதிப்படுத்த மனதில் இருந்து மன அழுத்தத்தையும் நீக்க வேண்டும். கருத்தரிக்க விரும்பும் பெண்கள், உடற்பயிற்சி செய்ய வேண்டும், முழுமையான தூக்கம் பெற வேண்டும். மேலும், மன அழுத்தம் குறையவில்லை எனில், ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள். (மேலும் வாசிக்க- கவலை என்றால் என்ன)
- உடல் எடையை பராமரிக்க வேண்டும் (Maintain body weight): உடல் எடை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருப்பது பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. அதிக உடல் எடையுடன் இருப்பது கருவுறுதல் நிகழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் கருவை பாதிக்கிறது. உடல் எடை அசாதாரணமாக உள்ள பெண்கள் சிறப்பு ஆலோசகரை அணுக வேண்டும். சரியான உடல் எடையை பராமரிப்பதே தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நன்மை பயக்கிறது.
- சரியாக சமைக்காத முட்டைகளைத் தவிர்க்கவும் (Avoid half Cooked eggs): உடல் ஆரோக்கியத்திற்கு முட்டை நன்மை பயக்கிறது, ஆனால் பச்சை முட்டைகளை கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு பொருத்தமானது அல்ல, ஏனெனில் இது பெண்களில் சால்மோனெல்லா தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த தொற்று வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, இடுப்பு வலி, காய்ச்சல், சளி, தலைவலி, மலத்தில் இரத்தம், வாந்தி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. முட்டைகளில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கிறது.
வேறு சில பரிந்துரைப்புகள்: (Some other precautions)
- கர்ப்ப காலத்தில் பெண்கள் பப்பாளியை சாப்பிட கூடாது, ஏனெனில் இது தீங்கு விளைவிக்கும் என்சைம்களைக் கொண்டுள்ளது, அவை கருவுக்கு தீங்கு விளைவிக்கிறது. இது கருச்சிதைவுக்கு வழிவகுக்கிறது.
- கர்ப்ப காலத்தில் பெண்கள் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றின் நுகர்வு கருப்பையில் உள்ள குழந்தையின் உடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
- கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகளவில் காபி அல்லது தேநீர் குடிக்கக்கூடாது. ஏனெனில், அவற்றில் அதிக அளவில் காஃபின் உள்ளது. இது கருப்பையில் வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கிறது.
- கர்ப்ப காலத்தில் பச்சை உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது வயிறு தொடர்பான நோய்களை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, பச்சை முளை பயிர்கள் அல்லது பச்சை இறைச்சிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஊட்டச்சத்துகள் நிறைந்த சத்தான மற்றும் சமைத்த உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
- கர்ப்ப காலத்தில் பெண்கள் சூடான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், சூடான உணவுகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. ( மேலும் படிக்க- கர்ப்பிணிப் பெண்களுக்கு உண்டாகும் மன அழுத்த பிரச்சினைகள்)
கர்ப்ப காலத்தில் ஏதேனும் ஒழுங்கற்ற தன்மை அல்லது அசாதாரணங்களை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு மகளிர் மருத்துவ நிபுணரைத் (Gynecologist) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
டெல்லியில் சிறந்த மகப்பேறு மருத்துவர்
பெங்களூரில் சிறந்த மகப்பேறு மருத்துவர்



