சிவப்பு முட்டைக்கோசின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of red cabbage in Tamil
மார்ச் 26, 2021 Lifestyle Diseases 1366 Viewsமுட்டைக்கோஸ் ஒரு சத்தான காய்கறியாகும், இதன் வகைகள் சிவப்பு அல்லது ஊதா முட்டைக்கோஸ் என்றழைக்கப்படுகிறது. இது பிராசிகேசி குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இது வடக்கு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனாவின் சில பகுதிகளில் பயிரிடப்படுகிறது. பெரும்பாலும், சிவப்பு முட்டைக்கோஸ் ஓரு pH குறிகாட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. முட்டைக்கோசின் நிறம் மண்ணின் pH சமநிலையைப் பொறுத்ததாகும். பெரும்பாலும், இது சாலட்களில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், இதனை இறைச்சியுடன் சமைக்கலாம். தற்போதைய சூழலில், இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. இன்றையக் கட்டுரையில், சிவப்பு முட்டைக்கோஸின் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
- சிவப்பு முட்டைக்கோஸின் ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What are the nutritional elements of red cabbage in Tamil?)
- சிவப்பு முட்டைக்கோசின் நன்மைகள் யாவை? (What are the benefits of red cabbage in Tamil?)
- சிவப்பு முட்டைக்கோசின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of red cabbage in Tamil?)
சிவப்பு முட்டைக்கோசின் ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What are the nutritional elements of red cabbage in Tamil?)
சிவப்பு முட்டைக்கோஸ் மிகவும் பிரபலமான காய்கறிகாய்கறியாகும். இதில் பைட்டோ கெமிக்கல்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இந்த அத்தியாவசிய கூறுகளில் தியாமின், ரைபோஃப்ளேவின், ஃபோலேட், கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் ஃபைபர்கள் உள்ளன. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த அந்தோசயினின் மற்றும் இன்சோல் உள்ளன, இவை மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது.
சிவப்பு முட்டைக்கோசின் நன்மைகள் என்ன? (What are the benefits of red cabbage in Tamil?)
முட்டைக்கோசுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது (Increases immunity): சிவப்பு முட்டைக்கோசு வைட்டமின்களின் உறைவிடமாகும். அஸ்கார்பிக் அமிலம் சிவப்பு முட்டைக்கோசில் உள்ள ஒரு முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும், மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி கொலாஜன் உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. (மேலும் வாசிக்க- நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன, நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது)
- புற்றுநோயைத் தடுக்கிறது (Prevents cancer): புற்றுநோயைத் தடுக்க சிவப்பு முட்டைக்கோஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சிவப்பு முட்டைக்கோசில் உள்ள உயர் ஆக்ஸிஜனேற்றிகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. சில சமயங்களில், பைட்டோ கெமிக்கல்கள் இருப்பதால் இது ஊதா நிறத்திலும் காணப்படுகிறது. சிவப்பு முட்டைக்கோசு பெண்களுக்கு மார்பக புற்றுநோயைக் குறைக்க உதவுகிறது, என்று தேசிய புற்றுநோய் நிறுவனம் கூறுகிறது.
- உடல் எடையைக் குறைக்கிறது (Reduces body weight): சிவப்பு முட்டைக்கோசில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகளில் உள்ளன. மற்றும் இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளன. நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் எனில், உங்கள் உணவில் சிவப்பு முட்டைக்கோசைச் சேர்க்க வேண்டும். (மேலும் வாசிக்க- உடல் எடை இழப்புக்கு கிவியின் நன்மைகள்)
- எலும்புகளை பலப்படுத்துகிறது (Strengthens the bones): சிவப்பு முட்டைக்கோசில் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பிற முக்கிய தாதுக்கள் உள்ளன, இவை எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றன. இது ஆஸ்டியோபோரோசிஸ், ஆர்த்ரிடிஸ் மற்றும் பிற வகை எழுப்பு தொடர்பான அழற்சியிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கிறது.
- கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது (Maintains healthy eyes): சிவப்பு முட்டைக்கோஸில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. வைட்டமின் ஏ மாகுலர் சிதைவு மற்றும் கண்புரையைத் தடுக்கிறது. கண்ணை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு சிவப்பு முட்டைக்கோஸ் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. (மேலும் வாசிக்க- கண்புரை என்றால் என்ன, கண்புரை ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை)
- அல்சைமர் நோய்க்கு சிகிச்சையளிக்கிறது (Treats Alzheimer): சிவப்பு முட்டைக்கோசு ஏராளமான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது, இது அல்சைமர் நோயைத் தடுக்கிறது.
சிவப்பு முட்டைக்கோசின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of red cabbage in Tamil?)
- முட்டைக்கோசு சாப்பிடுவதால் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. எனினும், இதன் அதிகபடியான உட்கொள்ளல் வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும்.
- சிவப்பு முட்டைக்கோசுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
சிவப்பு முட்டைக்கோசு உட்கொள்வதன் காரணமாக உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரை (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
மும்பையில் சிறந்த பொது மருத்துவர்



