இஞ்சியின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of ginger in Tamil

மார்ச் 31, 2021 Lifestyle Diseases 2552 Views

English हिन्दी Bengali Tamil

இஞ்சி என்பது ஒரு வகையான மூலிகையாகும், இது உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு வகை மசாலாப் பொருளாகும். இஞ்சிக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது ஆன்ட்டி ஃப்பன்ங்கள், ஆன்ட்டி செப்டிக், ஆன்ட்டி பயோடிக் மற்றும் ஆன்ட்டி வைரல் பண்புகளைக் கொண்டுள்ளது. மற்றும் இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. சில சமயங்களில், இஞ்சி ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இன்றையக் கட்டுரையில்,  இஞ்சியின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றியத் தகவல்களைத் தெரிந்து கொள்வோம். 

  • இஞ்சி என்றால் என்ன? (What is ginger in Tamil?)
  • இஞ்சியின் நன்மைகள் என்ன? (What are the benefits of ginger in Tamil?)
  • இஞ்சியின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of ginger in Tamil?)

இஞ்சி என்றால் என்ன? (What is ginger in Tamil?)

இஞ்சி மனித உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஒரு மூலிகையாக அறியப்படுகிறது. இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை உள்ளன. இதில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான், சோடியம், இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் பீட்டா-கரோட்டின் போன்ற தாதுக்களும் உள்ளன, இவை அனைத்தும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

இஞ்சியின் நன்மைகள் என்ன? (What are the benefits of ginger in Tamil?)

இஞ்சிக்கு பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: 

  • செரிமானத்தை மேம்படுத்துகிறது (Enhances digestion): வயிறு தொடர்பான நோய்களைத் தடுக்க இஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரைப்பைப் பிரச்சினைகளை குறைப்பதிலும், குடல் வீக்கத்திலும், இது நன்மை பயக்கிறது.  
  • குடல் இயக்கங்களை மேம்படுத்துகிறது (Improves bowel movements): இஞ்சி வெளியேற்ற அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. குடல் அசைவுகள் தொடர்பான அனைத்து கோளாறுகளுக்கும் சிகிச்சையளிக்க உதவும் மருத்துவ பண்புகள், இஞ்சியில் நிறைந்துள்ளன. இஞ்சியில் உள்ள வைட்டமின் பி 6 வெளியேற்ற அமைப்புக்கு பயனுள்ளதாக அமைகிறது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கிறது.
  • கீல்வாதத்தைத் தடுக்கிறது (Prevents Arthritis): கீல்வாதத்தால் பாதிக்கப்படுபவர்கள், இஞ்சியை தவறாமல் உட்கொள்ள வேண்டும். இதில் அதிக அளவில் கால்சியம் உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது. 
  • இருமலைக் குறைக்கிறது (Reduces cough): இஞ்சி ஒரு இயற்கை வலி நிவாரணியாகும், இது தொண்டை வலியை நீக்குகிறது. மேலும், இருமலையும் குறைக்கிறது. 
  • இதயத்தை பராமரிக்கிறது (Nourishes the heart): இஞ்சி கொழுப்பின் அளவை பராமரிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதன் விளைவாக, இதயம் தொடர்பான நோய்களின் அச்சுறுத்தலைக் குறைக்க முடிகிறது. இஞ்சியில் உள்ள பொட்டாசியம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. (மேலும் வாசிக்க – மாரடைப்பு என்றால் என்ன, அதன் காரணங்கள் யாவை
  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது (Controls Diabetes): இஞ்சி உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் சரியான அளவில் இன்சுலினை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 
  • ஒற்றைத் தலைவலியைத் தடுக்கிறது (Prevents migraine): ஒற்றைத் தலைவலி வலியைக் குறைக்க இஞ்சி தேநீர் மிகவும் நன்மை பயக்கிறது. இதில் உள்ள வைட்டமின்களும், ஊட்டச்சத்து கூறுகளும் ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் அளிக்கிறது. (மேலும் வாசிக்க- ஒற்றைத் தலைவலி என்றால் என்ன, அதற்கான வீட்டு வைத்தியங்கள் யாவை
  • சளியைத் தடுக்கிறது (Prevents cold): இஞ்சியில் உள்ள ஆன்டிவைரல் மற்றும் ஆன்ட்டி ஃப்பன்ங்கள் பண்புகளின் காரணமாக, இது ஐலதோஷத்திற்கு சிகிச்சையளிக்கிறது. 
  • மாதவிடாய் வலியைக் கட்டுப்படுத்துகிறது (Controls Menstrual pain): பெண்களின் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலியைக் குறைக்க இஞ்சி தேநீர் பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள், இந்த வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. 
  • புற்றுநோயைத் தடுக்கிறது (Prevents cancer): புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோயாகும். இஞ்சி புற்றுநோய் செல்களை நீக்கி புற்றுநோயைத் தடுக்கிறது.

இஞ்சியின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of ginger in Tamil?) 

  • சில சமயங்களில், இஞ்சி சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. 
  • இஞ்சிக்கு ஒவ்வாமை உள்ள நபர்களுக்கு நாக்கில் வீக்கம், உடலில் அரிப்பு போன்ற சிக்கல்களை இது ஏற்படுகிறது. அத்தகையவர்கள் இஞ்சி உட்கொள்வதை நிறுத்த வேண்டும். 
  • இஞ்சி தேநீரை 5 கோப்பைக்கு மேல் உட்கொள்ளும் போது, ஒற்றைத் தலைவலி மற்றும் தூக்கமின்மையை ஆகியவை ஏற்படுகின்றன. 
  • உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் இஞ்சியைத் தவிர்க்க வேண்டும். 
  • இஞ்சியை அதிகமாக உட்கொள்வது, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும்.

இஞ்சியின் நுகர்வு காரணமாக உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள். 


டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்

மும்பையில் சிறந்த பொது மருத்துவர்

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர்

சென்னையில் சிறந்த பொது மருத்துவர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha