உங்கள் உடலை எவ்வாறு டிடாக்சிஃபை செய்வது|How to detox your body in Tamil
டிசம்பர் 14, 2020 Lifestyle Diseases 2155 Viewsமனித உடல் ஒரு இயந்திரத்துடன் ஒப்பிடத்தக்கதாகும், எந்தவொரு இயந்திரத்தையும் நல்ல நிலையில் வைத்திருக்க சரியான பராமரிப்பு தேவைப்படுகிறது. அது போல, மனித உடலுக்கும் சரியான பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு தேவைப்படுகிறது. நம் உடலை வெளிப்புறமாக எளிதில் சுத்தம் செய்துவிடலாம். ஆனால், பெரும்பான்மையான மக்களுக்கு உடலின் உட்பகுதியை சுத்தம் செய்வது குறித்து எந்தவொரு விழிப்புணர்வும் இல்லை. மேலும், அவர்கள் அதன் முக்கியத்துவத்தை அறிந்திருக்கவில்லை. இது உடலுக்கு பாதகமாக விளைகிறது, எனவே நம் உடலை டிடாக்சிஃபை செய்வது மிகவும் முக்கியமானதாகும். உங்கள் உடலை எவ்வாறு டிடாக்சிஃபை செய்வது ? உடலில் நடைபெறும் டிடாக்சிஃபிக்கேசன் செயல்முறையானது அவரவர் மேற்கொள்ளும் செயல்களைப் பொறுத்ததே ஆகும். சிலர் தாங்கள் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்து அளவைக் குறித்து சிந்திக்காமல் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்கின்றனர். இதனால் உடலில் தேவையற்ற பொருட்கள் குவிந்துவிடுகிறது. உடலில் இருந்து இத்தகைய பொருட்களை ஒழிக்க டிடாக்சிஃபிக்கேசனை மேற்கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையின் மூலம் உங்கள் உடலை எவ்வாறு டிடாக்சிஃபை செய்வது ? என்பது குறித்த வழி முறைகளைக் காணலாம்.
- நீங்கள் எப்போது உடலை டிடாக்சிஃபை செய்ய வேண்டும்? (When should you detoxify the body in Tamil?)
- டிடாக்சிஃபிக்கேசன் எவ்வாறு செயல்படுகிறது? (How does detoxification work in Tamil?)
- உடலில் இருந்து நச்சுக்களை அகற்றுவதற்கான அவசியம் என்ன? (Why is it necessary to eliminate toxins from the body in Tamil?)
- உங்கள் உடலில் இருந்து தேவையற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை டிடாக்சிஃபை செய்வதற்கான வழி முறைகள் (Ways to help your body detoxify the unwanted and harmful substances in Tamil)
உடலை எப்போது டிடாக்சிஃபை செய்ய வேண்டும்? (When should you detoxify the body in Tamil?)
உடலை டிடாக்சிஃபை செய்யவது மிகவும் அவசியமானதாகும். டிடாக்சிஃபை செயல்முறை குறித்து எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாததால் மக்கள் குழப்பமடைகிறார்கள். ஆண்டுதோறும் ஒரு முறையாவது உடலை டிடாக்சிஃபை செய்வது அவசியம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உடலை டிடாக்சிஃபை செய்வதற்கான வழிகள் குறித்து நிபுணர்களின் ஆலோசனையைப் பெற விரும்பினால் நீங்கள் மருத்துவரை அணுகலாம். ஒரு நபருக்கு மாதவிடாய் சிக்கல், இனப்பெருக்க உறுப்புகளில் சிக்கல், ஒவ்வாமை, நமைச்சல், சோம்பல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்போது டிடாக்சிஃபை செய்வது அவசியமாகிறது.
டிடாக்சிஃபிக்கேசன் எவ்வாறு செயல்படுகிறது? (How to does detoxification work in Tamil?)
டிடாக்சிஃபிக்கேசன் என்பதன் பொருள் இரத்தத்தை சுத்திகரிப்பது என்பதாகும். நம் கல்லீரலில் சில தீங்கு விளைவிக்கும் கூறுகள் தங்கி விடுகின்றன, அவற்றை உடலிலிருந்து அகற்ற வேண்டுமென்றால் இரத்தத்தை சுத்திகரிக்க வேண்டும். தோல், நிணநீர் அமைப்பு, சிறுநீரகம் மற்றும் குடல் போன்ற உள் உறுப்புகள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்குகின்றன. டிடாக்ஸ் செய்வதன் மூலம் இந்த உள்புற உறுப்புகளும் நச்சுகளிலிருந்து விடுபடுகிறது.
உடலில் இருந்து நச்சுக்களை அகற்றுவதற்கான அவசியம் என்ன என்ன? (Why is it necessary to eliminate toxins from the body in Tamil?)
உடலில் குவியும் நச்சுகள் பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, இதனால் நோயெதிர்ப்பு சக்தி குறைகிறது. எனவே, நம் உடலின் ஆரோக்கியத்திற்காக டிடாக்சிஃபை செய்வது அவசியமாகிறது.
உங்கள் உடலை டிடாக்சிஃபை செய்வதற்கான வழி முறைகள் (Ways to help your body detoxify in Tamil)-
இயற்கையாகவே நம் உடலை டிடாக்சிஃபை செய்வதற்கான சில எளிய நடவடிக்கைகள் உள்ளன, அவை :
- காலையில் தண்ணீர் குடிக்க வேண்டும் (Drinking water in the morning): உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதற்கான ஒரு இயற்கை வழி யாதெனில், அதிகாலையில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், நாம் தூங்குவதற்கு முன் தண்ணீரைக் குடிக்கும்போதும், பகல் நேரத்தில் நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலமாகவும், இயற்கையாகவே நச்சுப் பொருள்களை நம் உடலிருந்து அகற்ற இயலும். அதுமட்டுமின்றி அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நச்சுகள் எளிதிள் அகற்றப்படுகின்றன.
- அமைதியான தூக்கம் கொள்ள வேண்டும் (Peaceful sleep): உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அழிக்க, நல்ல தூக்கம் பெறுவது முக்கியமானதாகும். இரவில் நன்றாக தூங்குவது டிடாக்சிஃபிக்கேசனுக்கு உதவுகிறது. எனவே, சராசரியாக ஒரு நபர் 7 முதல் 8 மணி நேரம் அமைதியான தூக்கம் பெறுவது கட்டாயமாகும். ஒரு நல்ல தடையற்ற தூக்கத்தைப் பெறுவது எடையைக் குறைக்கவும், உடலின் உள் உறுப்புகளை டிடாக்சிஃபை செய்யவும் உதவுகிறது.
- குறைந்த அளவில் சர்க்கரைகளை உட்கொள்ள வேண்டும் (Eating less sugar): அதிகளவில் சர்க்கரை உட்கொள்வதனால் உடலுக்கு தீங்கு விளைகிறது. எனவே, நாம் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் அதிலுள்ள சர்க்கரையின் அளவை சரிபார்த்த பின்னரே உட்கொள்ள வேண்டும். அதிகமாக சர்க்கரை உட்கொள்வதைத் தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். சர்க்கரையை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் அது உடலின் இன்சுலின் அளவையும் மற்றும் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும், சீரான உணவை உட்கொள்வதும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் (Regular exercise): தவறாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இருந்து நச்சுகளை எளிதில் அகற்ற இயலும். உடலை டிடாக்சிஃபை செய்வதற்கு எளிய பயிற்சிகள் (stretching exercises) மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இப்போதெல்லாம், மக்கள் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள், இதனால் அவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய போதிய நேரம் கிடைப்பதில்லை. இவ்வாறு உடற்பயிற்சி செய்யாததல் மக்கள், பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இயலும்.
- கிரீன் டீ குடிக்க வேண்டும் (Drinking Green tea): கிரீன் டீ குடிப்பது உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதற்கு பயனுள்ளதாக அமைகிறது. கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலை டிடாக்சிஃபை செய்ய உதவுகின்றது.
உடலின் டிடாக்சிஃபிக்கேசன் செயல்முறையைப் பற்றிய கூடுதல் தகவல்களை பெற, ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
உங்களுக்கு தகவல் வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். இந்தப் பதிவின் மூலம் நாங்கள் எந்த மருந்தையும் சிகிச்சையையும் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவரால் மட்டுமே அது குறித்து மதிப்புமிக்க ஆலோசனையை வழங்க முடியும்.
மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)
சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)
பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)



