துரியன் பழத்தின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of durian in Tamil

பிப்ரவரி 4, 2021 Lifestyle Diseases 2360 Views

English हिन्दी Tamil

துரியன் என்பது வெப்பமண்டல பகுதிகளில் இயற்கையாக விளையக்கூடிய, அதிக பழக்கூழ் நிறைந்த  ஓவல் வடிவ பழமாகும். மேலும், ஆங்கிலத்தில் பலரும் இதனை “Lord of fruits” என்று அழைக்கின்றனர். இதன் சுவை, கஸ்டர்ட் என்னும் இனிப்பான உணவு வகையின் சுவையை ஒத்தது, என்று மக்கள் கூறுகிறார்கள்.  குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் வாழுகின்ற மக்களால்இதன் சுவைப் போற்றப்படுகிறது. துரியன் பழத்தின் மகத்தான அளவு, நல்ல வாசனை மற்றும் முள் தோல் ஆகியவை, இதனை தனித்துவமாக விளங்கச் செய்கிறது. இது மிகவும் சுவை நிறைந்தது மற்றும் அதிக அளவில் மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள, துரியன் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இன்றையக் கட்டுரையில் துரியன் பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து விளக்குகிறோம்

  • துரியனின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் என்ன? (What is the nutritional importance of durian in Tamil?)
  • துரியன் பழத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of durian in Tamil?)
  • துரியனின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of durian in Tamil?)

துரியனின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் என்ன? (What is the nutritional importance of durian in Tamil?)

துரியன் பழத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சிறந்த ஊட்டச்சத்து கூறுகளும், சிறப்பியல்பு சுவையும் உள்ளது. துரியன் பழம்  வைட்டமின் சி, வைட்டமின்  பி ஆகிய ஊட்டசத்துகளின் உறைவிடமாகும். இதில் வைட்டமின்  பி 6, தியாமின், ரைபோஃப்ளேவின், ஃபோலேட் மற்றும் நியாசின் ஆகியவை உள்ளன. துரியன் பழம்  இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கால்சியம் ஆகிய தாதுக்களை மிதமான அளவில் உள்ளடக்கியுள்ளது. துரியன் பழன் அதன் ஊட்டச்சத்துகளைக் கொண்டு ஆரோக்கிய நலனுக்கான நம்பிக்கைக்குரிய தாக்கங்களை உடலில் ஏற்படுத்துகின்றது. 

துரியன் பழத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of durian in Tamil?)

  • புற்றுநோயைத் தடுக்கிறது (Prevents cancer): துரியன் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம் உடலில் புற்றுநோய் செல்களின் உருவாக்கதைத் தடுக்கிறது.
  • எலும்புகளை பலப்படுத்துகிறது (Strengthens the bones): உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாடுகள் பலவீனமான எலும்புகளுக்கு வழிவகுக்கிறது. இது போன்ற சமயங்களில், எலும்புகளை பலப்படுத்த துரியன் பழம் பயனுள்ளதாக அமைகிறது.
  • சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது (Enhances the skin quality): துரியனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நீர்சத்துகள் உள்ளன. சருமத்தின் வறட்சியைக் குறைப்பதன் மூலம் சருமத்தை மேம்படுத்த இது உதவுகிறது. 
  • தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கிறது (Treats insomnia): தூக்கம் தொடர்பான செயல்பாடுகளிலும், வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் அத்தியாவசியமான செயல்பாட்டை செய்யும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்தை துரியன் பழம் கொண்டுள்ளது. தூக்கமின்மையால் பாதிக்கப்படும்  நபர்களுக்கு, துரியன் பழம் ஒரு டஸிங் மாத்திரையைப் போல் செயல்படுகிறது. (மேலும் வாசிக்க- தூக்கமின்மைக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது)
  • இதயத்தை பலப்படுத்துகிறது (Fortifies the heart): துரியன் பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் உடலில் சேரும்  கொழுப்பின் அளவை பராமரிக்கின்றன. இதனால், இதயத்தை பொருத்தமாக வைத்திருக்க முடிகிறது. 
  • வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது (Enhances metabolism): மலச்சிக்கலைத் தடுக்கும் நார்ச்சத்துகள் துரியன் பழத்தில் இருப்பதால் துரியன் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  • நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது (Strengthens the immune system): வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த துரியன் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றது. இது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உடலுக்கு வலிமை தருகிறது. 

துரியனின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of durian in Tamil?)

  • கர்ப்பிணி பெண்கள் துரியன் பழத்தை உட்கொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.
  • துரியன் பழத்தை அதிகமாக உட்கொள்வதினால் வயிற்று வலி ஏற்படக்கூடும். 
  • துரியன் பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகள் நிறைந்திருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதனைக் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.
  • துரியனின் கட்டுப்பாடற்ற நுகர்வு உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கக்கூடும்.

துரியன் பழத்தை எடுத்துக் கொண்டதன் காரணமாக நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டால், உடனடியாக அருகிலுள்ள பொதுவாக மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.


மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)

டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)

சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha