தோல் இறுக்கத்திற்கான வீட்டு வைத்தியங்கள் | Natural remedies for skin tightening in Tamil
டிசம்பர் 8, 2020 Lifestyle Diseases 1425 Viewsபெரும்பான்மையான பெண்கள் தங்கள் முக மாற்றத்தை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள், எனினும் காலப்போக்கில் முக மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானதாகும். ஒரு நபரின் வயது அதிகரிக்கும் போது, சருமத்தில் சுருக்கங்கள், தோல் தொங்குதல் போன்ற பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக 30 வயதிற்குப் பின்னர் தோல் இயல்பாக மாறத் தொடங்குகிறது. எனினும், நீங்கள் உங்கள் அழகை நீண்ட காலம் பராமரிக்க விரும்பினால், சில இயற்கை வைத்தியங்களைப் பின்பற்ற முயற்சியுங்கள். இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க முடியும். எனவே, இப்பதிவில் தோல் இறுக்கத்திற்கான வீட்டுவைத்தியம் பற்றிக் காண்போம்.
தோலை இறுக்கமாக வைத்திருக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் என்ன? (Natural home remedies for skin tightening in Tamil?)
பின்வருவன, தோல் இறுக்கத்திற்கான வீட்டு வைத்தியங்களாகும், அவை:
- சருமத்தை இறுக்குவதில் வாழைப்பழத்தின் நன்மைகள் – வாழைப்பழத்தில் ஏராளமான வைட்டமின் சி, ஏ, மற்றும் ஈ உள்ளது, இது சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. உங்கள் சருமத்தில் ஏற்பட்டுள்ள வயதின் விளைவைக் குறைக்க விரும்பினால், தினமும் ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர, வாழைப்பழத்தை ஷேக் செய்தும் குடிக்கலாம்.
- நன்மை பயக்கும் சருமத்திற்கான கிரீன் டீ – க்ரீன் டீ இயற்கையாகவே பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது, அவை சருமத்திற்கு நன்மை பயக்கிறது. இது தளர்வான சருமத்தை நீக்குகிறது. இது தவிர, தினமும் க்ரீன் டீ எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைகிறது. கிரீன் டீ சருமத்தைப் பராமரிப்பது மட்டுமல்லாமல் பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
- பச்சை காய்கறிகளின் பயன்பாடு – பச்சை காய்கறிகளில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்திற்கு பயனளிக்கிறது.இவற்றில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் ஏ ஆகியவை வயதாவதினால் பாதிக்கப்படும் தோல்களின் இறுக்கத்திற்கு உதவுகிறது.
- முல்தானி மிட்டி – முல்தானி மிட்டி சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது மற்றும் சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தோல் பருக்கள் மற்றும் முகப்பருக்களை இயற்கையாகவே குணப்படுத்தும் சக்தி வாய்ந்த பொருளாகும். இது தவிர, வெயிலினால் தோல்களில் உண்டாகும் சிக்கலை (tanning) அழிக்கவும் உதவுகிறது. இது தோல் வயதாவதினால் ஏற்படும் விளைவுகளை குறைக்கிறது மற்றும் சுருக்கத்தை நீக்குகிறது. முல்தானி மெட்டியில் ரோஸ் வாட்டர் மற்றும் தேனை கலந்து பேஸ்ட் செய்து சருமத்தில் நன்றாக தடவவும். அதை முகத்தில் 20 நிமிடங்கள் காயவிட்டு. பின்னர் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். (மேலும் படிக்க – முல்தானி மிட்டியின் நன்மைகள்)
- எலுமிச்சை சாற்றின் பயன்பாடு – எலுமிச்சையில் சருமத்திற்கு நன்மை பயக்கும் பல சக்திவாய்ந்த கூறுகள் உள்ளன. இதில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது, இது தோல் சுருக்கத்தை குறைக்கிறது. எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்த, எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்யவும். இந்த செயல்முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்யுங்கள்.
- படிகாரம் ஸ்கின் டைட் – காயம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க ஆலம் (படிகாரம்) பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தை இறுக்கமாக பொருத்துவதற்கு உதவியாக இருக்கிறது. இதில் மாங்கனீசு, மற்றும் அலுமினியம், துத்தநாகம் போன்ற ஆன்டிபார்ஸ்பிரண்ட்ஸ் உள்ளன. படிகாரம் பயன்படுத்த எளிதான வழி. படிகாரக்கலின் ஒரு பகுதியை தண்ணீரில் நனைத்து முகத்தில் மெதுவாக தேய்க்கவும். பின்னர், சிறிது நேரம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.
- காபி பவுடரின் பயன்பாடு – காபியில் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை சருமத்தை இறுக்க உதவுகிறது. சில ஆராய்ச்சிகளின்படி, இது தோல்கள் பழமையாவதின் விளைவைக் குறைக்கிறது. இதைப் பயன்படுத்த, சிறிது தேங்காய் எண்ணெயில் இரண்டு ஸ்பூன் காபி தூள் மற்றும் பழுப்பு சர்க்கரையைக் கலந்து, பேஸ்டை செய்து ஸ்க்ராபின் உதவியுடன் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் விட்டு, பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவவும். (மேலும் படிக்க – காபியின் நன்மைகள் மற்றும் தீமைகள்)
- வைட்டமின் ஈ எண்ணெய் – வைட்டமின் ஈ எண்ணெய் சருமத்தில் ஊட்டச்சத்துக்களைப் பெற உதவுகிறது. இது கண்களைச் சுற்றியுள்ள இருண்ட வட்டங்களை குறைக்க உதவுகிறது. இது சருமத்தின் வயதை அதிகரிக்கும் கொலாஜன், அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் ஈ எண்ணெய்க்கு, பதிலாக மருந்தகத்தில் கிடைக்கும் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலுள்ள எண்ணெயை சருமத்தில் நன்கு தடவி, சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும்.
- தேங்காய் எண்ணெய் – தேங்காய் எண்ணெய் நீண்ட காலமாக தோல் இறுக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய் தளர்வான சருமத்தை இறுக்குகிறது மற்றும் பலைய செல்களைக் கொன்று அவற்றை நீக்குகிறது. இது தவிர, தோல் தொடர்பான பல பிரச்சினைகளை தீர்க்க இது உதவுகிறது. உதாரணமாக, தோல் வெடிப்பிற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. குளிப்பதற்கு முன் இதை உங்கள் முகத்தில் சிறிது அளவு தடவிக் குளிக்கவும். இந்த செயல்முறையை மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்யுங்கள்.
- மீன் எண்ணெய் – சருமத்தில் உள்ள கொலாஜனின் அளவை அதிகரிக்க மீன் எண்ணெய் உதவுகிறது. இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் ageing குறைக்க இயலும். இந்த எண்ணெய் சருமத்தில் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது, இதன் காரணமாக தோல் தளர்வாகாமால் இறுக்கமாகத் தொடங்குகிறது. இதைப் பயன்படுத்த, உங்கள் கையில் சிறிதளவு மீன் எண்ணெயை எடுத்து, குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு உங்கள் முகத்தை நன்றாக மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும் அல்லது ஓர் இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவவும். (மேலும் படிக்க – மீனின் நன்மைகள்)
தோல் தொடர்பான கூடுதல் தகவல்களையும், சிகிச்சையும் நீங்கள் பெற விரும்பினால், குறிப்பிட்ட தோல் நிபுணரைத் (Dermatologist) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
மும்பையில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்
டெல்லியில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்



