பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன | What is Swine flu in Tamil
டிசம்பர் 18, 2020 Chest Diseases 1442 Viewsபன்றிக் காய்ச்சல், என்பது H1N1 என்னும் வைரஸ் தொற்றினால் மனிதர்களுக்கு உண்டாகும் ஒரு கொடிய நோயாகும். 2009 ஆம் ஆண்டில் மனிதர்களிடையே பன்றிக் காய்ச்சல் மிகவும் தீவிரமாக பரவ தொடங்கியது. இந்த நோய் தொற்றின் காரணமாக ராஜஸ்தானில் வசிக்கும் மக்கள் மிகவும் மோசமான நிலையை சந்திக்க நேரிட்டது. மேலும், இதனால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிட்டத்து. இந்த நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவரிடமிருந்து பருவகால மாறுதல்களால் உண்டாகும் காய்ச்சல் போல பரவுவதால், இந்த தொற்றை எளிதில் கண்டறிய முடிவதில்லை. பன்றிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடயே பரப்புவதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் பல வழிமுறைகளை பின்பற்றியது. பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால், தற்போதைய சூழலில் இது ஒரு சாதாரண தொற்றுநோயாக மாறிவிட்டது. இன்றையப் பதிவில், பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன, என்பது குறித்த சில முக்கியமான தகவல்களை அறிவோம்.
- பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன? (What is meant by swine flu in Tamil?)
- பன்றிக்காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of swine flu in Tamil?)
- பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of swine flu in Tamil?)
- பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for swine flu in Tamil?)
- பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பு நடவடிக்கைகள் யாவை? (What are the preventive measures for swine flu in Tamil?)
பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன? (What is meant by swine flu in Tamil?)
பன்றிக்காய்ச்சல் என்பது மனிதர்களுக்கு வைரஸ் தொற்றினால் ஏற்படும் ஒரு வகை தொற்று நோயாகும். மனிதர்களில் பன்றிக்காய்ச்சல் ஏற்படுத்தும் H1N1 எனப்படும் இந்த வைரஸ், பன்றிகளில் காய்ச்சலை ஏற்படுத்தும் H1N1 வைரஸின் துணை வகையோடு ஒப்பீட்ட மரபணு ஒற்றுமையைக் கொண்டுள்ளது. இதனால், இந்த நோய் தொற்றை பன்றிக்காய்ச்சல் என்றழைக்கின்றனர். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இந்த வைரஸ் பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகமாக பரவுகிறது.
பன்றிக்காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of swine flu in Tamil?)
- பன்றிக் காய்ச்சல் பொதுவாக H1N1 என்னும் வைரஸால் ஏற்படுகிறது.
- இந்த வைரஸ் குறிப்பாக பன்றிகளுக்கு ஏற்படுத்தும், அதே பாதிப்புக்களை மனிதர்களுக்கும் ஏற்படுத்துகிறது.
- ஆரோக்கியமான ஒரு நபர் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொள்ளும்போது, இந்த வைரஸ் தொற்று பரவுகிறது.
- மேலும், பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போதும் இருமும்போதும் வைரஸ் பரவுகிறது.
பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of swine flu in Tamil?)
பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள், பெரும்பாலும் சளி (Common cold) அறிகுறிகளைப் போலவே இருக்கின்றன, அவை:
- காய்ச்சல்
- குமட்டல் மற்றும் வாந்தி
- சளி மற்றும் இருமல்
- நாசி நெரிசல் மற்றும் மூக்கில் தீராத சளி ஒழுகுதல்
- தலைவலி
- வயிற்று வலி
- தொண்டை வலி
- உடலில் தடிப்புகள்
- தசை வலி, போன்றவை ஆகும்.
பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for swine flu in Tamil?)
- பாதிக்கப்பட்ட நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
- நோயிலிருந்து விரைவில் மீள நல்ல ஓய்வு மிகவும் முக்கியமாகும்.
- இருமல் மருந்துகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- நோயாளியின் உடல் நீரேற்றமாக (hydrated) இருக்க வேண்டுமாயின் நிறைய திரவங்களை உட்கொள்ள வேண்டும்.
- சில கடுமையான சந்தர்ப்பங்களில் நோயாளிகளுக்கு நரம்பில் நீரேற்றம் (intravenous hydration) கொடுக்க வேண்டியது அவசியமாகிறது, அத்தகைய சமயங்களில் நோயாளிகளுக்கு வைரஸ் தடுப்பு மருந்துகள் மற்றும் முற்காப்பு சிகிச்சை (Prophylactic treatments) தேவைப்படுகிறது.
- ஃப்ளூவிர் மற்றும் வெரினா போன்ற ஆன்டிவைரல் மருந்துகள் உடலில் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிற்பதற்காக வழங்கப்படுகின்றன.
பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பு நடவடிக்கைகள் யாவை? (What are the preventive measures for swine flu in Tamil?)
- ஆறு மாதங்களுக்கும் மேலான அனைத்து குழந்தைகளுக்கும் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும்.
- 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டியது அவசியமாகும்.
- 2 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்கள்ளுக்கும் நாசி தெளிப்பு மருந்து (nasal spray) பயன்படுத்தப்படுகிறது.
- எந்தவொரு தொற்றுநோயையும் தவிர்க்கவும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.
- மக்கள் அதிகமுள்ள நெரிசலான பகுதிகளுக்கு செல்லுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை தொற்று நோய்களை பரப்பும் ஆபத்து மண்டலங்களாகும்.
- உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், அனைவரும் சிறப்பு கவனத்துடன் இருக்க வேண்டும்.
நீங்கள் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)
சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)
பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)



