இலவங்கப்பட்டை தேநீரின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of cinnamon tea in Tamil
மார்ச் 15, 2021 Lifestyle Diseases 1710 Viewsநீங்கள் பல்வேறு வகையான தேநீரை ருசித்திருப்பீர்கள், இவற்றுள் இலவங்கப்பட்டை தேநீர் மருத்துவ குணங்கள் வாய்க்கப் பெற்ற தேநீர் என்று அழைக்கப்படுகிறது. இலவங்கப்பட்டை என்பது ஒரு வகைப் மசாலா ஆகும், இது உணவின் சுவையை அதிகரிக்கிறது மற்றும் இது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடல் எடையைக் குறைத்து செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இலவங்கப்பட்டை தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கட்டுரையின் மூலம், இலவங்கப்பட்டை தேநீரின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து கூறுகிறோம்.
- இலவங்கப்பட்டை தேநீர் என்றால் என்ன? (What is cinnamon tea in Tamil?)
- இலவங்கப்பட்டை தேநீரின் நன்மைகள் என்ன? (What are the benefits of cinnamon tea in Tamil?)
- இலவங்கப்பட்டை தேநீரின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of cinnamon tea in Tamil?)
இலவங்கப்பட்டை தேநீர் என்றால் என்ன? (What is cinnamon tea in Tamil?)
இலவங்கப்பட்டை தேநீர் என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு வகை பானமாகும். இது இலவங்க மரங்களின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பல உடல்நலம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, என்பதை சில ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இலவங்கப்பட்டை பட்டைத் தேநீர் தயாரிப்பது மிகவும் எளிதானதாகும். இலவங்கப்பட்டை தேனீரில் ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன, இவை நோய்களை எதிர்த்துப் போராட நம் உடலுக்கு உதவுகிறது மற்றும் உடலின் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
இலவங்கப்பட்டை தேநீரின் ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What are the nutritional elements of cinnamon tea in Tamil?)
இலவங்கப்பட்டையில் மிகச் சிறிய அளவிலேயே கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. இதில் ஃபைபர், கார்போஹைட்ரேட், இரும்பு மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளன. (மேலும் வாசிக்க – ஃபைபர் குறைபாடு என்றால் என்ன)
இலவங்கப்பட்டை தேநீரின் நன்மைகள் என்ன? (What are the benefits of cinnamon tea in Tamil?)
இலவங்கப்பட்டை தேநீர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அவை:
- நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது (Controls diabetes): இலவங்கப்பட்டை தேநீர் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. டைப் 2 நீரிழிவு நோய்க்கு இது மிகவும் நன்மை பயக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் இலவங்கப்பட்டை தேநீரைக் கட்டாயமாக உட்கொள்ள வேண்டும். (மேலும் வாசிக்க- நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள்)
- உடல் எடையைக் குறைக்கிறது (Reduces body weight): உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனில், இலவங்கப்பட்டை தேநீரை உட்கொள்ள வேண்டும். இதில் குறைந்த அளவிலேயே கொழுப்பு உள்ளது. மேலும், இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
- செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது (Improves the digestive system): இலவங்கப்பட்டை தேநீர் இரைப்பைக் குழாய்க்கு நன்மை பயக்கிறது. இரைப்பை பிரச்சினைகள், மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு, அஜீரணக் கோளாறு போன்ற வயிற்று தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க, இது உதவுகிறது. இலவங்கப்பட்டை பசின்மையைப் போக்கி, பசியை அதிகரிக்கவும் உதவுகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது (Enhances the immunity): நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவங்கப்பட்டை தேநீர் நன்மை பயக்கிறது. இது ஃப்ரீ ரேடிகல்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் ஆன்டிவைரல், ஆன்ட்டி ஃப்பன்ங்கள் மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளும் உள்ளன. (மேலும் வாசிக்க- நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது)
- கொழுப்பைக் குறைக்கிறது (Reduces cholesterol): இலவங்கப்பட்டையில் கிளைசெமிக் மற்றும் லிப்பிட் அளவுகளைப் பாதிக்கும் கூறுகள் உள்ளன. இலவங்கப்பட்டை உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது மற்றும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இது பக்கவாதம் மற்றும் மாரடைப்பின் அபாயத்தை குறைக்கிறது. (மேலும் வாசிக்க- மாரடைப்புக்கான காரணங்கள்)
இலவங்கப்பட்டை தேநீரின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of cinnamon tea in Tamil?)
இலவங்கப்பட்டை தேநீர் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எனினும் சில சமயங்களில், இது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
- இலவங்கப்பட்டை தேநீர் அதிகமாக உட்கொள்வது, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
- இலவங்கப்பட்டை அதிகமாக உட்கொள்வது, கல்லீரல் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
- இலவங்கப்பட்டைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இலவங்கப்பட்டை தேநீரை உட்கொள்ளக்கூடாது. (மேலும் வாசிக்க – கொழுப்பு நிறைந்த கல்லீரலுக்கான காரணங்கள் யாவை)
இலவங்கப்பட்டை தேநீரை உட்கொள்வதன் மூலம், உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
மும்பையில் சிறந்த பொது மருத்துவர்



