யூகலிப்டஸ் எண்ணெயின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of eucalyptus oil in Tamil
மார்ச் 27, 2021 Lifestyle Diseases 1607 Viewsயூகலிப்டஸ் எண்ணெய் அதன் அற்புதமான ஆரோக்கிய நலன்களின் காரணமாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. யூகலிப்டஸ் எண்ணெய், யூகலிப்டஸ் இலைகளிலிருந்து பெறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பாரம்பரியமாக வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரம் தற்போது இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. மேலும், யூகலிப்டஸைக் குறைந்த அளவில் பயிரிடும் சில நாடுகளும் உள்ளன. யூகலிப்டஸ் எண்ணெய் பெரும்பான்மையான, மருத்துவ முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது. இன்றையப் பதிவில், யூகலிப்டஸ் எண்ணெயின் நன்மைகள் பற்றிய முக்கியத் தகவல்களை அறிவோம்.
- யூகலிப்டஸ் எண்ணெய் என்றால் என்ன? (What is eucalyptus oil in Tamil?)
- யூகலிப்டஸ் எண்ணெயின் நன்மைகள் என்ன? (What are the benefits of eucalyptus oil in Tamil?)
- யூகலிப்டஸ் எண்ணெயின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of eucalyptus oil in Tamil?)
யூகலிப்டஸ் எண்ணெய் என்றால் என்ன? (What is eucalyptus oil in Tamil?)
யூகலிப்டஸ் என்பது பச்சை நிற இலைகளைக் கொண்ட உயரமான மரமாகும், இவற்றிலிருந்து யூகலிப்டஸ் எண்ணெயைப் பிரித்தெடுக்கப் பயன்படுகின்றது. யூகலிப்டஸ் எண்ணெயில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன. இது, தோல் தொடர்பான நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
யூகலிப்டஸ் எண்ணெயின் நன்மைகள் என்ன? (What are the benefits of eucalyptus oil in Tamil?)
யூகலிப்டஸ் எண்ணெய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, அவை:
- முடியின் தரத்தை மேம்படுத்துகிறது (Enhances hair quality): யூகலிப்டஸ் எண்ணெய் தலை முடிக்கு நன்மை பயக்கிறது. இது முடியை பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் ஆக்குகிறது. இருப்பினும், இதனை அதிகளவில் பயன்படுத்தக்கூடாது. தலை முடியில் யூகலிப்டஸ் எண்ணெயைப் பயன்படுத்திய பின், தலை முடியை சரியாகக் கழுவ வேண்டும். (மேலும் வாசிக்க- முடி உதிர்வதற்கான காரணங்கள்)
- சருமத்தை மேம்படுத்துகிறது (Enhances skin): யூகலிப்டஸ் எண்ணெய் தோல் தொடர்பான நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கிறது. ரிங்வோர்ம், பருக்கள் மற்றும் சிக்கன் பாக்ஸ் போன்ற தோல் வியாதிகளுக்கு இது பயனுள்ளதாக அமைகிறது.
- நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கிறது (Beneficial for Diabetes): நீரிழிவு நோயாளிகளுக்கு யூகலிப்டஸ் எண்ணெய் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில், இது இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. எனினும், இதனைக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்பட வேண்டும்.
- காய்ச்சலைக் குறைக்கிறது (Reduces fever): இது காய்ச்சல் சிகிச்சையளிக்க பயன்படும் எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது, யூகலிப்டஸ் எண்ணெய் காய்ச்சல் காரணமாக அதிகரிக்கும் உடல் வெப்பநிலையைக் குறைக்க பயன்படுகிறது.
- பற்கள் தொடர்பான வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கிறது (Treats teeth related ailments): யூகலிப்டஸ் எண்ணெய் பாக்டீரியா வளர்ச்சியையும், தொற்றுநோய்களையும் எதிர்க்கிறது. ஈறுகளில் வீக்கம், புழுக்கள் மற்றும் பல்வலி போன்றப் பிரச்சினைகளை சமாளிக்க இது பயனுள்ளதாக இருக்கிறது.
- வயிற்றுப் புழுக்களை ஒழிக்கிறது (Eliminates stomach worms): பெரும்பாலும், குழந்தைகளின் வயிற்றில் புழுக்கள் இருப்பதால் அதிக பிரச்சினைகள் ஏற்படுக்கூடும். யூகலிப்டஸ் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் இதற்கு சிகிச்சையளிக்க முடிகிறது. யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டிவைரல் பண்புகளே இதற்குக் காரணமாகும்.
- முடியில் உள்ள பேன்களை நீக்குகிறது (Removes hair lice): முடி பேன்களை அகற்ற யூகலிப்டஸ் எண்ணெய் பயனுள்ளதாக இருக்கிறது. ஆன்டிவைரல் பண்புகள் இருப்பதால், இது தலை முடியில் பயன்படுத்தப்படுகிறது.
- தசை வலியை நீக்குகிறது (Removes head ache): யூகாலிப்டஸ் உயிர் காக்கும் மூலிகை என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், யூகலிப்டஸ் எண்ணெய் தசை வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. உடல் வலியைப் போக்க யூகலிப்டஸ் எண்ணெயைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் மசாஜ் செய்யவும்.
- நிமோனியாவுக்கு நன்மை பயக்கும் (Beneficial for pneumonia): யூகலிப்டஸ் எண்ணெயில் ஆண்டிசெப்டிக் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் நிறைந்துள்ளன. மார்பில் யூகலிப்டஸ் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது நுரையீரலை சுத்தப்படுத்தி வீக்கத்தைக் குறைக்கிறது. காசநோயின் அறிகுறிகளைக் குறைக்கவும், இது பயனுள்ளதாக அமைகிறது.
- சிறுநீரக கற்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது (Effective for kidney stones): சிறுநீரக கற்கள் மிகவும் தீவிரமான வலியை ஏற்படுத்துகின்றன மற்றும் இவை பாதிக்கப்பட்ட நபரை பலவீனப்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட பகுதியில் யூகலிப்டஸ் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் வலியை நீக்க இயலும். இருப்பினும் வலி அதிகரித்தால், ஒரு மருத்துவரை அணுகவும். (மேலும் வாசிக்க- சிறுநீரக கற்கள் என்றால் என்ன)
யூகலிப்டஸ் எண்ணெயின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of eucalyptus oil in Tamil?)
யூகலிப்டஸ் எண்ணெய் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. எனினும், இதன் அதிகபடியான பயன்பாடு உடலில் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும், அவை :
- யூகலிப்டஸ் எண்ணெய்க்கு ஒவ்வாமை உள்ளவர்கள், இந்த எண்ணெயைப் பயன்படுத்தக்கூடாது.
- யூகலிப்டஸ் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்துவது, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
- முதல் முறையாக யூகலிப்டஸ் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். யூகலிப்டஸ் எண்ணெயைப் பயன்படுத்துவதினால் ஏதேனும் சிரமம் அல்லது முறைகேடுகளை எதிர்கொள்ள நேரிட்டால், உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
யூகலிப்டஸ் எண்ணெயைப் பயன்படுத்துவதன் காரணமாக, உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் எதிர்கொள்ள நேரிட்டால், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
மும்பையில் சிறந்த பொது மருத்துவர்



