வைட்டமின் டி என்றால் என்ன | Vitamin D meaning in Tamil
டிசம்பர் 6, 2020 Bone Health 2580 ViewsEnglish हिन्दी Bengali Tamil العربية
நமது உடலை ஆரோக்கியமாகவும், பொருத்தமாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். உடலைப் ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் டி தேவைப்படுகிறது. ஏராளமான வைட்டமின் டி கூறுகள் சூரிய கதிர்களிடமிருந்து பெறப்படுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வெளிவரும் சூரிய கதிர்களில் அதிகமான வைட்டமின் டி கூறுகள் இருக்கின்றன. இந்த வைட்டமின் டியை உடலில் எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் வளர்ச்சி (metabolism of a body) கோளாறுகள் தொடர்பான பல சிக்கல்களைக் குறைக்க இயலும். உடலை சீரானதாக வைத்திருக்க வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் டி என்றால் என்ன ? என்பது குறித்த விரிவான தகவல்களை இன்றையப் பதிவில் காண்போம்.
- வைட்டமின் டி என்றால் என்ன ? (What is Vitamin D in Tamil?)
- வைட்டமின் டியின் வகைகள் யாவை? (What are the types of vitamin D in Tamil?)
- வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் யாவை? (What are the diseases caused by vitamin D deficiency in Tamil?)
- வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of vitamin D deficiency in Tamil?)
- வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of vitamin D deficiency in Tamil?)
- வைட்டமின் டி குறைபாட்டிற்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments of vitamin D deficiency in Tamil?)
- உடலில் வைட்டமின் டி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? (How to cure vitamin D deficiency in Tamil?)
வைட்டமின் டி என்றால் என்ன ? (What is Vitamin D deficiency in Tamil?)
வைட்டமின் டி உடலுக்கு தேவைப்படும் மிக முக்கியமான ஒரு வகை வைட்டமின் ஆகும். வைட்டமின் டி என்பது புரோஹார்மோன்களின் குழு, இது இரும்பு, துத்தநாகம் (zinc), மெக்னீசியம், கால்சியம், பாஸ்பேட் போன்ற ஊட்டச்சத்துகளை உடலுக்கு அளிக்கிறது. சூரிய ஒளியில் சருமத்தை வெளிபடுத்துவதன் மூலம், உடலில் வைட்டமின் டி உறிஞ்சப்படுகிறது. மேலும், நம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளிலும் வைட்டமின் டி பெருமளவில் இருக்கின்றது.
வைட்டமின் டியின் வகைகள் யாவை? (What are the types of vitamin D in Tamil?)
வைட்டமின் டி இரண்டு வகைப்படும், அவை:
- வைட்டமின் டி 2, இவை தாவரங்களிலிருந்து கிடைக்கின்றன. இது எர்கோகால்சிஃபெரால் என்று அழைக்கப்படுகிறது.
- வைட்டமின் டி 3 (cholecalciferol) இது சருமத்தை சூரிய ஒளியில் வெளிப்படுத்துவதன் மூலம் தோலில் உற்பத்தி செய்யப்படுகிறது.
வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் யாவை? (What are the diseases caused by vitamin D deficiency in Tamil?)
இரத்தத்தில் வைட்டமின் டி அளவு குறைவாக இருப்பதால் பின்வரும் நோய்கள் ஏற்படுகின்றன.
- புற்றுநோய்.
- முதியவர்களின் மூளை பலவீனமாக மாறி அதன் செயல்பாடுகள் குறைகிறது. (மேலும் படிக்க – ஒற்றைத் தலைவலி என்றால் என்ன)
- குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது.
- இதயம் தொடர்பான நோய்கள் ஏற்பட்டு இறப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது.
- எலும்பு தொடர்பான நோய்கள் உண்டாகிறது.
- ரிக்கெட்ஸ் நோய் அபாயம் ஏற்படுகின்றது.
- கர்பம் தரித்தலில் சிரமம் உண்டாகிறது.
வைட்டமின் டி குறைபாட்டிற்கு என்ன காரணம்? (What are the causes of vitamin D deficiency in Tamil?)
- வைட்டமின் டி குறைபாடுகள் பெரும்பாலும் உடல் பருமன் காரணமாக உண்டாகிறது. ஏனெனில், உடல் பருமனாக இருப்பது உடலில் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. (மேலும் படியுங்கள் – உடல் பருமன் என்றால் என்ன, உடல் பருமனாக இருப்பதற்கான காரணம் என்ன)
- முக்கியமாக பி.எம்.ஐ 30ஐ விட அதிகமாக உள்ள நபர்களிடம் வைட்டமின் டி மிகவும் குறைபாடு உள்ளது.
- சருமத்தை சூரிய கதிர்களுக்கு வெளிப்படுத்தாமல் இருப்பதால், உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.
- சிறுநீரகத்தில் வைட்டமின் டி அக்டிவ் ஃப்பார்மாக (active form) மாற்றப்படாவிட்டால், வைட்டமின் டி குறைபாடு உண்டாகிறது.
- செரிமான அமைப்பு வைட்டமின் டியை சரியான அளவில் எடுத்துக் கொள்ளாவிட்டால் பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.
- சிலர் சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்வதினால் அவர்கள் உடலில் அதிக அளவில் வைட்டமின் டி இருப்பது இல்லை. அசைவ உணவில் அதிக அளவில் வைட்டமின் டி இருப்பதே இதற்குக் காரணமாகும்.
- உடலில் வைட்டமின் டி சேர்க்கும் பொருட்களை உட்கொள்ளாது இருத்தலும் வைட்டமின் டி குறைபாட்டிற்கு காரணமாக அமைகிறது.
வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of vitamin D deficiency in Tamil?)
- அடிக்கடி சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுவது.
- அடிக்கடி நோய்வாய்ப்படுவது.
- மன அழுத்தம் உண்டாவது.
- அதிகமாக வியர்ப்பது.
- உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிப்பது.
- தூக்கம் அதிகரித்தல்.
- எலும்புகளில் வலி.
- தசை பலவீனம்.
- சோர்வாக உணர்தல். (மேலும் படிக்க – சோர்வு ஏன் ஏற்படுகின்றது)
வைட்டமின் டி குறைபாட்டிற்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for vitamin D deficiency in Tamil?)
- வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அதோடு வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை எடுக்கவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- வைட்டமின் டி எந்த அளவில் எடுக்க வேண்டும் என்பதை நபரின் அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் தீர்மானிக்கின்றனர்.
- பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்தல், செரிமான அமைப்பில் கோளாறு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால். நீங்கள் மருத்துவரைத் தொடர்பு கொண்டு வைட்டமின் டி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று ஆலோசனை செய்யுங்கள். வைட்டமின் டி மருந்துகளை மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் எடுத்துக் கொள்ளக்கூடாது.
- வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு, மருத்துவர்கள் சில பொதுவான ஆலோசனைகளை வழங்குகினறனர். அவை,
- யோகா மற்றும் உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும்.
- சருமத்தை சூரிய ஒளியில் வெளிபடுத்த வேண்டும்.
- வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- கால்சியம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.
உடலில் வைட்டமின் டி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? (How to cure vitamin D deficiency in Tamil?)
- வைட்டமின் டி அதிகரிக்க சூரிய கதிர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கதிர்கள் சருமத்தில் ஊடுருவி சென்று உடலில் வைட்டமின் டியை அதிகரிக்கிறது.
- வைட்டமின் டி அதிகரிக்க உட்கொள்ள வேண்டிய உணவு பொருள் பின்வருமாறு.
- மீன், சால்மன் மீன், மீனின் கல்லீரல்
- வைட்டமின் டி கொண்ட வேறு சில உணவுப் பொருட்களும் உள்ளன,
- அவை: முட்டை, பன்னீர், காளான், பால், போன்றவை.
- வைட்டமின் டியை திரவமாக உள்ளடக்கியவை உணவுகள் பின்வருவன,
- அவை: ஆரஞ்சு சாறு, தானியங்கள், பால் பொருள்கள் , சோயா பால் போன்றவை.
- உடலை சீராக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், சூரிய ஒளியை சருமத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் வைட்டமின் டி கூறுகள் அதிகரிக்கும்.
- ஏதேனும் நோய் காரணமாக வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், வைட்டமின் டி அதிகரிக்க மருத்துவரை அணுகவும்.
வைட்டமின் டி பற்றிய கூடுதல் தகவல்களையும் சிகிச்சையையும் நீங்கள் பெற விரும்பினால், உடனடியாக பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)
சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)
பெங்களூருவில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)



