ஜாதிபாத்ரியின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of Mace (javitri) in Tamil 

ஏப்ரல் 29, 2021 Lifestyle Diseases 1781 Views

English हिन्दी Tamil

ஜாதிபாத்ரி உணவின் நறுமணத்தை அதிகரிக்க உதவும் ஒரு வகை மசாலா பொருளாகும், இது ஜாவித்ரி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜாதிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். பிற மசாலாப் பொருள்களைப் போலவே, இதிலும் ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் உள்ளன. ஜாதிபாத்ரியின் விதைகள் வெளிர் மஞ்சள்  மற்றும் தங்க நிறத்தில் காணப்படுகின்றன. இது உணவின் சுவையை அதிகரிக்கவும்  பயன்படுகிறது. ஜாதிபாத்ரியில்  ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை பல்வேறு  வகையான கோளாறுகளின் அபாயத்தை குறைக்கிறது. இன்றையப் பதிவில், ஜாதிபாத்ரியின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து விரிவாகக் கூறுகிறோம்

  • ஜாதிபாத்ரியின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் என்ன? (What are the nutritional importance of Mace in Tamil?) 
  • ஜாதிபாத்ரியின் நன்மைகள் யாவை? (What are the benefits of Mace in Tamil?) 
  • ஜாதிபாத்ரியின் பக்க விளைவுகள் யாவை? (What are the side effects of Mace in Tamil?) 

ஜாதிபாத்ரியின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் என்ன? (What are the nutritional importance of mace in Tamil?) 

ஜாதிபாத்ரியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் கே.சி.எல், கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஃபோலேட்  ஆகியவை நிறைந்துள்ளன.  மேலும் நியாசின், பைரிடாக்சின், ரைபோஃப்ளேவின், தியாமின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் ஜாதிபாத்ரியில் காணப்படுகின்றன. இதில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் ஆகிய தாதுக்களும் உள்ளன.

ஜாதிபாத்ரியின் நன்மைகள் யாவை? (What are the benefits of mace in Tamil?) 

பின்வருவன, ஜாதிபாத்ரியின் ஆரோக்கிய நன்மைகளாகும், அவை: 

  • சருமத்திற்கு நன்மை பயக்கிறது (Beneficial for the skin): தற்போதைய சூழலில் பெரும்பாலும் மக்கள் அனைவரும் தங்கள் சருமத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அழகுபடுத்த நிறைய அழகுசாதன பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள், எனினும் சிறிது நேரத்திற்குப் பிறகு சருமம்  அதன் முந்தைய வடிவத்தை மீண்டும் பெறுகிறது. இந்த  சிக்கலிருந்து விடுபட ஜாதிபாத்ரி உதவுகிறது. ஏனெனில்ஜாதிபாத்ரி இயற்கையாகவே சருமத்தை மேம்படுத்துகிறது. ஜாதிபாத்ரியில் இருக்கும் லிக்னன் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. (மேலும் வாசிக்க- சருமத்திற்கு பாலின் நன்மைகள்
  • தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கிறது (Treats insomnia): தற்போதைய காலகட்டத்தில் தூக்கமின்மை பிரச்சினையால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். தூக்கமின்மை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டமாகும்.  தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்காக ஏராளமான மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள், இருப்பினும் அவர்களால்  தூக்கமின்மை பிரச்சினையிலிருந்து விடுபட முடியவில்லை. எந்தவித மருந்துகளும் பயனளிக்காத போது, தூக்கமின்மைக்கு  சில வீட்டு வைத்தியங்கள் பயனுள்ளதாக அமைகிறது. இத்தகைய சூழளில், ஜாதிபாத்ரி ஒரு நல்ல தீர்வாக கருதப்படுகிறது. ஏனெனில், தூக்கத்தை மேம்படுத்தும் சில பொருட்கள் இதில் உள்ளன. 
  • உடல்  எடையைக் குறைக்கிறது (Reduces body weight): பெரும்பான்மையான மக்கள் தங்களின் உடல் எடை அதிகரிப்பதன்  விளைவாக  ஏற்படும் சிக்கல்கள் குறித்து கவலைப்படுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க ஜாதிபாத்ரி ஒரு நல்ல வீட்டு வைத்தியமாகும். உடலில் குவியும் கெட்டக் கொழுப்புகளை அகற்ற தினசரி நீங்கள் உட்கொள்ளும் உணவுகளில் ஜாதிபாத்ரியைச் சேர்த்து உட்கொள்ளுங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். இது  உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. 
  • கீழ்வாதத்தில் பயனுள்ளதாக இருக்கிறது (Useful for Arthritis): உடலில் உண்டாகும் கால்சியம் குறைபாட்டின் காரணமாக எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இது எலும்பு தொடர்பான பிரச்சினைகளான மூட்டுவலி, கீழ்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற அபாயங்களை அதிகரிக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க  நீங்கள் உட்கொள்ளும்  உணவுகளில் ஜாதிபாத்ரியைப் பயன்படுத்த வேண்டும். ஜாதிபாத்ரியில் உள்ள ஆன்ட்டி அழற்சி பண்புகள் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கின்றன. கீல்வாதத்தின் வலியைப் போக்க ஜாதிபாத்ரி நன்மை பயக்கிறது என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 
  • பசியை அதிகரிக்கிறது (Increases the appetite): செரிமானம்  தொடர்பான பிரச்சினைகளுக்கு  ஜாதிபாத்ரி நன்மை பயக்கிறது. இது வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் பசியை அதிகரிக்கிறது. 
  • கல்லீரலை பராமரிக்கிறது (Nourishes the liver): வெளிப்புற ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் உணவுகளை உட்கொள்வது வயிறு மற்றும் கல்லீரலில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவுகளின் உட்கொள்ளல் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. ஜாதிபாத்ரி  ஆன்ட்டி அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும்  ஆன்ட்டி  ஆக்ஸிடன்டுகளைக் கொண்டுள்ளது. (மேலும்  படிக்க- கல்லீரலில் கொழுப்பு  என்றால் என்ன
  • சளியைத் தடுக்கிறது (Prevents cold): பெரும்பான்மையான மக்கள் குளிர்காலத்தில்  சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குளிர்ச்சியைத் தடுக்க ஜாதிபாத்ரியை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், ஜாதிபாத்ரியில் ஆன்ட்டி அழற்சி பண்புகள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன.
  • சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கிறது (Beneficial for Kidney): சிறுநீரகம் தொடர்பான வியாதிகளுக்கு சிகிச்சையளிக்க  ஜாதிபாத்ரி ஒரு நல்ல மூலிகையாக கருதப்படுகிறது. இதுபோன்ற சிக்கல்களைத் தடுக்க உணவில் ஜாதிபாத்ரியைப் பயன்படுத்துங்கள். 
  • பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நன்மை பயக்கிறது (Beneficial for teeth and gums): பற்களை சரியான முறையில் கவனிக்கவில்லை எனில், ஈறுகள் தொடர்பான பிரச்சினைகள் எழுகின்றன. இது பல  வகையான சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இதற்கு  சிகிச்சையளிக்க  ஜாதிபாத்ரி உதவுகிறது. ஜாதிபாத்ரியில்  ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, அவை பற்களை மேம்படுத்துகின்றன மற்றும் துவாரங்களைத் தடுக்கின்றன. மேலும், புற்றுநோய் உயிரணுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது மற்றும் வாய்வழி புற்றுநோயைத் தடுக்கிறது. (மேலும் வாசிக்க- பற்கள் ஏன் சேதமடைகின்றன

ஜாதிபாத்ரியின் பக்க விளைவுகள் யாவை? (What are the side effects of mace in Tamil?) 

ஜாதிபாத்ரி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது, எனினும் சில சமயங்களில் பின்வரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்: 

  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஜாதிபாத்ரி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 
  • கர்ப்பிணிப் பெண்கள் ஜாதிபாத்ரியை உட்கொள்ளக்கூடாது. மேலும், அதன் நுகர்வு குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்
  • ஜாதிபாத்ரியை உட்கொள்வதினால் உடலில் ஒவ்வாமை ஏற்படும்  நபர்கள், இதனை உட்கொள்ளக் கூடாது.
  • மேலும், குறைந்த அளவில் ஜாதிபாத்ரியை எடுத்துக் கொண்டால் உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. இதன் அதிகப்படியான உட்கொள்ளல் தீங்கு விளைவிக்கக்கூடும். 

ஜாதிபாத்ரியின் நுகர்வு  காரணமாக உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள். 

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல. 


டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்

மும்பையில் சிறந்த பொது மருத்துவர்

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர்

சென்னையில் சிறந்த பொது மருத்துவர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha